[இத்தொடரின் பாகம் 1 யை காண இங்கு அழுத்தவும்]
மத்திய அரசு 2005ஆம் ஆண்டில் Urban Infrastructure Development Scheme for Small & Medium Towns (UIDSSMT) என்ற திட்டத்தை
வகுத்தது. சிறு மற்றும் நடுத்தர நகரங்களுக்கான இத்திட்டத்தினை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு - மாநிலத்தில் உள்ள 49 மூன்றாம் நிலை
நகராட்சிகளுக்கான நகர் மேம்பாட்டு திட்டம் (CITY DEVELOPMENT PLAN [CDP]) தயாரிக்கும் பணியை தனியார்
நிறுவனங்களுக்கு வழங்கியது.
அதனை தொடர்ந்து Infrastructure Professionals Enterprise Private Limited (IPE) என்ற நிறுவனம் காயல்பட்டண நகராட்சி மன்றத்தில்
செப்டம்பர் 21, 2007 அன்றும், பின்னர் மதுரையில் அக்டோபர் 16, 2007 அன்றும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தியது. இறுதியாக 2009 ஆம்
ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அந்நிறுவனம் தனது பரிந்துரையை வெளியிட்டது.
144 பக்கங்கள் கொண்ட அந்த பரிந்துரைகளை முழுமையாக காண இங்கு அழுத்தவும்
30 ஆண்டு கண்ணோட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இவ்வறிக்கை - நகரை சுற்றுலா மையம்மாக்குவது,
வருங்காலங்களில் நகருக்கு தேவையான குடி நீர் வசதி, கழிவு நீர் பராமரிப்பு போன்ற விஷயங்களில் தனது ஆலோசனைகளை வழங்கியது.
பாதாள சாக்கடை திட்டம் குறித்த CDP பரிந்துரை பக்கங்கள்...
கடந்த ஆண்டு (2010) - அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி நடந்த, நகராட்சி மன்றத்தின் அவசர கூட்டத்தில், காயல்பட்டினத்திற்கு என
தயாரிக்கப்பட்ட நகர் மேம்பாட்டு திட்டம் (CITY DEVELOPMENT PLAN [CDP]) விவாதிக்கப்பட்டது. CDP இல்
பரிந்துரைக்கப்பட்ட - கழிவு நீர் (Sewerage) உட்பட பல பரிந்துரைகளை நகர்மன்றம் - அத்தீர்மானம் மூலம் - அங்கீகரித்துள்ளது. தீர்மானத்தை
காண இங்கு அழுத்தவும்
[பாகம் 1]
[தொடரும்] |