செய்தி: பல்வேறு போட்டிகளில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவியருக்கு சிறப்பிடங்கள்! மாநில அளவிலான போட்டிக்கு ஒரு மாணவி தகுதி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...வாழ்த்துக்கள் posted byShahul Jiffri Kareem (Chennai)[20 November 2016] IP: 171.*.*.* India | Comment Reference Number: 44905
ஹாஜி அக்பர் ஷா அவர்களின் தலைமையில் நடைபெறும் இப்பள்ளிக்கூடம் மென் மேலும் சிறப்புடன் செயல்பட்டு காயல் மாநகரத்துக்கு சேவை ஆற்றிட வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்...
Re:... posted byShahul Jiffri Kareem (Chennai)[14 May 2016] IP: 122.*.*.* India | Comment Reference Number: 43770
السلام عليكم ورحمة الله وبركاته
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகள், பாவங்களைப் பொறுத்து, அன்னாரின் மண்ணறை என்னும் கப்ரு வாழ்க்கையை ஒளிமயமாக - பிரகாசமாக – வசந்தமாக - சுவன பூங்காவனமாக ஆக்கி, நாளை மறுமையில் ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் அல் அஃலா’ எனும் உயரிய சுவனபதியில் சேர்த்தருளி சிறப்பான நல்வாழ்க்கையை அளிப்பானாக ஆமீன்.
அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய மேலான ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை , நற்கூலியை நல்குவானாக!
செய்தி: அதிமுக தூ-டி மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் விடுவிப்பு! புதிய மாவட்ட செயலாளராக எஸ்.பி.சண்முகநாதன் நியமனம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...தலை(வி)வலி posted byShahul Hameed (London)[17 June 2013] IP: 149.*.*.* United Kingdom | Comment Reference Number: 28100
அவருக்கு போஸ்டர் அடித்த அம்மையாருக்கும் தலைவலிதான் ... ஆசை தோசை அப்பளம் வடை...
செய்தி: இரண்டாவது குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் அடிக்கல் நாட்டி சிறப்புரை! திரளான பொதுமக்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தைரியம் வேண்டும் posted byShahul Jiffri Kareem (London)[11 March 2013] IP: 149.*.*.* United Kingdom | Comment Reference Number: 26191
அமைச்சர் பேசின இந்த செய்தியை ஏன் வெளியிடவில்லை? உண்மையை சொல்ல தைரியம் இல்லையா????
"ஐக்கியப் பேரவை நிர்வாகிகள், அதன் அலோசகர் மனித நேயர் ஹாஜி. S. அக்பர்ஷா, நகர்மன்ற முன்னாள் தலைவர் A.வஹிதா ஆகியோரின் பொதுசேவை ஈடுபாட்டை பாராட்டிய அமைச்சர், இவ்வூர் முன்னேற்றத்துக்கு இவர்கள் தம்மிடம் அடிக்கடி கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் குறிப்பிட்டார்"
கருத்தகளை பதிவு செய்யும் நண்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்....
குறிப்பாக மூன்றாம் கருத்தை பதிவு செய்த அருமை நண்பர் M.N.L.முஹம்மது ரபீக் என்ற ராபியா மணாளன் அவர்கள் சில நேரங்களில் வரம்பு மீறி தனது கருத்துகளை பதிவு செய்கின்றார். குறிப்பாக இந்த செய்தியில் 'நமது ஊருக்கு பல பல நன்மைகளை செய்துவரும் மனித நேய ஆர்வலர்களை உண்மைக்கு புறம்பான கருத்துகளை கொண்டு இழிவு படுத்தி தனது கருத்துகளை பதிவு செய்கின்றார்.
உங்களுக்கு ஒரு பகிரங்க சவால்...நீங்கள் குறிப்பிடும் அந்த செல்வந்தர் நமது ஊருக்கு செய்த நன்மைகளை பட்டியல் இட நான் தயார்.... நீங்கள் நமது ஊருக்கு செய்த அறிய பல நன்மைகளை பட்டியல் இட தயாரா?????
செய்தி: தேர்தல் 2011: திமுகவுக்கு வாக்களிப்பது காயல்பட்டினம் மக்களின் கடமை! முஸ்லிம் லீக் பரப்புரை கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். உரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அனிதாவை மட்டும் ஆதரிக்கலாம் ஆனால் திமுகவை அல்ல.. posted byshahul (London)[04 April 2011] IP: 92.*.*.* United Kingdom | Comment Reference Number: 3763
முஸ்லிம்கள் ஏன் திமுக விற்கு ஏன் வாக்கு அளிக்க கூடாது?
கோவையில் 19 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படவும், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் அழிக்கப்படவும், காவல்துறையின் கருப்பு ஆடுகளுக்கும் பாசிச சங்பரிவார் கூட்டணிக்கும் கலைஞர் அரசு தந்த ஆதரவுப் போக்கே காரணம் என்பதை அனைவரும் அறிவோம். கோவையில் 19 முஸ்லிம்களின் அநியாயப் படுகொலைகளுக்கு கலைஞர் அரசே முழுக்க முழுக்க காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
1997 நவம்பரில் நிகழ்ந்த படுகொலைகள் மற்றும் முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டது குறித்து திட்டமிடல்கள் குறித்து உளவுத்துறையை தம் கையில் வைத்திருக்கும் கலைஞருக்கு தெரிந்தே இருக்க வேண்டும். இருந்தும் அவர் முஸ்லிம்களைப் பாதுகாக்கத் தவறினார். இது கோவை விவகாரத்தில் அவர் செய்த முதல் குற்றம்.
குதறப்பட்ட மக்களின் கதறல்களை அவர் பொருட்படுத்தவில்லை. ஆறுதல் கூறக்கூட அவர் செல்லவில்லை. ஆனால் அதே காலகட்டத்தில் அருகிலுள்ள கோபிச்செட்டிபாளையத்துக்கு கலைஞர் சென்றார். அந்தப் பகுதியில் மர்ம நோயால் மரணமடைந்த ஆடுகளை பார்வையிடச் சென்றார். ஆடுகளுக்கு காட்டிய கருணையை, ஆறுதல்களைக் கூட கோவையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கவில்லை. அது மட்டுமின்றி கோவை படுகொலைக்காக இதுவரை பகிரங்க வருத்தமோ மன்னிப்போ கேட்காதவர் தான் கலைஞர்.
ஏறக்குறைய 200 பேரை கோவையில் 1998 பிப்ரவரியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் தொடர்புபடுத்தி சிறைக்கொட்டடியில் தள்ளி கொடுமைகள் புரிய காரணமானார். ஆனால் 1997 நவம்பர் படுகொலைகளுக்கு காரணமாக கொலையாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படவில்லை. கோவையில் முஸ்லிம்களை கருவறுக்க முழு பங்கு வகித்த காவல்துறை அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்காததோடு அவர்களுக்குப் பதவி உயர்வுகளை வழங்கி, நீதியை ஏளனம் செய்தார் கலைஞர்.
காதியானிகள் முஸ்லிம்கள் இல்லை என்பது ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் கருத்து. ஆனால் காதியானிகளை விமர்சித்து ஜும்ஆவில் பேசினார்கள் என்பதற் காக மேலப்பாளையத்தைச் சேர்ந்த உலமாக்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை அலைக்கழித்தது கலைஞரின் காவல்துறை. இதுமட்டுமின்றி அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒன்றுசேர்ந்து மேலப்பாளையத்தில் கடந்த மார்ச் 13 அன்று காதியானிகளின் பொய் முகத்தை கிழிக்க நடத்திய மாநாட்டிற்கு பல்வேறு வகையில் நெருக்கடிகளைத் தந்ததும் கலைஞர் காவல்துறை தான்.
திமுக ஆட்சிக்கு வந்த சில நாட்களில் ‘கோவையை குண்டு வைத்துத் தாக்க மீண்டும் முஸ்லிம் தீவிரவாதிகள் சதி’ என்ற பெயரில் ஒரு கற்பனைக் கதையை கட்டவிழ்த்து விட்டார் உதவி ஆணையாளராக இருந்த ரத்தினசபாபதி. தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை இச்செய்தி ஏற்படுத்தியது. ஹாருன் பாஷா என்ற இளைஞரும் அவரது உறவினர்களும் இந்த பொய் வழக்கில் கைதுச் செய்யப்பட்டார்கள். இந்த அக்கிரமதை அரசின் கவனத்திற்கு தமுமுக கொண்டு சென்றது. இதன் விளைவாக இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி, இது கற்பனையாக புனையப்பட்ட வழக்கு என்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதன் விளைவாக ஹாரூன் பாஷாவும் அவரது நண்பர்களும் விடுதலை செய்யப்பட்டனர். ரத்தினசபாபதியை நீதிபதி கடுமையாக கண்டித்தார். இத்தகைய முஸ்லிம் விரோதப் போக்குடைய அதிகாரிக்கு தனது ஆட்சியின் அந்திம காலத்தில் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் பொறுப்பைக் கொடுத்து கவுரவித்துள்ளார் கலைஞர். அரசுப் பணிக்கு ஆட்களை எடுக்கும் இந்த ஆணையத்தில் இவரைப் போன்றவர்கள் இருந்தால் முஸ்லிம் இளைஞர்களுக்கு நியாயமாக நேர்மையாக வாய்ப்பு கிடைக்குமா?
1999 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்த நேரத்தில் மனம் வெதும்பிய நிலையில் லத்திப் சாகிப் சொன்னார்: ‘‘பச்சிளம் பிறைக்கொடியை தூக்கிக் கொண்டிருந்த என்னை, கூட்டணி தர்மம் என்று திமுகவின் கருப்பு, சிகப்பு கொடியைத் தூக்க சொன்னீர்கள் தூக்கினேன். இப்போது பாபர் மஸ்ஜிதை இடித்த காவிக் கொடியையும் தூக்கச் சொன்னால் நியாயமா கலைஞரே?’’ என்று கேட்டுவிட்டு வெளியேறினார் லத்தீப். அப்பொழுது லத்தீப் சாகிப்பின் தேசிய லீக்கை உடைத்து தமிழ் மாநில தேசிய லீக் என்ற பெயரில் திருப்பூர் அல்தாப்பை உடன் வைத்துக் கொண்டார். பிஜேபி கொடியோடு முஸ்லிம்களின் பச்சைக் கொடியை பறக்கவிட்ட பெருமைக்குரியவர் கலைஞர்(!)
கலைஞர் பிஜேபியோடு கூட்டணி வைக்க என்னவெல்லாம் சொன்னார். எந்த பிஜேபியை, ‘ஆக்டோபஸ்’ ‘பண்டார பரதேசிகள்’ என்றாரோ? அவர்களோடு தேர்தல் கூட்டணி வைத்துக் கொண்டு ‘‘கலைஞர் இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது என்று சி. சுப்ரமணியம் சொன்னார்’’ என்றார். ‘‘எதற்காக பிஜேபியோடு கூட்டணி வைத்தோம் என்றால் மதவாதத்தை விட ஊழல் கொடியது’’ என்று ஊழல் கறைபடியாத உத்தமர்(!) மதவெறியை நியாயப்படுத்தினார். கலைஞர் பிஜேபியோடு கூட்டணியில் இருக்கும்போது தான் குஜராத்தில் 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். இதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது ‘‘அது வேறு மாநிலப் பிரச்சினை’’ என்றார்.
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். posted byShahul Jiffri Kareem (London)[23 December 2010] IP: 92.*.*.* United Kingdom | Comment Reference Number: 1753
உங்கள் எண்ணங்கள் எல்லாம் ஈடேற ஐக்கிய ராஜ்ய காயல் நற்பணி மன்றத்தின் சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
எங்கள் மன்ற உறுப்பினர் ஹாஃபிழ் அப்துல் மத்தீன் அவர்களை தந்தை லபிப் ஹாஜியார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டது, எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தருகின்றது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross