வரும் அக்டோபர் மாதம் - காயல்பட்டினம் நகராட்சி தனது ஐந்து ஆண்டு பதவி காலத்தை பூர்த்தி செய்கிறது. உள்ளாட்சி தேர்தல் மூலம் தேர்வாக உள்ள அடுத்த காயல்பட்டினம் நகராட்சி எவ்வாறு அமைய வேண்டும் என்று நகர மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதனை அறியும் முயற்சியாக காயல்பட்டணம்.காம் மக்களின் கருத்தினை நான் எதிர்பார்க்கும் நகர்மன்றம் - என்ற தலைப்பில் - ஜூன் மாதம் - இணையதளம் மூலம் - கோரியது.
குறிப்பிட்ட நாட்களுக்குள் பெறப்பட்ட அத்தலைப்பிலான சிறப்பு கட்டுரைகள் தற்போது - காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் சிறப்பு கட்டுரைகள் பக்கத்தில் - வெளியிடப்பட்டுள்ளன.
மிகுந்த ஆவலுடனும், சமுதாய அக்கறையுடனும் - தங்கள் கருத்தக்களை, எதிர்பார்ப்புகளை - விலாவாரியாக பகிர்ந்த கொண்ட அனைத்து சிறப்பு கட்டுரை ஆசிரியர்களுக்கும், இணையதள ஆசிரியர் குழு சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் கவிஞர் மற்றும் சமூக ஆர்வலர் கவிமகன் எம்.எஸ். அப்துல் காதர் எழுதிய கட்டுரையினை காண இங்கு அழுத்தவும்
30 ஆண்டுகளாக சமூக விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள - மு.மு.அஹ்மது ஹீஸைன் எழுதிய கட்டுரையினை காண இங்கு அழுத்தவும்
அல்கோபர் (சவுதி அரேபியா) நகரில் பணி புரியும் செய்யது முஹம்மது புஹாரி என்ற முத்துவாப்பா எழுதிய கட்டுரையினை காண இங்கு அழுத்தவும்
மும்பை நகரில் பணிபுரியும் இளந்தென்றல் பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் முஸ்தாக் அஹ்மத் எழுதிய கட்டுரையினை காண இங்கு அழுத்தவும்
பெங்களூரில் பணிப்புரியும் பெங்களூரு காயல் நல மன்ற நிறுவனர்களில் ஒருவரும், அதன் தற்போதைய இணைச் செயலாளருமான கே.கே.எஸ். சேகு முஹம்மது ஸாலிஹ் எழுதிய கட்டுரையினை காண இங்கு அழுத்தவும்
அபுதாபியில் பணிபுரியும் காயல் எம்.இ. முகியதீன் அப்துல் காதர் எழுதிய கட்டுரையினை காண இங்கு அழுத்தவும்
1. Re: நான் எதிர்பார்க்கும் ந... posted byசாளை நவாஸ் (singapore)[12 August 2011] IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 6815
ஒவ்வொரு கட்டுரையும் அற்புதமாக இருந்தது. தொலை நோக்கு சிந்தனையோடு கூடிய கட்டுரை. யாவருக்கும் வாழ்த்துக்கள், அதிலும் கவிமகன் காக்காவின் வரலாற்றோடு கூடிய கட்டுரை சிறப்பாக அமைந்தது. உங்கள் அனைவரின் எழுத்துக்களே என் குரல்.
ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது, இவ்வளவு சீரிய சிந்தனையோடும் தொலைநோக்கு பார்வையுடனும் பெற்ற நம் கயல்பதி ஏனோ ஏதாவது விதத்தில் பின்தங்கியே இருக்கிறது, காரணம் நம்மில் ஒற்றுமையை விட புரிந்துணர்வு இல்லாமையே. மற்ற சமுதாய மக்களை விட ஒரு படி கீழே இருப்பதாகவே உணர்கிறேன். பணமோ கல்வியோ அளவுகோல் அல்ல.
பழையதை மறப்போம் புதியவைகளை உருவாக்குவோம். ஒரு காயல் ஒரே மக்கள் என்ற பண்பாட்டை உருவாக்குவோம். என்னால் கூட உருவாக்க முடியும், அந்த திறன் என்னிடம் இருக்கிறது. அதற்கான முயற்சியில் முன்பே இறங்கிவிட்டேன் என்பதை ஒரு சிலர் புரிந்திருப்பர்.
இந்த எல்லா கட்டுரைகளின் ஒருமித்த கருத்து, நகர்மன்ற உறுப்பினர்களை அந்த அந்த ஜமாஅத் மூலமே தீர்மானிக்க படவேண்டும். தீர்மானிக்கபட்ட உறுப்பினர்கள் ஒரு குழுவாக கூடி ஒருவர்கொருவர் அறிமுகம் செய்து தங்களின் நகர்மன்ற தலைவர் யாராக இருக்கவேண்டும் என்பதை முடிவு செய்யவேண்டும். இங்கே ஒற்றுமையும் கட்டுபடுதலும் மிக முக்கியம். விஷயம் முடிந்தது. நமக்கு நல்லதொரு நகராட்சி தலைவர் கிடைப்பார், நல்ல நல்ல திட்டங்களை வழி நடத்துவார்.
இப்போது நாம் செய்ய வேண்டியது எல்லா ஜமாஅத்களுக்கும் இதை பற்றி விளக்கமாக கடிதம் எழுதுவது. அதை பெருநாள் தொழுகை முடிந்தவுடன் மக்களுக்கு தெரிவித்து அவர்களின் ஒருமித்த ஆதரவை பெறுவது. கடிதத்தை எல்லா ஜமாத்தார்களுக்கும் சேர்ப்பிக்க நான் தயார், கடிதம் எழுதி தர நீங்கள் தயாரா? இன்ஷா அல்லாஹ் எதிர்பார்கிறேன். மாற்று கருத்துக்கள் இருந்தால் வரவேற்கிறேன்.
3. Re:நான் எதிர்பார்க்கும் ந... கனவுகள் நினைவாகட்டும் posted bySalai Sheikh Saleem (Dubai)[13 August 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6825
தம்பி கவிமகனார் காணும் கனவுகள் எல்லாம் அடிப்படியில் செயலாற்றத்தில் இருக்கவேண்டிய ஒரு செயல் திட்டம் தான். தற்போது இருக்கும் அரசியல் சூழ்நிலைகளில் இளைய சமுதாயத்தினரின் வரவு கண்டிப்பாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
நீங்கள் சுட்டிக்காட்டிய எல்லா இளைஜர்கலுமே தகுதியானவர்களே. நாம் காணும் கனவுகளை எப்படி நிஜமாக்குவது? நாமோ பிழைப்பை தேடி நாடு கடந்து நாடு வந்து செய்யும் தொழிலை முதன்மையாக கருத்தில் கொண்டு இருக்கிறோமே - நம்மால் எப்படி முடியும் என்றும் விட்டு விட முடியுமா? அப்படி விட்டு விட்டால் நகர் மன்றம் கொள்ளையர்களின் கூடரமாகிவிடுமே.
இந்த சூழல் இனிமேலும் நமது நகர் மன்றத்திலும் வந்துவிடக்கூடாது, நாம் யார் யாரை நமதூர் நகர் மன்றத்திற்கு விரும்புகிறோமோ அவர்கள் தான் கண்டிப்பாக வர வேண்டும். இந்த முடிவுகளை நாம் தான் எடுக்க வேண்டுமே தவிர, வேறே ஒரு சிலர் தங்களின் பண ஆதிக்கத்தை நிலை நாட்ட நம் யாவரையும் பகடைக்காயாக வைத்து அவர்களின் பதவி மோகத்தையும் பண தாகத்தையும் போக்கி கொள்ள இது ஒன்றும் அரசியல் இல்லை, இது நமக்கு நாமே செய்யும் சமுதாய சேவை.
எனவே இதற்காக சமுதாய தன்னார்வலர்கள் ஒரு சிலர் ஓன்று கூடி ஒவ்வொரு வார்டிலும் யார் யாரை நிறுத்துவது அல்லது போட்டியிடும் வேட்பாளர்களில் யாரை நாம் தேர்ந்து எடுக்க வேண்டும் என்று நம் மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். இதற்க்கு ஊர் ஜமாத்துக்களையும், தன்னார்வ தொண்டு இயக்கங்களையும் நாம் அணுகவேண்டும். இதை நாம் செய்யவிட்டால் யார் செய்யப்போகிறார்கள்?
எனவே இதையே நான் கவிமகனிற்கு ஒரு அழைப்பாய் விடுக்கிறேன். என் அன்பு தம்பி மண்ணின் மைந்தன் சாளை நவாஸ் அவர்கள் பதிவின் படி ஊரில் உள்ள தன்னார்வ தொண்டர்கள், சமுதாய நல்லார்வலர்கள் மற்றும் வெளிநாட்டில் வாழும் நம்மை போன்ற சமுதாயத்தில் அக்கறை கொண்டவர்கள் சேர்ந்து என்ன செய்ய வேண்டும் எப்படி செயலாக்கப்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்யவேண்டும். நான் ரெடி நீங்கள் ரெடியா? இந்த இயக்கத்தில் ஈடுபட யார் யாரெல்லாம் தயாரோ அவர்களுக்கும் இந்த பதிவின் மூலம் அழைப்பு விடுக்கிறேன். பதில் தாருங்கள் ஒன்றிணைவோம் கயவர்களை அடையாளம் காண்வோம், ஊழலற்ற ஒரு உதாரண நகர் மன்றத்தை அமைப்போம். இன்ஷா அல்லாஹ்.
4. தர்மயுத்தம்! posted bykavimagan (dubai)[13 August 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6831
அன்பின் சாளை சலீம் காக்கா அவர்களுக்கு!
நல்லதோர் நகர்மன்றத்தை உருவாக்கும் அனைவரின் விருப்பமும் செயல்திட்டமாக மாறுவதற்கு, தங்களது கருத்தும், அழைப்பும் அடிக்கல் நாட்டி இருக்கிறது. தன்னலமற்ற,நகர்நலம் காக்கும் ஒரு தற்காலிக அமைப்பை உடனடியாக உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகும். மிகுந்த சிரத்தையுடன் தாங்கள் உருவாக்கிய CFFC என்னும் அமைப்பு, நகரின் புற்றுநோய் ஒழிப்புப் பணியில் ஏற்படுத்திய,ஏற்படுத்திக்கொண்டிருக்கும் தாக்கங்களை கண்கூடாகக் கண்டுவருகிறோம்.
அதைப்போல,அமைதிப்புரட்சி அல்லது தர்மயுத்தம் இதுபோன்ற ஏதாவது நல்லபெயரில் ஒரு குழுவை ஆரம்பித்து, தாங்களோ,என்.எஸ்.இ.மஹ்மூத் மாமா, சாளை நவாஸ் காக்கா, அன்பு சகோதரர் ஷமீமுல் இஸ்லாம் போன்றவர்களோ தலைமை ஏற்கும்பட்சத்தில், என்போன்றவர்களின் ஆதரவும்,உழைப்பும்,திட்டம் பூரண வெற்றி அடையும்வரை (இன்ஷா அல்லாஹ்) நிச்சயம் உண்டு.
கால அவகாசம் மிகக் குறைவாக இருக்கும் இந்தச் சூழ்நிலையில் அனைத்து காயலர்களின் கருத்தையும், முதற்கட்டமாக அறிந்தபின்
உடனடியாக களப்பணிகள் துவங்கப்பட வேண்டும்.
அன்பு நண்பர்களே! நான் எதிர்பார்க்கும் நகர்மன்றம் என்ற கட்டுரையில் எதிர்கால நகர்மன்றத் திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற எனது
கருத்து எதையும் பதிவு செய்யாததற்கு காரணம், நல்லவர்கள் பொறுப்பு ஏற்கும் பட்சத்தில்,நல்லபல திட்டங்கள் தானாகவே ஈடேறும் என்ற
நம்பிக்கையில்தான்.
பணபலம் படைத்தவர்கள் ஒவ்வொருமுறையும், தாங்கள் விரும்பும் அல்லது தீர்மானிக்கும் நபர்களை நகர்மன்றத்திற்கு அனுப்பும் ஜனநாயக கேலிக்கூத்து தடுக்கப்பட வேண்டும். நகர மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். எங்களோடு ஒத்த கருத்துடைய மண்ணின் மைந்தர்கள் தயவுசெய்து, இதே பாகத்தில், தங்களது மேலான கருத்துக்களை பதிவுசெய்ய பணிவன்புடன் வேண்டுகிறேன்.
5. Re: நான் எதிர்பார்க்கும் ந... posted byசாளை நவாஸ் (singapore)[13 August 2011] IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 6844
இறைவனின் திருபெயரால்
இதோ ஆரம்பிச்சாச்சு.
கீழே கொடுக்கப்பட்டுள்ள மொத்தம் 18 வார்டுகளில் 15 வார்டுகள் நம் சமுதாய மக்கள் ஆளுமைக்கு உட்பட்டது. ஒவ்வொரு வார்டுகளுக்கு உட்பட்ட ஜமாத்தார்கள் இப்பொழுதே மன்ற உறுப்பினர்கள் யாராக போகும் என்பதை இப்பொழுதே இனம் கண்டு கொள்ளுங்கள். மேலும் உங்கள் ஜமாஅத்தில் நகராட்சி தலைவராக வரும் தகுதி உள்ள பெரியவர்களையும் ஜமாஅத்க்கு பரிசீலனை செய்யுங்கள். இதை படிக்கும் ஒவ்வொரு வெளிநாட்டு வாழ் மற்றும் உள்நாட்டு வாழ் காயலர்களுக்கும் கடமை என நினைத்து செயல்படுங்கள்.
தனிமரம் தோப்பாகாது தான், ஆனால் நான் தோப்பில் தனிமரமாக நிற்கிறேன். ஆதரவு கரம் தாருங்கள். ஊழலற்ற நகராட்சியை உருவாக்குவோம் ஒளிபடைத்த காயலை மெருகேற்றுவோம்.
6 சித்தன் தெரு, ஆசாத் தெரு, அம்பலமரைக்கார் தெரு
7 தீவு தெரு, கீழ நெய்னார் தெரு எண்கள் 30-460, சிங்கிதுறை
8 சொளுக்கார் தெரு, கொச்சியார் தெரு, முத்துவாப்பா தைக்கா தெரு, தேங்காபண்டக சாலை, மாட்டுகுளம், கடற்கரை பூங்கா வடக்கு
9 அப்பாபள்ளி தெரு, மரைக்கார் தெரு
10 அலியார் தெரு, பரிமார் தெரு, சின்ன நெசவு தெரு, காய்தேமில்லத் நகர்
11 கே.டி.எம். தெரு, பெரிய நெசவு தெரு
12 மங்களவாடி, ஓடக்கரை, பூந்தோட்டம், தைக்காப்புரம், வாணியகுடி, மேலநெசவு தெரு, வண்டிமலைச்சி அம்மன் கோயில் தெரு, கண்டிபிச்சை தோட்டம்
13 ஹாஜியப்பா தைக்கா தெரு, ஜெய்லானி நகர், வீரசடாச்சி அம்மன் கோயில் தெரு, விசாலாட்சி அம்மன் கோயில் தெரு, வண்ணாகுடி தெரு
14 லட்சுமிபுரம், அலகாபுரி, ரத்னபுரி
15 பைபாஸ் ரோடு, சீதக்காதி நகர், உச்சிமாகாளியம்மன் கோவில் தெரு, மங்கள விநாயகர் கோயில் தெரு, சிவன் கோயில் தெரு
16 தைக்காதெரு, புதுக்கடை தெரு, மருத்துவர் தெரு
17 குத்துக்கல் தெரு எண்கள் 1-217, காட்டு தைக்கா தெரு
18 முத்தாரம்மன் கோயில் தெரு, சேதுராஜா தெரு, கோமன்புதூர், டி.சி.டபள்யூ காலனி, குருசடி
6. இளைய தளபதி! உணர்ச்சி வசப்படாதீங்க! posted bykavimagan (dubai)[14 August 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6865
அன்பு நண்பர் நவாஸ் அவர்களே!
நீங்கள் தனிமரம் அல்ல! என்னைப்போன்ற ஏராளமான
நெடுமரங்கள் (ஆறடி ஒரு அங்குலம். ஹி..ஹி....) உங்களைச்
சுற்றி இருக்கிறோம். உங்கள் அருமை சகோதரர் சலீம் காக்கா
அவர்களது வழிகாட்டுதலுடன், செயல்திறன்மிக்க ஒரு குழுவை காயலை மையமாகக் கொண்டு,உலகெங்கும் வாழும் உங்களைப்போன்ற சமூக ஆர்வலர்களை ஒருங்கிணைத்து அமைக்கின்ற ஒப்பற்ற பணி துவங்கப்பட்டு
விட்டது. கொஞ்சம் பொறுங்கள். நீங்கள் நினைக்கும் நல்ல
செய்திகள் விரைவில் கிடைக்கும்.
அன்பு நண்பர்கள் ஜியா, குல்குஸ்மா முத்து வாப்பா, CNASH ,
சட்னி செய்யத் மீரான் காக்கா, இன்னும் நகர்நலனில் அக்கரை
கொண்ட அனைத்து நண்பர்களது கருத்தையும் ஆவலுடன்
எதிர்பார்க்கிறோம். உங்கள் ஒவ்வொருக்கும் தனித்தனியாக
மின்னஞ்சல் செய்ய ஆசைதான். காலம் மிகக் குறைவாக
இருப்பதால், தயவுசெய்து உங்களது எண்ணங்களை வேகமாகப் பதிவு செய்யுங்கள். நாம் நினைத்ததை சாதிக்க
வேண்டுமெனில், நமது காயல்பட்டணம்.காம் வலைதளம்
மட்டும் போதாது. இன்னும் ஏராளமான தகவல் தொடர்பு
பணிகள் நம் முன்னர் விரிந்து கிடக்கிறது.
கரம் கோர்ப்போம்! நல்லதொரு நகர்மன்றம் அமைய
பாடுபடுவோம்!!
7. Re: நான் எதிர்பார்க்கும் ந... posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[15 August 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6887
அனைத்து சொந்தங்களின் கருத்துக்களை பார்த்து மிகவும் மகிழ்ச்சி. அனைவர்களும் நன்றாக எழுதியுள்ளார்கள். அதிலும் குறிப்பாக நண்பர் கவிமகன் வழமை போல சூப்பர் ஆக அலசியுள்ளார்.
நானும் எழுதி, பதிவு செய்ய மனம் இல்லாமல் விட்டு விட்டேன். அதில் பலருடைய மனம் புண்படலாம் என்றும், அதை எடிட் பண்ணினால் என் மனம் புண்படும் என்றும் ஒரு சிறிய காரணம்.
நம்முடைய ஒரு பலமே, ஒரு பிரச்சனை என்றால் ஒரே குரலில் ஒன்று கூடுவது தான். பலகீனம், அந்த பிரச்சனையை அப்படியே விட்டுவிடுவதும், மறப்பதும் தான்.. அதாவது ஸ்டார்டிங் ஓகே ஆனால் பினிஷிங் தான் பிரச்சனை. அதை இந்த விசயத்தில் கொஞ்சம் கவனமாக முடிக்கணும்.
நமக்கு நகர் மன்றத்தின் தலைவராக, நல்லவர் வேண்டும். சரி,
நல்லவராக மட்டும் இருந்தால் போதுமா?
போதாது.. நிர்வாக திறமையுள்ளவராக இருக்கணும்.
அதுவும் போதுமா..போதாது..
கொஞ்சம் விசயம் உள்ளவராக, படித்தவராக, டெக்னிகல் விஷயம் உள்ளவராக, சில மொழிகள் தெரிந்தவராக இருக்கணும்.
அதற்கும் மேலாக பொருளாதாரத்தால் தன்னிறைவு பெற்றவராக, மக்கள் சேவையில் விருப்பம் உள்ளவராக, அல்லாஹ்விற்கு பயந்தவராக இருக்கணும்.
இப்படியே அடுக்கிக்கிட்டு போனால் யார் கிடைப்பார்கள் என்று யோசனை வருகிறதா?
என் மனதில் சிலர் உள்ளார்கள்..சொல்லலாம் தானே.
1 . ஹாஜி ராவன்னா அபுல் ஹசன் அவர்கள்..படித்தவர், விசயம் உள்ளவர், பெரிய கம்பனிகளில் மிகப்பெரிய பதவிகள் வகித்தவர், அடிப்படையில் ஒரு கெமிஸ்டு, ஆகவே டெக்னிகல் விசயம் தெரிந்தவர். அதற்க்கு அதிகமாக பொருளாதாரத்தால் நிறைவு பெற்றவர்.
3 . பேராசிரியர் சதக்கு தம்பி அவர்கள்...எல்லாவற்றிலும் நிறைவானவர். படிப்பு, பண்பு, அறிவு etc ...
இப்படி என் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் இவர்கள் சிலர். உங்கள் பகுதியில் பலர் இருக்கலாம்.. பதிவு செய்தால் நல்லது.
இன்னும் பல நல்லவர்கள் இருக்கிறார்கள், குறிப்பாக மரியாதைக்குரிய N.S.E. மஹ்மூத் மாமா அவர்கள், இங்கு கட்டுரை பதிவு செய்து உள்ள சகோ. அஹ்மத் ஹுசைன் அவர்கள், சகோ. M.A.முஹம்மது இப்ராகிம்(48), சகோ. பாலப்பா ஜலாலி, சகோ. L.T.லபீப் அவர்கள்., சகோ. S.K.ஸாலிஹ், புல்லாளி P.M.S. அமானுல்லாஹ், சகோ. கைலானி போன்ற பலர் உள்ளார்கள்.
(இன்னும் பலர் இருக்கின்றார்கள், ஆனால் அவர்கள் எல்லோரும் வெளிநாட்டில் அல்லவா இருக்கிறார்கள்).
ஜமாஅத் மூலம் தேர்வு செய்யணும் என்று பலர் கூறுவதும் சரிதான். நம் ஊரில் எங்கு ஜமாஅத் உள்ளது. யார் ஜமாஅத் சொல்லுவதை கேட்கிறார்கள், எந்த ஜமாஅத் உயிர் ஓட்டமாக இருக்கிறது.
ஒரு குடும்பத்துக்குள் பல பிரிவுகள், பல கொள்கைகள், பல பெருநாட்கள்..அப்பப்பா..
ஒரே தெருவில் 3 , 4 ஜமாஅத்கள் இருக்கின்றன. என்ன குழப்பம் வருமோ... நம்மில் ஒற்றுமை வந்தாலே பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து விடும்.
அரசியல் கட்சிகள் வந்தாலும் அவர்களில் நல்லவர்களை ஆதரிப்பதில் தவறே கிடையாது. எந்த பிரச்சனை இருந்தாலும் அரசியல் சாயம் பூசி சென்றால் தான் அதற்கு விடிவு கிடைக்கும். ஒரு கட்சி உடைய தலைமையில் நகர்மன்றம் இருந்தால், அங்கு எந்த விவகாரம், சங்கடங்கள் வந்தாலும் ஒற்று மொத்த கட்சியுமே உதவிக்கு வரும். ஆகவே அதையும் கவனத்தில் எடுக்கணும்.
அனைத்துக்கும் அதிகமாக நான் விரும்புவது ஒற்றுமையே.. ஒரே குடையில் இருந்து பல நல்லவர்களை தெரிவு செய்து, அவர்களிடம் முன்பே ராஜினாமா கடிதத்தை (சட்டபூர்வமாக செல்லுமா என்று தெரியவில்லை) வாங்கி வைத்துக்கொண்டு மக்கள் பணிக்கு அனுப்பனும்.
தமிழகத்திலேயே..ஏன் இந்தியாவிலே முன்மாதிரி நகராட்சியாக நம் நகராட்சியை உருவாகிக் காட்டனும் என்று ஆசை பலரிடம் உள்ளது, வல்ல ரஹ்மான் அதற்க்கு உறுதுணையாக இருப்பானாக.
சரிங்க, தற்போது உள்ள தலைவர் வாவு. ஷேகு அப்துல் ரஹ்மான் ஹாஜி அவர்களுக்கு என்ன குறைச்சல். நல்லவர் தானே.... விவாதிப்போம்.இன்ஷாஹ் அல்லாஹ்.
9. ஹராம், ஹலால் பிரித்து பார்த்து செயல் பட கூடிய - சேவை மனப்பான்மை உடைய உறுப்பினர்கள் தேவை posted byநட்புடன்... முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[17 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 6938
இப்போது இருக்கும் தலைவருக்கு மாற்றம் தேவை இல்லை - வார்டு உறுபினர்களை நாம் நல்லவர்களாக தேர்ந்தெடுத்தால் போதுமானது (இறை அச்சம் உள்ள) ஹராம், ஹலால் பிரித்து பார்த்து செயல் பட கூடிய - சேவை மனப்பான்மை உடைய உறுப்பினர்கள் தேவை )-( தேவை (கமிசன்) மனப்பான்மை உள்ள உறுப்பினர்கள் தேவை இல்லை.
10. நல்லதோர் காயல் செய்வோம்!. posted bykavimagan (dubai)[18 August 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6957
பத்திரிகையாளர் ஜனாப்.முஸ்தாக் அஹமத் அவர்களே!
உங்களது சீரிய கருத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தது!
தவறு செய்யும் தனவந்தர்களை சரித்திரம் மன்னிக்காது என்ற வரிகள் செல்வந்தர்களை சிந்திக்க வைக்கும். சமூக
மாற்றத்திற்காக, நல்லதோர் காயல் உருவாக களப்பணி
ஆற்றும் இதயங்களுக்கு உங்கள் எழுத்துக்கள் சக்திதரும்.
தொடர்ந்து நமது தளத்தில் எழுதுங்கள். அவலங்கள்
நிறைந்த காயலின் காயங்கள் ஆறும்வரை உங்கள்
சிறப்பான கருத்துக்களால் மருந்து இடுங்கள். தங்களுக்கு
எனது நன்றி கலந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross