காயல்பட்டினம் குத்துக்கல் தெரு - முஹ்யித்தீன் பள்ளி அருகில் செயல்பட்டு வரும் ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியம் சார்பில், இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, ஆண்டுதோறும் மீலாது விழா நடத்தப்பட்டு வருகிறது. விழா மேடையிலேயே திருமண உதவித்தொகை, இலவச கத்னா என பல்வேறு சமூக நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதும் வழமையாக நடந்து வருகிறது.
இரண்டாமாண்டாக,, காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்காக இவ்விழா மேடையில் அனுசரணைத் தொகை அறிவிக்கப்பட்டு, இக்ராஃவில் அதனை ஒப்படைக்கும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது.
அந்த அடிப்படையில், கடந்த மாதம் 22, 23 தேதிகளில் ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியம் சார்பில் காயல்பட்டினம் குத்துக்கல் தெருவில் மீலாத் விழா நடத்தப்பட்டு, நிறைவு நாளின்போது, இக்ராஃ மூலம் புதிதாக நான்கு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க அனுசரணைத் தொகையும் அறிவிக்கப்பட்டது.
அத்தொகையை இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மதிடம், ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் நிர்வாகிகளான ஹாஜி சட்னி செய்யித் மீரான், தோல்சாப் மூஸா நெய்னா ஆகியோர் வழங்கிய காட்சி:-
|