நடப்பு ரமழான் மாதத்தை முன்னிட்டு காயல்பட்டினம் குத்பிய்யா மஜ்லிஸில் வழமை போல தினமும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து, குத்பிய்யா மஜ்லிஸின் உள்ளூர் தொலைக்காட்சியான முஹ்யித்தீன் டிவியின் இயக்குனர் ஹாஜி ஜே.எம்.அப்துர்ரஹீம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை பின்வருமாறு:-
புனிதமிக்க ரமழான் மாதத்தை முன்னிட்டு காயல்பட்டினம் குத்பிய்யா மஜ்லிஸில் வழமை போல இவ்வாண்டும் தினமும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
தினமும் காலை 10.30 மணி முதல் 11.00 மணி வரை, மாதிஹுர் ரஸூல் ஸதக்கத்துல்லாஹில் காஹிரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களால் கோர்வை செய்யப்பட்ட வித்ரிய்யா ஓதப்படுகிறது.
தினமும் காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ அவர்களால் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தப்படுகிறது.
தினமும் மதியம் 01.30 மணி முதல் 02.30 மணி வரை, மாதர் மஜ்லிஸ் நடைபெறுகிறது.
தினமும் இரவு 09.00 மணி முதல் 10.30 மணி வரை தராவீஹ் தொழுகை நடத்தப்படுகிறது. ஹாஃபிழ் முஹம்மத் ஹஸன் இர்ஃபான், ஹாஃபிழ் அப்துர்ரஸ்ஸாக் ஆகியோரும், இதர இளம் ஹாஃபிழ்களும் இத்தொழுகையை வழிநடத்துகின்றனர்.
இந்நிகழ்ச்சிகளும், தினமும் இரவு 10.30 மணி முதல் 11.30 மணி வரை காயல்பட்டினம் புதுப்பள்ளியில் நடைபெறும் வித்ரிய்யா மஜ்லிஸும், முஹ்யித்தீன் டிவியில் நேரலை செய்யப்படுகிறது.
இந்நிகழ்ச்சிகளின் ஒலி, ஒளிப்பதிவுகளை, http://www.quthbiyamanzil.org/RamadhanSpecial/RamadhanSpecial2011.php என்ற இணைப்பில் சொடுக்கி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |