காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது.
“தொடர்ந்து 7 மாதங்கள் வழக்கை இழுத்தடித்தது நகராட்சி! ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி!!” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமத்தால் 32ஆம் பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
நாம் முந்தைய பாகத்தில் கண்டது போல் - மார்ச் 7, 2016 அன்று சர்வே எண் 278/1B இடத்தில் - எந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் குப்பைகளை கொட்ட, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல கிளை இடைக்கால தடை வழங்கியது.
அந்த வழக்கில் இணைக்கப்பட்டிருந்த இரு எதிர்தரப்பினர் (காயல்பட்டினம் நகராட்சி, தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்) - சமர்ப்பித்த எழுத்துப்பூர்வ வாதங்கள் நிறைவுற்றதாகவும், மே 25, 2017 அன்று இறுதி வாதங்கள் துவங்கும் என்றும் நீதிபதி ஜோதிமணி மற்றும் நிபுணர் உறுப்பினர் பீ.எஸ்.ராவ் அடங்கிய அமர்வு - ஏப்ரல் 10, 2017 அன்று அறிவித்தது. ஆணை இணைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் - மே 25, 2017 அன்று துவங்கி - தொடர்ந்து 7 மாதங்கள் வழக்கினை ஒத்திவைக்க, காயல்பட்டினம் நகராட்சி கோரியது. இது சம்பந்தமான அனைத்து ஆணைகளும் இணைக்கப்பட்டுள்ளன.
காயல்பட்டினம் நகராட்சி கோரிக்கைக்கு இணங்க மே 25, 2017 அன்று விசாரணைக்கு வந்த வழக்கு, ஆகஸ்ட் 11, 2017 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
காயல்பட்டினம் நகராட்சி கோரிக்கைக்கு இணங்க ஆகஸ்ட் 11, 2017 அன்று விசாரணைக்கு வந்த வழக்கு, செப்டம்பர் 13, 2017 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
காயல்பட்டினம் நகராட்சி கோரிக்கைக்கு இணங்க செப்டம்பர் 13, 2017 அன்று விசாரணைக்கு வந்த வழக்கு, அக்டோபர் 30, 2017 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த முறை நிலை அறிக்கை உள்ளதாக காயல்பட்டினம் நகராட்சி தெரிவித்தது
காயல்பட்டினம் நகராட்சி கோரிக்கைக்கு இணங்க அக்டோபர் 30, 2017 அன்று விசாரணைக்கு வந்த வழக்கு, நவம்பர் 16, 2017 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
காயல்பட்டினம் நகராட்சி கோரிக்கைக்கு இணங்க நவம்பர் 16, 2017 அன்று விசாரணைக்கு வந்த வழக்கு, டிசம்பர் 21, 2017 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
டிசம்பர் 21, 2017 அன்று - எழுத்துப்பூர்வ வாதங்கள் 7 மாதங்களுக்கு முன்பே நிறைவுற்ற நிலையிலும், காயல்பட்டினம் நகராட்சி தொடர்ந்து கூடுதல் காலஅவகாசம் கோரிவருவதை கண்ட நீதிபதி எம்.எஸ்.நம்பியார் கோபம் அடைந்தார்.
இது தான் இறுதி வாய்ப்பு என்றும், இரு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும், இல்லையென்றால் காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் - தீர்ப்பாயம் முன்பு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி எம்.எஸ்.நம்பியார் உத்தரவிட்டார்.
இந்நிலையில் - ஜனவரி 3, 2018 அன்று நீதிபதி எம்.எஸ்.நம்பியார் ஓய்வுபெற்றார். அவருக்கு முன்பாகவே, நீதிபதி பி.ஜோதிமணியும் ஓய்வு பெற்றிருந்தார்.
தீர்ப்பாயத்தில் புதிதாக எந்த நீதிபதியும் நியமிக்கப்படாத சூழலில், ஜனவரி 19, 2018 அன்று ஒரு அறிக்கையை - அப்போதைய காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் திரு பொன்னம்பலம், தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில் அவர் வழங்கிய பல்வேறு தகவல்களுக்கு மத்தியில் - 333.26 லட்சத்திற்கு, ஸ்வச் பாரத் திட்டம் கீழ், அரசுக்கு - காயல்பட்டினம் நகராட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், மாநில அளவிலான ஒப்புதல் வழங்கும் குழு (STATE LEVEL SANCTION COMMITEE) - டிசம்பர் 28, 2017 அன்று - அதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளதாகவும், நிர்வாக ஒப்புதலுக்காக (ADMINISTRATIVE SANCTION), காயல்பட்டினம் நகராட்சி காத்திருக்கப்பதாகவும் - என்ற தகவலும் அடங்கியிருந்தது.
இந்த வேளையில் - அனைவருக்கும் ஒரு கேள்வி எழலாம். ஜூலை 1, 2016 அன்று 4 கோடி ரூபாய்க்கான கோரிக்கை வைக்கப்பட்டதே, அது எப்படி 3.3326 கோடி ரூபாயாக மாறியது?
நடந்தது என்னவென்றால் - முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக சாத்தியம் இல்லை என சுட்டிக்காட்டிவந்த (ஆனால் அவ்வாறு தான் அமல்படுத்தப்படவேண்டும் என நகரின் ஜனநாயக விரோத அமைப்பும், அவர்களின் தவறான வழிகாட்டுதலில் செயலாற்றி வந்த நகர்மன்ற உறுப்பினர்களும் சொல்லிவந்த) திட்டம் முற்றிலும் கைவிடப்பட்டது.
டிசம்பர் 28, 2017 தேதிய ஒப்புதல் வழங்கும் உயர்மட்ட குழுவின் (SLSC) கூட்ட நிமிடங்கள் (MEETING MINUTES):-
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜூலை 23, 2018; 8:30 am]
[#NEPR/2018072301]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|