தான்ஸானியா நாட்டில், தாருஸ்ஸலாம் நகரில் காயல்பட்டினத்தைச் சார்ந்தவர்களால் நடத்தப்படும் வணிக நிறுவனம் கார்டெக் தான்ஸானியா லிமிட்டெட். இந்நிறுவனத்தின் சார்பில் 07.08.2011 அன்று நோன்பு துறப்பு - இஃப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டதன் பேரில், காயலர்கள், கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் பகுதியைச் சார்ந்தவர்கள், மும்பை நகரைச் சார்ந்தவர்கள் மற்றும் இலங்கை நாட்டைச் சார்ந்தவர்கள் என சுமார் 70 பேர் கலந்துகொண்டனர்.
அவர்களுக்கு, ஜப்பானிலிருக்கும் காயலர் எம்.ஜே.ஸிராஜ் ஏற்பாட்டில் காயல் கஞ்சி மற்றும் உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டது.
இஃப்தார் நிறைவுக்குப் பின் மஃரிப் தொழுகை அங்கேயே கூட்டாக நிறைவேற்றப்பட்டது.
தகவல்:
M.N.ரிஃபாய் (தீவுத்தெரு),
தான்ஸானியா. |