ஸ்ரீராம் இலக்கியக் கழகம் நடத்திய திருக்குறள் விழா 2011 மாணவர் பேச்சுப் போட்டியில் காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் சார்பில் 12 மாணவியர் கலந்துகொண்டனர்.
அதில், அப்பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவி மதுமிதா, எட்டாம் வகுபபு மாணவி முஹம்மத் மஃபாஸா, ஆறாம் வகுப்பு மாணவி கதீஜா நூரிய்யா, ஒன்பதாம் வகுப்பு மாணவி ஹலீமா, பத்தாம் வகுப்பு மாணவி ஆயிஷா ஷுக்ரிய்யா ஆகியோர் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.
அரையிறுதிச் சுற்றில், மாணவி ஆயிஷா ஷுக்ரிய்யா முதலிடம் பெற்றதையடுத்து, 27.08.2011 அன்று சென்னையில் நடைபெறவுள்ள இறுதிச் சுற்றில், நெல்லை மண்டலத்தின் சார்பில் கலந்துகொள்ளவுள்ளார்.
சாதனை மாணவியரை பள்ளி தலைவர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா, தலைமையாசிரியை மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் பாராட்டினர். |