காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் அண்மையில் அமைக்கப்பட்ட காவல் சாவடியை அகற்றிடக் கோரி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் மீண்டும் அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் பேருந்து நிலைய வாயில் அருகில் - ஆறுமுகநேரி காவல் நிலையம் சார்பாக, காவல் சாவடி (POLICE BOOTH) ஒன்று - கடந்த மார்ச் மாதம் நிறுவப்பட்டது.
நகரின் வரலாறு மற்றும் பொது மக்களின் உணர்வுகளை கருத்தில்கொண்டு, அந்த காவல் சாவடியை அகற்றிட - நடப்பது என்ன? குழுமம் சார்பாக, காவல்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக, புதிதாக பொறுப்பேற்றுள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) திரு முரளி ரம்பா IPS அவர்களிடம், கடந்த மாதம் நடப்பது என்ன? குழுமம் - நினைவூட்டல் மனு வழங்கியது.
அம்மனு சம்பந்தமாக - ஆறுமுகநேரி காவல்நிலையம் ஆய்வாளர் (பொ) - இன்று நடப்பது என்ன? குழும நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டார். அவ்வேளையில் - பேருந்து நிலையம் வாயிலில் அமைந்துள்ள காவல் சாவடியை - பொது மக்களின் உணர்வுகளை கருத்தில்கொண்டு அகற்றிட - மீண்டும், எழுத்துப்பூர்வமாக - வலியுறுத்தப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜூலை 18, 2018; 10:00 pm]
[#NEPR/2018071802]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|