காயல்பட்டினம் சித்தன் தெருவிலுள்ள மின் கம்பம் ஒன்றில், இன்று 18.00 மணியளவில் திடீரென ஒரு மின் வினியோகக் கம்பிவடம் அறுந்து தொங்கியது.
இதனைக் கண்ணுற்ற அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களும், பெண்களும் - அவ்வழியே கடந்து சென்றோருக்கு கடமை உணர்வுடன் எச்சரிக்கை விடுத்ததோடு, காயல்பட்டினம் மின் வாரிய அலுவலகத்திற்கும் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர்.
அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், அறுந்த கம்பிவடத்தை மீண்டும் இணைத்து சரிசெய்தனர்.
குழந்தைகள் அதிகம் விளையாடும் அப்பகுதியில், நல்ல வேளையாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
|