[இத்தொடரின் பாகம் 1 யை காண இங்கு அழுத்தவும்]
[இத்தொடரின் பாகம் 2 யை காண இங்கு அழுத்தவும்]
[இத்தொடரின் பாகம் 3 யை காண இங்கு அழுத்தவும்]
2003 - 2004 ஆம் ஆண்டு தமிழக அரசு - மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் - பாதாள சாக்கடை திட்டம்
படிப்படியாக அறிமுகம் செய்யப்படும் என அறிவித்தது. இருப்பினும், தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தகவல்படி மாநிலத்தின் 16
நகரங்களில் மட்டுமே பாதாள சாக்கடை திட்டம் - ஓரளவு - நிறைவுற்றுள்ளது. சுமார் 36 இடங்களில் பாதாள சாக்கடை திட்டம்
அமல்படுத்தப்படுவது வெவ்வேறு நிலைகளில் உள்ளது.
அமல்படுத்தப்படும் ஏறத்தாழ அனைத்து பாதாள சாக்கடை திட்டங்களும் - தமிழ் நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய கண்காணிப்பிலேயே -
அமல்படுத்தப்படுகின்றன. ஒரு சில திட்டங்கள் மட்டும் Chennai Metropolitan Water Supply and Sewerage Board (CMWSSB) மூலமும், ஒரு
சில திட்டங்கள் - உள்ளாட்சி மன்றங்களின் நேரடி கண்காணிப்பிலும், அமல்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் - பல நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்களை அமல்படுத்திய அனுபவத்தின் அடிப்படையில், தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால்
வாரியம், இவ்வாண்டு முக்கிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அவ்வாரியத்தின் நிர்வாக இயக்குனர் ககன்தீப் சிங் பேடி கையெழுத்திட்டு
வெளியான - பிப்ரவரி 9, 2011 தேதியிட்ட - இத்தீர்மானம் பாதாள சாக்கடை திட்டங்கள் குறித்த பல கேள்விகளை எழுப்புகிறது.
2000 - 2010 வரையில் பெறப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் அமைந்துள்ள - இத்தீர்மானம் - பாதாள சாக்கடை திட்டங்களை
அமைக்க எவ்வாறு நகரங்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விஷயம் முதல், தேர்வு செய்தப்பின் எவ்வாறு அத்திட்டம் அமல்படுத்தப்பட
வேண்டும் என்ற விஷயம் வரை - மிக ஆழமாக விவரிக்கின்றது. அத்தீர்மானத்தை - முழுமையாக காண இங்கு
அழுத்தவும்.
அத்தீர்மானத்தின் சாராம்சம் இதோ:
பாதாள சாக்கடை திட்டத்தினை அமல்படுத்த - முதல் கட்டமாக ஆற்றோரம் இருந்த நகரங்கள் சரியான முறையில் தேர்வு செய்யப்பட்டன (NRCP /
NLCP திட்டங்கள்). மேலும் இரண்டாம் கட்டமாக மாவட்டங்களின் தலைநகரங்களும், சென்னையை சுற்றிய ஊர்களும் - சரியான முறையில்
தேர்வுசெய்யப்பட்டன (TNUDP III திட்டம்).
ஆனால் மூன்றாம் கட்டத்தில் - JnNURM திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட நகரங்கள், அவைகளுக்கான Detailed Project Report (DPR) தயார்
என்ற காரணத்திற்க்காக மட்டுமே தேர்வுசெய்யப்பட்டதாக தெரிகிறது. அந்நகர மக்கள் அதனை விரும்பினார்களா, நகர்மன்றத்திற்கு திட்டத்தினை
அமல்படுத்த போதிய பொருளாதார வசதி இருந்ததா, அது அமலுக்கு வந்தப்பிறகு அதற்க்கான கட்டணத்தை கட்ட மக்களுக்கு முடியுமா போன்ற
விஷயங்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை.
இத்திட்டத்தினை 2008 ஆம் ஆண்டு மறு ஆய்வு செய்த முதல்வர் 25 நகரங்களுக்கான இத்திட்டத்தினை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தினை அமல்படுத்தும்போது - ஒவ்வொரு நகரிலும் காணமுடிந்த மக்கள் ஆர்பாட்டங்கள், ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்க்கொள்ள வேண்டி
இருந்த வழக்குகள் - மக்கள் இத்திட்டத்தின் மீது அதிக ஆர்வம் கொள்ளவில்லை என்பதை உணர்த்துகிறது.
இத்திட்டத்திற்காக கடன்வாங்கிய காரணத்தினால் - இதனை அமல்படுத்திய ஏறத்தாழ அனைத்து உள்ளாட்சி மன்றங்களின் நிதி நிலைமையும் மிகவும்
மோசமாகிவிட்டது.
இத்திட்டத்தினால் சாலைகள் முற்றிலும் நாசமடைந்துள்ளன. அவைகளை முழுவதுமாக நிவர்த்திசெய்ய 3000 கோடி ரூபாய் தேவைப்படும். ஆனால் -
அதற்க்கான நிதிவசதி நகர்மன்றங்களிடம் இல்லை.
இத்திட்டம் அமலுக்கு காத்திருக்கும் நகரங்களில் - சாலைகள் புதுப்பிப்பது பல ஆண்டுகள் (சாலையை தோண்ட வேண்டி இருப்பதால்)
தள்ளிப்போடப்படுகின்றன.
இத்திட்டம் ஒரு நகரில் நிறைவேற்றப்பட குறைந்தது 6 வருடங்கள் ஆகும். மேலும் - சாலைகளை புதுப்பிக்க போதிய நிதிவசதி நகர்மன்றங்களிடம்
இல்லாத காரனத்தால், 10 - 12 ஆண்டுகளுக்கு, மக்கள் மோசமான சாலைகளை அனுபவிக்க வேண்டியுள்ளது.
ஒரே ஒப்பந்ததாரர் பல பாதாள சாக்கடை டெண்டர்களை வெல்வதால் - இத்திட்டம் அமல்படுத்தப்படுவது பல நகரங்களில் காலதாமதமாகிறது.
இது நிறைவுக்க வர அதிக காலம் எடுக்கும் திட்டம் என்பதால் - இத்திட்டத்தினை, ஆழமாக, தொடர்ந்து கண்காணிக்கும் திறன் தற்போது நம்மிடம்
இல்லை
இப்பாதாள சாக்கடை திட்டம் - அது அவசியமாக தேவைப்படும் அனைத்து நகரங்களிலும் (நாகர்கோயில் தவிர்த்து) - ஏற்கனவே
நிறைவேற்றப்பட்டுவிட்டது.
சிறு நகரங்களில் இத்திட்டத்தினை அமல்படுத்த முயற்சி செய்வது - அந்நகர மக்களுக்கு மிகவும் அதிகமான பாரத்தினை கொடுக்கும் சூழலை
உருவாக்குகிறது. ஏனெனில் - பெரிய நகரங்களில் அதிக மக்கள் இருப்பதால், திட்டத்தினை பராமரிக்கும் செலவு தலை ஒன்றுக்கு குறைவாக
இருக்கும். ஆனால் சிறு நகரங்களில், மக்கள் தொகை குறைவாக இருப்பதால், ஆகும் நிர்வாக செலவு அனைத்தையும் அம்மக்களே சந்திக்கவேண்டி
இருக்கும். ஆகவே தலை ஒன்றுக்கான கட்டணங்கள் கூடுதலாகவே இருக்கும்.
நஷ்டத்தையும் பார்க்காமல் சில நகர்மன்றங்கள் கட்டணத்தை குறைப்பதால், நகர்மன்றங்கள் பெருத்த நிதி நெருக்கடிக்கு தள்ளப்படுகின்றன.
திட்டத்தினை நிறைவேற்ற நிதி உதவி செய்யும் அரசு, அதனை ஒவ்வொரு ஆண்டும் பராமரிக்க உதவிசெய்யக்கூடாது. பராமரிப்பு செலவுகள் -
வசூலிக்கப்படும் கட்டணங்கள் மூலமும், அரசு பொதுவாக வழங்கும் நிதிக்கொண்டும் - சமாளிக்கப்படவேண்டும்.
மேலே கூறப்பட்ட காரணத்திற்க்காக அரசு - ஐந்து ஆண்டுகளுக்கு தானாகவே முன் வந்து - எந்த புது நகரத்திலும், பாதாள சாக்கடை திட்டத்தினை
அமல்செய்யக்கூடாது. இத்தடையை தொடரவா என ஐந்து ஆண்டுகள் கழித்து, மீண்டும் பரிசீலிக்கவேண்டும்.
வரும் ஆண்டுகளில் எடுத்துக்கொள்ளப்படும் பாதாள சாக்கடை திட்டங்கள், தற்போது அது நிறைவுசெய்யப்பட்டுள்ள நகரங்களின் விடுப்பட்ட பகுதிகளில்
மட்டுமே அமல்படுத்தப்பட வேண்டும்.
இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்படும் நகரங்கள் ௦ - கீழே காணப்படும் முக்கியத்துவம் அடிப்படையில் தேர்வுசெய்யப்பட வேண்டும்.
(1) சமீபத்தில் விரிவாக்கப்பட்ட மாநகராட்சிகளில்
(2) பிற மாநகராட்சிகளில்
(3) (பெரிய) ஆற்றங்கரையோரம் உள்ள - சமீபத்தில் எல்லைகள் விரிவுசெய்யப்பட்ட - மாவட்ட தலைநகர் - நகராட்சிகளில்
(4) (பெரிய) ஆற்றங்கரையோரம் உள்ள - மாவட்ட தலைநகர் - நகராட்சிகளில்
(5) இதர மாவட்ட தலைநகர் - நகராட்சிகளில்
(6) (பெரிய) ஆற்றங்கரையோரம் உள்ள இதர நகராட்சிகளில்
இதுதவிர - இத்திட்டம் அமல்படுத்த முடிவுசெய்துவிட்டால் எவ்வாறு, அதனை அமல்செய்வது என்ற விசயத்தையும் மிக ஆழமாக - இத்தீர்மானம் -
விளக்குகிறது.
இத்தீர்மானத்தை - முழுமையாக காண இங்கு
அழுத்தவும்.
[பாகம் 1] [பாகம் 2] [பாகம் 3]
[தொடரும]
|