"நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும், புற்று நோயால் பாதிக்கப்பட்ட நூறு பேருக்கு, சிகிச்சைக்காக, 1 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லோக்சபாவில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த, மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறியதாவது: நாட்டில், புற்று நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும், புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நூறு பேருக்கு, சிகிச்சைக்காக, 1 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். இந்தத் திட்டம், தற்போது, 21 மாநிலங்களில் உள்ள நூறு மாவட்டங்களில் முதல் கட்டமாக செயல்படுத்தப்படுகிறது.
படிப்படியாக, நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். அதே நேரத்தில், வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள், புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களின் சிகிச்சைக்கான செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்றுக் கொள்ளும்.
இவ்வாறு குலாம் நபி ஆசாத் கூறினார்.
நன்றி:
தினமலர் (13.08.2011) |