"தேர்வு எழுதியவர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், திருத்தப்பட்ட தங்களது விடைத்தாள்களைப் பார்ப்பதற்கு உரிமை உள்ளது' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேர்வு எழுதியவர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தங்களது விடைத் தாள்களை கேட்டுப் பெற்று பார்ப்பதற்கு உரிமை உள்ளது என, கடந்த 2009ஆம் ஆண்டு கோல்கட்டா உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து, மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.சி.,), மேற்கு வங்க மாநில மேல்நிலை கல்வி வாரியம், மேற்கு வங்க மாநில உயர்கல்வித் துறை, கல்கத்தா பல்கலைக் கழகம் உள்ளிட்டவை, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தேர்வு எழுதியவர்கள் தங்கள் விடைத் தாள்களைப் பார்ப்பதற்கு, உரிமை உள்ளது என தீர்ப்பளித்தது.
நன்றி:
தினமலர் (10.08.2011) |