அண்மையில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில், காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் மாணவ-மாணவியர் பலர் சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர். அவர்களுள் ஒருவர் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால், பள்ளி மாணவ-மாணவியருக்கான தனித்திறன் போட்டிகள் தூத்துக்குடியில் நடத்தப்பட்டன. முதல் சுற்றுப் போட்டிகள் 01.11.2016. அன்றும், தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவிலான இரண்டாம் சுற்றுப் போட்டிகள் 04.11.2016. அன்றும் நடைபெற்றன. இப்போட்டிகளில் வென்ற எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவியர் விபரம்:-
தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால், பள்ளி மாணவ-மாணவியருக்கான பேரிடர் மேலாண்மை போட்டிகள் தூத்துக்குடியில் நடத்தப்பட்டன. தூத்துக்குடி கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள் நவம்பர் 01, 02, 03 நாட்களிலும், வருவாய் மாவட்ட அளவிலான இரண்டாம் நிலை போட்டிகள் நவம்பர் 08, 09, 10 நாட்களிலும் நடைபெற்றன. இப்போட்டிகளில் வென்ற எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவியர் விபரம்:-
மேற்படி போட்டிகளில், வருவாய் மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பெற்ற எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவி, 23.11.2016. அன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குழந்தைகள் நாளை முன்னிட்டு, 13.11.2016. அன்று ஆறுமுகநேரியில், விடுதலைப் போராட்ட வீரர்கள் அமைப்பால் நடத்தப்பட்ட போட்டிகளில், எல்.கே.மெட்ரிக் பள்ளியின் இரண்டு மாணவியர் பரிசுக் கேடயமும், சான்றிதழும் பெற்றுள்ளனர். அவர்களின் விபரம்:-
வெற்றிபெற்ற மாணவியரை, பள்ளியின் நிர்வாகிகள், தலைமையாசிரியை மீனா சேகர், ஆசிரியையர் பாராட்டினர்.
|