சென்னையை தவிர தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் பாதாள சாக்கடை உட்பட இத்துறை குறித்த அனைத்து திட்டங்களையும் அமல்படுத்தும்
அதிகாரம் கொண்ட அரசு அலுவலகம் - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (TAMIL
NADU WATER SUPPLY AND SEWERAGE BOARD) ஆகும்.
இவ்வாரியம் - இவ்வாண்டு பிப்ரவரி மாதம், ‘பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்துவதில் 10 ஆண்டுகளில் கற்ற பாடம்‘ ‘(LESSONS LEARNT IN
THE IMPLEMENTATION OF UGSS OVER THE PAST 10 YEARS [2000-2010])‘ - என்ற தலைப்பில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. 13 பக்கங்கள்
கொண்ட அத்தீர்மானத்தில், இன்னும் 5 ஆண்டுக்கு, எந்த ஊரிலும் - புதிதாக பாதாள சாக்கடை திட்டங்களை - அமல்படுத்தக்கூடாது என
பரிந்துரைத்துள்ளது. அத்தீர்மானம் விவரிக்கும் கசப்பான, சில தகவல்களை காணும் முன் - 2007ஆம் ஆண்டு இத்திட்டம் - முதன்முதலாக
காயல்பட்டினத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோது நடந்த சில விசயங்களை நினைவுகூர்வது - பொருத்தமாக இருக்கும்.
மே 17, 2007 அன்று காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் பொதுக்குழு கூட்டம், ஜலாலியா
நிக்காஹ் மஜ்லிஸில் வைத்து நடைபெற்றது. அக்கூட்டத்தில் புது நிர்வாகிகள் தேர்வு, கொம்புத்துறை - சிங்கித்துறை என்ற பெயர்களை
பயன்படுத்தப்படுவது ஆகிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதே கூட்டத்தில் நகரில் பாதாள சாக்கடைத் திட்டத்தை அமுல்படுத்துவது
குறித்தும் பேசப்பட்டது.
அப்போது காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி இதோ:
[செய்தி எண்: 966] [17-5-2007] பாதாள சாக்கடைத் திட்டம்:
இத்திட்டத்திற்காக திட்டமிடப்பட்டுள்ள மொத்த செலவு ரூபாய் பத்து கோடி! இத்திட்டம் செயல்படுத்தப்பட உத்தரவு கிடைத்துவிட்டால், மேற்படி
செலவின் 80 சதவிகிதத்தை மத்திய அரசும், 10 சதவிகிதத்தை மாநில அரசும் தரும் என்றும், எஞ்சிய பத்து சதவிகிதத்தை (ரூபாய் ஒரு கோடி
மட்டும்) காயல்பட்டணம் நகராட்சிமன்றம் தரவேண்டும் என்றும் நிலை உள்ளது.
காயல்பட்டணம் நகரம் முழுமையாகத் திட்டமிடப்பட்ட அமைப்பிலான ஒரு நகரமாக இருப்பதால், இங்கு பாதாள சாக்கடைத் திட்டத்தை எந்தச்
சிரமமுமின்றி அமுல்படுத்த இயலும் என இத்துறை சார்ந்த வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டத்தின் மூலம், நகரின் அனைத்துத் தெருக்களிலும் தரைக்கடியில் குழாய் அமைத்து, அதன் மூலம் நகரின் ஒட்டுமொத்த கழிவுநீரையும்
நகருக்கு வெளியே 2 கிலோ மீட்டர் தொலைவில் பெரிய அளவில் கழிவுநீர்த்தேக்கம் அமைத்து, அங்கு தேக்கப்படும் கழிவுநீரை மறுசுழற்சி செய்து,
அதிலிருந்து பெறப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரை விவசாயத்திற்கு அனுப்பவும், எஞ்சிய உரத்தை விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக கழிவுநீர்த்தேக்கம் அமைக்கப்பட தனது பொறுப்பில் 2 ஏக்கர் நிலத்தைத் தர நகர்மன்றத் தலைவர் அல்ஹாஜ் வாவு செய்யிது
அப்துர்ரஹ்மான் தயாராக உள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவும் இருந்தும் இன்று வரை நகர்மன்றத்தின் ஒரு சில உறுப்பினர்கள் (கவுன்சிலர்கள்) இத்திட்டம் செயலாக்கத்தை எதிர்ப்பதால்
இத்திட்டத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்படாமல் உள்ளது என்று கூட்டத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் இது விஷயமாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின், இத்திட்டம் உடனடியாக அமுல்படுத்தப்பட
வேண்டும் என்று கோரி காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை மூலமாக விண்ணப்பிப்பதற்காக, அனைத்து ஜமாஅத்துகளும் தமது
எழுத்துப்பூர்வ அங்கீகாரத்தை எதிர்வரும் மே 26ஆம் தேதிக்குள் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த வாய்ப்பை நழுவ விட்டால், இன்னும் ஒரு வருடத்திற்கு இத்திட்டம் பற்றி எந்தக் கோரிக்கையும் வைக்கவே இயலாது என்ற நிலை
உள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்.
அதனை தொடர்ந்து - இத்திட்டம் குறித்து மக்களின் கருத்து அறிய, அறிவிப்பு ஒன்றினை ஐக்கிய பேரவை வெளியிட்டது. அச்செய்தி அப்போது
காயல்பட்டணம்.காம் இணையத்தளத்தில் இவ்வாறு வெளியாகியிருந்தது:
[செய்தி எண்: 1015] [2-6-2007] காயல்பட்டணத்தில் பாதாள சாக்கடைத் திட்டத்தை அமுல்படுத்துவதில் பொதுமக்களிடையே கருத்தொற்றுமை உள்ளதா
என்பதை ஆய்ந்தறிந்திடும் நோக்கத்தில், பொதுமக்கள் இதுபற்றி எழுத்து மூலம் காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை அலுவலகத்திற்கு
கருத்து தெரிவிக்குமாறு கடந்த 25-05-2007 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் பேரவையால் அறிவிப்புச் செய்யப்பட்டது.
பாதாள சாக்கடைத் திட்டம் பற்றி தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புவோர்:
தலைவர் மற்றும் நிர்வாகிகள்,
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை,
கே.டி.எம்.தெரு, காயல்பட்டணம் - 628 204
என்ற முகவரிக்குத் தொடர்புகொண்டு தங்கள் கருத்துக்களை எழுத்து மூலம் தெரிவிக்கலாம்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்.
அதனை தொடர்ந்து ஜூன் மாதம் 04ஆம் தேதி, இத்திட்டம் குறித்து காயல்பட்டினம் நகராட்சியில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியுற்றது.
அச்செய்தி அப்போது காயல்பட்டணம்.காம் இணையத்தளத்தில் இவ்வாறு வெளியாகியிருந்தது:
[செய்தி எண்: 1023] [4-6-2007] கூட்டத்தில், பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அத்திட்டம் செயல்படுத்துவதில் தடங்கல்
ஏற்பட்டுள்ளது.
பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டு வருவதற்கு ஆதரவாக தலைவர் வாவு செய்யிது அப்துர்ரஹ்மான், உறுப்பினர்கள்: திருத்துவராஜ், ஜாபர்,
செய்தலி ஃபாத்திமா, ஜெய்னம்பு ஆகியோர் வாக்களித்தனர்.
எம்.என்.சொளுக்கு, நகர்மன்ற துணைத்தலைவர் சி.எஸ்.சதக்கத்துல்லாஹ், காசிராஜன், கணேசன் பால்ராஜ், கசாலி மரைக்கார், மெய்தீன்,
தீபா, பரீதா, கிதுரு பாத்திமா ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர்.
எதிர்ப்பு வாக்குகள் அதிகமாக இருந்ததையடுத்து காயல்பட்டணத்தில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்துவதில் நிர்வாக ரீதியாக தடங்கல்
ஏற்பட்டுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்.
நகர்மன்றம் இத்திட்டத்தினை நிராகரித்த பின் - இத்திட்டம் குறித்த பேச்சு மீண்டும் நகரில் எழவில்லை.
இருப்பினும் - சில மாதங்கள் கழித்து - வேறொரு வடிவில் இத்திட்டம் மீண்டும் நகர்மன்ற பார்வைக்கு நுழைந்தது.
[தொடரும்]
செய்தி திருத்தப்பட்டது |