தி.மு.க., நகரச் செயலரை கொலை செய்ய தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட. திருச்செந்தூர் தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதாராதாகிருஷ்ணன் மீது, மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.ஆறுமுகநேரி நகர தி.மு.க., செயலர் சுரேஷை, கடந்த ஐந்து மாதத்திற்கு முன் கத்தியால் குத்தி கொலை செய்ய தூண்டிய வழக்கில், அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த மே 21, இரவு 10.30 மணிக்கு ஆறுமுகநேரி நகர தி.மு.க., அலுவலத்திற்கு மர்ம நபர்கள் தீவைத்தனர். இது குறித்து நகர செயலர் சுரேஷ் போலீசில் புகார் செய்தார்.
இதேபோல அன்று நள்ளிரவு அங்கு அடைக்கலாபுரம் ரோட்டில் சுரேஷின் தம்பி ராஜேஷ் நடத்திவரும் டாஸ்மாக் பாரில் மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர். இதுகுறித்து, ராஜேஷ் புகார் செய்தார்.
இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தூண்டுதலாக இருந்ததாகக்கூறி, அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,மீது, மேலும் இரு வழக்குகளை ஆறுமுகநேரி போலீசார் தற்போது பதிவு செய்துள்ளனர்.
இதன் மூலம் இந்த ஒரு ஸ்டேஷனில் மட்டும் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. இச்சம்பவங்கள் தொடர்பாக இவரது ஆதரவாளர் ஆல்நாத்தும் கைது செய்யப்பட்டார்.
நன்றி:
தினமலர் (12.08.2011) |