திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனனை போலீசார் திடீரென அழைத்துச் சென்றுள்ளனர். அவர் கைது செய்யப்பட்டதாக பரவிய தகவலால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி கந்தன் காலனியில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ஸ்டீபன் சேசுபாலன் தலைமையிலான போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றார்.
தற்போது சிப்காட் காவல் நிலையத்தில் வைத்து அனிதா ராதாகிருஷ்ணனிடம், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி நரேந்திரன் நாயர் விசாரித்து வருகிறார். கொலை வழக்குத் தொடர்பாக அவரை விசாரித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டதாக பரவிய தகவலால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல்:
www.tutyonline.net |