தமிழக அரசு - இன்னும் சில மாதங்களில் - ரேஷன் அட்டையை, ஸ்மார்ட் கார்டாக மாற்றவுள்ளது. ஸ்மார்ட் அட்டை பெற்றிட - ரேஷன் அட்டையுடன், பயனாளிகள் - தங்கள் ஆதார் எண்களையும், மொபைல் எண்களையும் - இணைக்கவேண்டும்.
உங்கள் ரேஷன் அட்டையுடன், மொபைல் எண் மற்றும் குடும்ப தலைவரின் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என எளிதாக அறிந்திட, நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் - இணையத்தில் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.
அந்த சேவையை பயன்படுத்த முகவரி -
http://www.kayal.org/ration
இந்த சேவை மூலம், உங்கள் ரேஷன் அட்டை எண்ணை சமர்ப்பித்து - மொபைல் இணைப்பு / ஆதார் எண் இணைப்பு தற்போதைய நிலை உட்பட பல்வேறு தகவல்களை தாங்கள் பெறலாம்.
இந்த சேவை - தமிழக அரசின் www.tnpds.com என்ற இணையதளம் மூலம், நவம்பர் 18, 2016 அன்று பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது வரை தங்கள் மொபைல் எண் மற்றும் ஆதார் எண்களை -ரேஷன் அட்டையோடு இணைக்காத பயனாளிகளுக்கு, நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் - தங்கள் ஆதார் மற்றும் மொபைல் எண்களை இணைத்திட - சிறப்பு ஏற்பாடுகள், இறைவன் நாடினால் செய்ய உள்ளது என்பதனையும் தெரிவித்து கொள்கிறோம்.
http://www.kayal.org/ration
|