தூத்துக்குடி மாவட்டத்தில் 2011 – 2012ஆம் ஆண்டிற்கான பிறப்பு, இறப்பு சம்பந்தப்பட்ட ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைமைவகித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் பேசியதாவது:-
கிராமப்புறங்களில் பிறப்பு, இறப்பு பதிவுகள், இணையத்தளத்தில் உடனடியாக ஒருவார காலத்திற்குள் முழுமையாக வட்டாட்சியா;களால் பதிவு செய்யப்பட வேண்டும். இது போன்ற பதிவுகள் மற்றும் தகவல்களை நாம் சாpயாக வைத்திருந்தால்தான் அரசின் மூலம் அறிவிக்கப்படும் சமூக நலத்திட்டங்களை விரைந்து சிறந்த முறையில் செயல்படுத்த முடியும்.
எனவே, இப்பணிகள் சார் ஆட்சியர், மற்றும் கோட்டாட்சியர்கள் தனிக் கவனம் செலுத்தி பதிவுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், போதுமான பிறப்பு, இறப்பு பதிவு செய்யும் படிவங்கள் மதுரை அரசு அச்சகத்திலிருந்து பெற மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தெரிவித்தார்.
மேலும், சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அளிக்கப்பட வேண்டிய ஆவணங்களை உடனடியாக அனுப்பிட வட்டாட்சியர்கள் மற்றும் நிர்வாக அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அமிர்தஜோதி, சார் ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான், திருச்செந்தூர் கோட்டாட்சியர் பொற்கொடி, கோவில்பட்டி கோட்டாட்சியர் பொன்னின் செல்வன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் உமா, கோவில்பட்டி சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ரால்ப் செல்வின், தூத்துக்குடி சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ராமையா, வட்டாட்சியர்கள், பேரூராட்சிகளின் நிர்வாக அலுவலர்கள், அங்கன்வாடி திட்ட அலுவலர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். |