காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது.
“முன்னாள் சேர்மன் எம்.கே.டீ.அபூபக்கர் ஹாஜியின் 60 ஆண்டு கனவு நனவாகிறது!” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமத்தால் 33ஆம் பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
நாம் முந்தைய பாகத்தில் கண்டது போல் - 333.26 லட்சத்திற்கு, ஸ்வச் பாரத் திட்டம் கீழ், அரசுக்கு - காயல்பட்டினம் நகராட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், மாநில அளவிலான ஒப்புதல் வழங்கும் குழு (STATE LEVEL SANCTION COMMITEE) - டிசம்பர் 28, 2017 அன்று - அதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளதாகவும், நிர்வாக ஒப்புதலுக்காக (ADMINISTRATIVE SANCTION), காயல்பட்டினம் நகராட்சி காத்திருக்கப்பதாகவும் - தீர்ப்பாயத்தில், நகராட்சி அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
தமிழக அரசின் உயர்மட்ட குழுவின் ஒப்புதலை தொடர்ந்து - இவ்வாண்டு பிப்ரவரி 7 அன்று, நகராட்சி நிர்வாகத்துறையின் ஆணையர் திரு G.பிரகாஷ் IAS, நிர்வாக ஒப்புதலும் (AS) வழங்கினார். அன்றே - அது நகராட்சி தீர்மானம் (# 1518) மூலம் ஏற்றுக்கொள்ளவும் பட்டது. [தீர்மானம் விபரம் இணைக்கப்பட்டுள்ளது.]
நாம் முந்தைய பாகத்தில் தெரிவித்தது போல், CMA நிர்வாக அனுமதி கொடுத்த புதிய திட்டம், நகராட்சி உறுப்பினர்கள் / அதிகாரிகள் சார்பாக பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்ட திட்டத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது.
எவ்வாறு மாறுபட்டுள்ளது என்பதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் வழங்கும் 4 ஏக்கர் இடத்தில் பயோ காஸ் திட்டம் கொண்டு வர பொருத்தமில்லை; அதற்கு பதிலாக - முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஹாஜி எம்.கே.டி. அபூபக்கர் அவர்கள் பதவி காலத்தில் (3-12-1958), குப்பைக்கிடங்காக பயன்படுத்த ஒப்புதல் கொடுக்கப்பட்டு - 55 ஆண்டு காலமாக அமல்படுத்தப்படாமல் இருக்கும், அரசுக்கு சொந்தமான சர்வே எண் 392/5 இடத்தில், பயோ காஸ் திட்டத்தை கொண்டு வரலாம் என நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் - பரிந்துரைத்திருந்தார்.
ஆனால் அதற்கு உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தனர். இது சம்பந்தமாக நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் கொண்டு வந்த தீர்மானத்தையும், பெருவாரியான உறுப்பினர்கள் - நகரின் ஜனநாயக விரோத அமைப்பின் தவறான வழிகாட்டுதல், தூண்டுதல் பேரில் - நிராகரித்தார்கள்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு - இந்த இடத்தில் பயோ காஸ் திட்டம் அமைய நகர்மன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் கொடுத்திருந்தால், புதிய சாலை அமைக்க வேண்டும் என்ற எந்த புது செலவும் இல்லாமல், அத்திட்டம் அன்றே அமலுக்கு வந்திருக்கும்.
தமிழக அரசு, தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளப்படி - 50.92 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், சர்வே எண் 392/5 இடத்தில் - MICRO COMPOST CENTRE (MCC) அமைக்க - 22-3-2018 அன்று ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்றுவருகின்றன.
5 ஆண்டுகள் காலதாமதம் என்றாலும், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஹாஜி எம்.கே.டி.அபூபக்கர் அவர்களின் 60 ஆண்டுகால கனவு, தற்போது நனவாகி வருகிறது.
இது மட்டும் அல்ல!
[தொடரும்]
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜூலை 23, 2018; 10:30 am]
[#NEPR/2018072302]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|