நெல்லை மாவட்டம் - பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கலை & அறிவியல் கல்லூரியின் (பணி நிறைவு பெற்ற) முன்னாள் முதல்வர் - கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு நகரைச் சேர்ந்த பேராசிரியர் கா.முஹம்மத் ஃபாரூக் நேற்று (19.11.2016.) இரவில் சென்னையில் காலமானார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின், அவரது சொந்த ஊரான திருவிதாங்கோட்டில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
‘இறையருட்கவிமணி’ மர்ஹூம் கா.அப்துல் கஃபூர் அவர்களின் சகோதரரான இவர், பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் தமிழ்த்துரைத் தலைவராகவும் இருந்துள்ளார். இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்குப் பெருஞ்சேவை செய்த இவர், நாடறிந்த கவிஞரும், சிறந்த பேச்சாளருமாக மிளிர்ந்தார்.
தனது ‘நன்னெறி பதிப்பகம்’ மூலம் எண்ணற்ற தலைப்புகளில் பல்வேறு நூல்களையும் அவர் வெளியிட்டுள்ளார். ‘மதீனா’ மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
இவரது சிறந்த கல்விப் பணிக்காக, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் இஸ்லாமிய இளைஞர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ‘தீன்வழிச் செம்மல்’ விருது பெற்றவர்.
[கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 12:10 / 20.11.2016.]
3. Re:...யார் அழைத்தாலும் செல்வீர்களே,,, posted bymackie noohuthambi (k)[20 November 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44894
கன்னித்தமிழ் மொழிக்கு அணி சேர்த்த அழகிய இஸ்லாமிய தமிழ் மகன்.
யார் அழைத்தாலும் செல்வாயே கண்ணதாசா அழைத்தது எமன் என்று தெரிந்துமா சென்றாய் என்று கவிஞர் கண்ணதாசன் மறைந்த போது கலைஞர் அவர்கள் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்திருந்தது இப்போது நினைவுக்கு வருகிறது.
தமிழ் மணக்கும் சோலை எல்லாம் தேடினேன் உன்னை சான்றோர் தம் அவை எல்லாம் அலைய விட்டேன் கண்ணை என்று நாகூர் ஹனீபா அவர்கள் பேரறிஞர் அண்ணா மறைந்த போது பாடிய பாடல் நினைவுக்கு வருகிறது.
அந்த வரிசையில் பேராசிரியல் முஹம்மது பாரூக் அவர்கள் தெளிந்த நீரோடைபோல் பேசும் தமிழ் மன்றங்களில் கலந்து கொண்ட காலங்களும் நினைவுக்கு வருகிறது. நமதூரில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது கவிதைத்துவமான பேச்சாற்றலை வெளிப் படுத்தியுள்ளார்.
சதக்கத்துல்லாஹ் அப்பாவை ஸதக்காவாக ஞாலத்துக்கு ஈன்ற ஞான பூமி காயல்பட்டினம் என்று கவிக் கோ பாடுவதை முஹம்மது பாரூக் அவர்களின் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி நமக்கு ஞாபகமூட்டுகிறது.
அன்று நாங்கள் படிக்கும் காலங்களில் பாளையம்கோட்டை புனித சவேரியார் கல்லூரி புனித யோவான் கல்லூரி என்று இரு கல்லூரிகள்தான் இருந்தன. முஸ்லிம்களுக்கு என ஒரு கல்லூரி இல்லாத குறையை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி நிவர்த்தி செய்ததென்றால் அந்த கல்லூரிக்கு மகுடம் வைத்ததுபோல் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் பாடல்களை நாடறிய செய்த பெருமை முஹம்மது பாரூக் அவர்களை சாரும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் மண்ணறையை வெளிச்சமாக்கி வைப்பானாக அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவர்க்க வாழ்வை கொடுத்தருள்வானாக. அவர்களை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கும் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி நிர்வாகிகளுக்கும் நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக. ஆமீன்.
மக்கி நூஹுத்தம்பி & மக்கி ஆலிம் குடும்பத்தினர்
மக்கி ஆலிம் இல்லம் 51 புதுக் கடை தெரு காயல்பட்டினம் அலை பேசி எண் 9865263588
6. Re:... posted byS.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.)[20 November 2016] IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44899
"அஸ்ஸலாமு அலைக்கும்."
"இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜஹீவூன்!
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் மண்ணறையை வெளிச்சமாக்கி வைப்பானாக அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவர்க்க வாழ்வை கொடுத்தருள்வானாக. ஆமீன்! ஆமீன்!! யா ரப்பால் ஆலமீன்!!!
ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராஹிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவூதி அரேபியா.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன் மர்ஹூம் அவர்கள்
கல்விக்கு அருந்தொண்டாற்றிவிட்டு அல்லாஹ்வின் நாட்டப்படி இம்மைவிட்ட
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேரா. கா.முஹம்மத் ஃபாரூக் அவர்களின் எல்லா அறப்பணிகளை பொருந்தி,பாவபிழைகளைப்பொறுத்து மண்ணறையைவிசால,வெளிச்சமாக்கி இன் ஷா அல்லாஹ் அல்லாஹ் தன்னழகு காட்சியுடன் சுவனம்வழங்கியருள்வானாக ஆமீன்.
மரியாதைக்குரிய பேராசிரியர் கா. முஹம்மது பாரூக் அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிக்க கவலை அடைந்தேன்.
நான் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் படிக்கும்போது அவர்கள் தமிழ் துறை தலைவராகப் பணியாற்றினார்கள். அதன் பின் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பெற்றார்கள்.
கல்லூரி முதல்வராவதற்கு முன் அவர்களை கல்லூரியில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயம் என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தார்கள். அதை முடித்து தரும்படி கேட்டுக்கொண்டார்கள். நானும் அல்லாஹ்வின் நாட்டப்படி முடித்துக்கொடுதேன். அதன்பின் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. சிறந்த பண்பாளர்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப்பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.
மர்ஹூம் அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் மேலான பொறுமையை வல்ல ரஹ்மான் கொடுப்பானாகவும். ஆமீன்.
12. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ... posted byA.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA)[20 November 2016] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44908
இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...
எங்களது மரியாதைக்குரிய பேராசிரியர் முஹம்மது பாரூக் அவர்களின் மரண செய்தி அறிந்து கவலை அடைந்தேன்.
நானும் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் அவர்கள் கல்லூரியில் பேசிய பல மேடை பேசுக்களை எனக்கு கேட்கும் வாய்ப்புகள் கிடைத்து உள்ளன. அழகிய தமிழ் நடையில் மிகவும் தெள்ள .. தெளிவாகவும் எல்லோரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அழகிய உவமையுடன் ... இனிய குரலில் பேசும் ஆற்றலை வல்ல நாயன் அல்லாஹு அவருக்கு ஒரு அருட்கொடையாக வழங்கி இருந்தான் ...
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப்பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.மர்ஹூம் அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் மேலான பொறுமையை வல்ல நாயன் அல்லாஹு கொடுப்பானாகவும். ஆமீன்.
15. Re:...Condolence posted byS.D.Segu Abdul Cader (Quede Millath Nagar)[21 November 2016] IP: 103.*.*.* | Comment Reference Number: 44912
CONDOLENCE
Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى،
وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى،
فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ
நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!!
மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும்.
ஆதாரம் :- புகாரி -7377
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன்.
வஸ்ஸலாம்.
May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family.
Aameen!
Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross