உள்ளாட்சித் தேர்தலை நடத்த, சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் ஆட்சியர்கள் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மாநில தேர்தல் கமிஷனர் பிறப்பித்துள்ள உத்தரவில், "சென்னை ஆட்சியர் தவிர, மற்ற மாவட்டங்களின் ஆட்சியாளர்கள், அந்தந்த மாவட்டத்துக்கான தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஊராட்சிகளின் வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வெளியிடுதல், கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றிய கவுன்சில், மாவட்ட பஞ்சாயத்துகளுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்தல், கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர், ஊராட்சித் ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர், மாவட்ட பஞ்சாயத்துகள் ஆகிய பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்தல் போன்ற பணிகளை ஒருங்கிணைத்து, மேற்பார்வை செய்வர்.
இதுதவிர, தேர்தல் கமிஷன் அவ்வப்போது பிறப்பிக்கும் உத்தரவுகளை செயல்படுத்துவர்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:
தினமலர் (11.08.2011) |