தடை செய்யப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை - தினசரி 4000 ரூபாய் அளவில் - எந்த வங்கியிலும் மாற்றலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் 4500 வரை மாற்றலாம் என உயர்த்தப்பட்டு, ஒரு சில தினங்களிலேயே 2000 ரூபாய் என குறைக்கப்பட்டது.
சனிக்க்கிழமையான இன்று (நவம்பர் 19) - வங்கிகளில், அதன் வாடிக்கையாளர்கள் மட்டுமே ரூபாய் நோட்டுகளை மாற்ற அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் - இந்த விதிமுறை இன்று மட்டும் அமலில் இருக்கும் என்றும், மூத்த குடிமக்கள் (60 வயது தாண்டியவர்கள்) வங்கியின் வாடிக்கையாளராக இருக்கா விட்டாலும் அனைத்து வங்கிகளிலும் இன்று ரூபாயை மாற்றிக்கொள்ளலாம் எனவும் இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஞாயிறு அன்று வங்கிகளுக்கு விடுமுறை என்றும், திங்கள் முதல் எந்த வங்கியிலும், யாரும் பணம் மாற்றிக்கொள்ளலாம் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
NDTV |