திருச்செந்தூரிலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு அரசின் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் NCVT அடிப்படையிலான திட்டத்தில் ஆகஸ்ட் 2011க்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:-
திருச்செந்தூரிலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு அரசின் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் NCVT அடிப்படையிலான திட்டத்தில் ஆகஸ்ட் 2011க்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இன்றைய தேதியில் பல்வேறு தொழிற்பிரிவுகளில் அரசு விதிப்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட தொழிற்பிரிவுகளில் அரசு இனசுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட குறிப்பிட்ட வகுப்பினருக்கான இடங்கள் பின்வருமாறு காலியாக உள்ளன:-
காலியாக உள்ள இடங்கள் நேரடி சேர்க்கை (spot admission) மூலம் நிரப்பப்படுகிறது. தினந்தோறும் நேரடி சேர்க்கை நடைபெறுவதால், விருப்பமும், கல்வித் தகுதியும் உள்ள மாணவர்கள் காலம் தாழ்த்தாமல் திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வருகை தந்து பயிற்சியில் சேரலாம்.
அந்தந்த தேதியில் உள்ள காலியிடங்களைப் பொருத்து இனஒதுக்கீடு அடிப்படையில், முதல்வர் முன்னிலையில் பயிற்சியில் சேரலாம் என அறிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்கள் / வருகை தராதவர்களும் நேரில் வரும்பட்சத்தில் சேர்க்கைக்கு பரிசீலிக்கப்படுவர்.
மேலும் விபரங்களுக்கு,
முதல்வர்,
திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,
(இருப்பு வீரபாண்டியன்பட்டணம்)
என்ற முகவரியிலும், 04639 - 242253 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |