[இத்தொடரின் பாகம் 1 யை காண இங்கு அழுத்தவும்]
[இத்தொடரின் பாகம் 2 யை காண இங்கு அழுத்தவும்]
ஜூன் 4, 2007 அன்றும் ஜூலை 29 , 2011 (கடந்த மாதம்) அன்றும் நடந்த கூட்டங்களில் பெரும்வாரியான நகர்மன்ற உறுப்பினர்கள் பாதாள சாக்கடை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், கடந்த ஆண்டு அக்டோபர் 6 அன்று நடந்த கூட்டத்தில் - பாதாள சாக்கடை திட்டத்தை உள்ளடிக்கிய நகர் மேம்பாட்டு திட்டத்தினை (CDP) அங்கீகரித்துள்ளனர். அக்டோபர் 2010 - தீர்மானம், பொதுவாக CDP யை அங்கீகரித்தது; பாதாள சாக்கடை திட்டத்தை நேரடியாக குறிப்பிடவில்லை என அவர்கள் வாதிடலாம்.
ஜூலை 29 அன்று நடந்த நகர்மன்ற கூட்டத்தில் - பாதாள சாக்கடை திட்டம், கீழ்க்காணும் முறையில், கூட்டப்பொருளாக வைக்கப்பட்டது.
பொருள் எண்:12
காயல்பட்டணம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி நகராட்சி நிர்வாக ஆணையர், சென்னை
அவர்களிடமிருந்து வரப்பெற்ற கடிதமும், மேலும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற ஆரம்ப கட்ட சர்வே பணிகளை மேற்கொள்ளவும் இது
தொடர்பாக நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன் நகலுடன், அனுப்பப்பட வேண்டும் எனவும் தெரிவித்து செயற்பொறியாளர், தமிழ்நாடு
குடிநீர் வடிகால் வாரியம், தூத்துக்குடி அவர்களிடமிருந்து வரப்பெற்ற கடிதமும் நகர்மன்றத்தினர் பார்வைக்கு வைக்கப்படுகின்றது.
அலுவலக குறிப்பு
இந்நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்திட மன்றம் அனுமதி வழங்கலாம்.
ஒரு பொருள் நகர்மன்ற தீர்மானத்தை எதிர்பார்த்து கூட்டத்தில் வைக்கப்பட்டால், அத்திட்டத்தில் உள்ள பாதகம், சாதகம் ஆகியவற்றை ஆராய்ந்து,
அது குறித்த இறுதி முடிவினை எடுக்க நகர்மன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். உள்ளூர் மக்களின் தேவை, அதன்
அடிப்படையில் திட்டங்கள் என்பதே - உள்ளாட்சி மன்றங்கள் அமைக்கப்பட்ட முக்கிய காரணமும் ஆகும்.
ஜூலை 29 நடந்த கூட்டம் குறித்து வெளியாகியுள்ள செய்திகள், அரசு - இத்திட்டம் குறித்து ஏற்கனவே
முடிவு எடுத்து விட்டதாகவும், நகர்மன்றத்தின் தீர்மானம் மட்டும் எதிர்பார்க்கப்படுவதாகவும் - நகர்மன்ற ஆணையரை மேற்கோள்காட்டி
தெரிவிக்கின்றன.
அப்போது பேசிய கமிஷனர் கண்ணையா, பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது. எனவே கவுன்சிலர்கள் எதிர்ப்பு
தெரிவித்தாலும் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்றார். அப்போது பேசிய எதிர்ப்பு கவுன்சிலர்கள், எங்களது எதிர்ப்பை தீர்மான புத்தகத்தில்
எழுதிவிடுங்கள் என்றனர். [Tutyonline.net]
இது உண்மையெனில் நகரமன்ற ஆணையரின் விளக்கம் விநோதனமானதாகும்.
மேலும் பெரும்வாரியான உறுப்பினர்கள் எதிர்ப்புக்கு
மத்தியில், இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காயல்பட்டண நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி சென்னை நகராட்சி நிர்வாக ஆணையரிடமிருந்து பெறப்பட்ட கடிதம் - அதனடிப்படையில் பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்ற ஆரம்ப கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. [தினமலர் (02.08.2011)]
18 பேர் கொண்ட அவையில், வெறும் 3 பேரின் ஆதரவில் எவ்வாறு
தீர்மானம் நிறைவேற்றமுடியும் என்பது கேள்விக்குறியே. இது சட்டத்திற்கு முன் நிற்பதும் சந்தேகமே.
[பாகம் 1] [பாகம் 2]
[தொடரும்]
[செய்தி திருத்தப்பட்டது]
|