செய்தி: டி.சி.டபிள்யு. தொழிற்சாலை குறித்த தந்தி டிவியின் உள்ளது உள்ளப்படி நிகழ்ச்சிக்கு மறுப்பு தெரிவித்து தொழிற்சாலை துணைத்தலைவர் பேட்டி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நாம் தூங்கியது போதும் இனி அவர்களை தூங்க வைக்க வேண்டும்........ posted byA.W.ABDUL CADER BUKHARI (Jaipur)[03 February 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32989
அஸ்ஸலாமு அலைக்கும் எனது அன்பான காயல்சொந்தங்களே!
இது நமக்கு சரியான நேரம் எப்படியெனில் தேர்தலை புறக்கணிப்போம் என பகிரங்கமாக அறிவிக்கலாம் மேலும் நமது KEPA FACE BOOK போன்ற வளைத்தளத்தின் மூலமும் மக்களிடம் ஆதரவை திரட்டலாம்................
நாம் தூங்கியது போதும் இனி அவர்களை தூங்க வைக்க வேண்டும்........
பழைய காயல்பட்டினத்தை நோக்கி ...ஒரு பயணம் ...... posted byMohammed Abdul cader Bukhari (jaipur)[06 December 2013] IP: 223.*.*.* India | Comment Reference Number: 31830
அஸ்ஸலாமு அழைக்கும்
நான் கமண்ட்ஸ் எழுதி பல மாதங்கள் ஆகிவிட்டது . ஆனால் நமதூரின் எல்லா சேதிகளையும் பார்ப்பேன் கமண்ட்ஸ் மட்டும் அடிக்காமல் இருந்தேன். ஆனால் இந்த கட்டுரையை பார்த்தவுடன் எழுதாமல் இருக்க முடிய வில்லை. அப்படி ஒரு அருமையான கட்டுரை 20 வருடத்துக்கு பின்நோக்கி என்னை கொண்டு சென்று விட்டது .
என்ன எழுதுவது என்றே தெரியவில்லை..............
மாஷா அல்லாஹ் உங்களின் இந்த பணி தொடர வாழ்த்துகின்றேன் .
பாரகல்லாஹ். வஸ்ஸலாம்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் posted byA.W.MD Abdul Cader Bukhari (mumbai)[20 December 2012] IP: 120.*.*.* India | Comment Reference Number: 24666
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “
காயல் மாநகர் ஒரு தலைச் சிறந்த ஆலிம் பெருந்தகையை இழந்து விட்டது. வல்ல அல்லாஹ் அலிம் பெருந்தகையின் சிறிய பெரிய பாவங்கள் அனைத்தையும் மன்னித்து அவர்களுக்கு உயர்ந்த சுவர்க்கமான ஜன்னத்துல் ஃபிர்தவுஸை கொடுத்து அருள் புரிவானாக! ஆமீன்.
கண்கள் தேடுது காயலை உள்ளம் வாடுது காயலால் வெற்றி நிச்சியம் இன்ஷா அல்லாஹ்.மிக விரைவில்....... posted byA.W.Md Abdul Cader Bukhari (Mumbai)[28 November 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 24160
பொறுத்து இருந்தது போதும் எத்தனை உயிர்களை பறிக்கொடுத்து விட்டோம்......காயலே விழித்துக் கொள்! அவர்கள் விழிப்பதற்கு முன் ஏனெனில் இது உன்னுடைய நேரம்...........
மச்சான் DCW நீ எங்களுக்கு எதிராக என்ன செய்தாலும் சரி இந்த நாளை நீ குறித்து வச்சுக்கோ....காயலர்கள் வல்ல அல்லாஹ்வின் கிருபைஃயால் ஒன்று கூடிவிட்டோம் இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் உன்னுடைய நாசகர வேளையை அல்லாஹ்வின் உதவிக் கொண்டு முறியெடுப்போம்.இன்ஷா அல்லாஹ்……………………………….
குறிப்பு:
வெளியூர் காயல் சொந்தங்களே!! இது நமக்கு ஒரு நல்ல தருணம் நீங்கள் மறவாமல் நாளை நம் காயல் சந்ததிகளை காப்பாற்ற தயவு செய்து நமது நாட்டின் ஜனாதிபதி,பிரதமர் ஆகியோருக்கு மறவாமல் தந்தி அனுப்புங்கள்......தெரிந்தவர்கள் தெரியாத நம் காயல் சொந்தங்களுக்கு தெரியப்படுத்துங்கள்...............
மறவாதீர்! மறவாதீர்! நாளை தினத்தை மறவாதீர்!
அனுப்புங்கள்! அனுப்புங்கள்! ஜனாதிபதி,பிரதமருக்கு தந்தி அனுப்புங்கள்!
முஸ்தபா மாமாவுக்கு நிகர் அவர்களே !!!!!!என்றால் அது மிகையாகாது..... posted byAW Abdul Cader (Mumbai)[14 September 2012] IP: 114.*.*.* India | Comment Reference Number: 22132
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
முஸ்தபா மாமா அவர்களின் வபாத் செய்தி கேட்டவுடனே மிகவும் அதிர்ச்சியானேன் இது கனவா அல்லது நனவா என்று>>>> அவர்கள் இந்த உலகை விட்டு பிறிந்து விட்டார்கள் என்று என்னால் இன்னும் கூட முழுமையாக நம்ப முடியவில்லை...
இந்த புனித மிகு ரமளான் மாதத்தின் பெருநாளைக் கொண்டாட மும்பையிலிருந்து ஜெய்ப்பூர் சென்றேன் அங்கு மாமாவை பார்த்தவுடன் அவர்கள் எனக்கு முந்தி ஸலாம் சொல்லி மருமகனே! சுகமா என்று விசாரித்து விட்டவுடன் எனது வேளை சம்பந்தமான விஷயங்கள் மற்றும் அதில் உள்ள பிரச்சனைகளையும் சொல்லுக்கொண்டு இருக்கையில் அவர்கள் மருமகனே! கவலைப் படாதே எல்லாம் நன்மைக்கே அல்லாஹ் இதைவிட வேற நல்ல வழியைக் காட்டுவான்... என்று எனக்கு தெரியம் கொடுத்தார்கள்.
அப்படிப்பட்ட நல்ல தூய உள்ளம் படைத்த அந்த மனிதரை ஜக்வாவும் மாமாவின் குடும்பமும் நமதூர் மக்களும் இழந்து நிற்கிறோம்.
வல்ல அல்லாஹ் மாமாவின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவர்களின் தூய சேவை மனப்பானமையை கபூல் செய்து அவர்களின் கேள்வி கணக்கை இலேசாக்கி அவர்களின் மண்ணரையை சுவனத்தின் பூஞ்சோலையாக மாற்றுவானக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்!
இந்த மகத்தான சேவையை பாராட்டியே தீர வேண்டும்........... posted byA.W. Abdul Cader Aalim Bukhari (Mumbai)[04 July 2012] IP: 114.*.*.* India | Comment Reference Number: 19820
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமது ஜாவியா நிரவாகம் மார்க்கத்திற்காக பலவகையில் சேவை ஆற்றி வருகின்றது அல்ஹம்துலில்லாஹ். அதில் மிக உயர்ந்த உன்னதமான சேவைகளில் ஒன்று பிஞ்சு உள்ளங்களில் இந்த கலாச்சார சீரூகேடு நிறைந்துள்ள இந்தக் காலத்தில் மார்க்க சம்பந்தமான விஷயங்களை ஊட்டும் இந்த மகத்தான சேவையை பாராட்டியே தீர வேண்டும்...........
மேலும் இதைப் போன்ற நிகழ்ச்சிகளை நல்ல முறையில் நேரடியாக ஒளிப்பரப்பிய நிர்வாகத்திற்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்......
இதைப் போல வரும்காலங்களில் செவ்வனே செய்யும் படி நிர்வாகத்தை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.. இதைப் போன்ற சேவையை கியாமத் நாள் வரை இக்ஃலாஸுடன் செய்ய அல்லாஹ் தவ்பீஃக் செய்வானாக ஆமீன்.
குறிப்பு::-
பெரியவர்களுக்காகவும் இதைப் போல வகுப்புகள் நடத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக... குர் ஆனை தஜ்வீத் முறையுடன் ஓதக் கற்றுக் கொடுப்பது, மார்க்க சமப்ந்தமான ஒரு சில விஷயங்களை சொல்லிக் கொடுப்பது...
புதயலுங்கோ.......புதயல்………….. காயல்பட்டணத்தில்......... posted byA.W.Abdul Cader Aalim bukhari (Mumbai)[21 February 2012] IP: 114.*.*.* India | Comment Reference Number: 17101
நான் ஒரு காலத்தில் ஆடி ஓடி விளையாடிய படிகளை இத்தனை நாளா காணோமே!!!! எங்கடா போச்சு? என்னடா செய்யலாம் போலிஸ்ல கம்ளயின்ட் ஏதும் கொடுப்போமா…….. என்று சிந்தித்து இருக்கையில் அதை கண்டு பிடித்து காட்டிய சாலிஹ் காக்காவுக்கு ஒரு சல்யூட் போடனும்.
இப்படியே போச்சுன்னு வச்சுகோங்கோ அவ்வளவு தான் காயல்பட்டணம் புதையல் பட்டணம் என்று பெயர் மாற........ அல்லாஹ் பாதுகாப்பானாக!!!! ஆமீன்
சிறந்த சிந்தனையாளரும், சுயநலமற்றவரும் ஜாவியத்துல் ஃபாஸிய்யதுஷ் ஷாதுலிய்யாவின் தலைவரும் எங்கள் கரூர் டிரேடர்ஸ் கம்பெனியின் ஸ்தாபகரில் ஒருவரும், எங்கள் குடும்பத்தின் மறியாதைக்குறிய மூத்த உறுப்பினரும் எங்கள் நெஞ்சங்களில் என்றும் நிலைத்திருக்கும் எங்கள் பாசத்திற்குறிய தந்தை அல்ஹாஜ் N.K. மிஸ்கீன் ஸாஹிப் அவர்கள், கடந்த 14.02.2012 அன்று அதிகாலை 3.55 மணிக்கு தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் (அழியும் உலகை விட்டும் நிலையான உலகத்தின் அளவில்) சேர்ந்துவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்........
அன்னாரின் ஜனாஸா அன்று மாலை 5.00 மணிக்கு காயல்பட்டினம் மொகுதூம் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க நாங்கள் யாவரும் ஸபூர் செய்துகொண்டோம். தங்களது இரங்கல் செய்திக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளைப பொருத்தருளி, அவர்களின் மண்ணறை வாழ்வை ஒளிமயமான சுவனப் பூஞ்சோலையாக்கி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாகத் தந்தருள தாங்கள் யாவரும் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் சொல்லாலோ, செயலாலோ ஏதேனும் தீங்கு விளைவித்திருந்தால், அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுவதுடன், அதற்காக நாங்கள் யாவரும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.
அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் கடன் வைத்திருந்தால், அவர்களின் மக்களாகிய நாங்கள் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்கிறோம். அக்கடனை நாங்கள் திருப்பித்தரும் பொருட்டு, இந்த மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
மனமார்ந்த துஆக்களுடன்,
மர்ஹீம் அவர்களின் மக்கள்கள்
கரூர் டிரேடர்ஸ்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross