காயல்பட்டினத்திலுள்ள ஸீ-கஸ்டம்ஸ் சாலை உட்பட பல சாலைகள் ஏற்கனவே முற்றிலும் சிதிலமடைந்து, போக்குவரத்திற்குத் தகுதியற்றுள்ள நிலையில், பெய்து வரும் வட கிழக்குப் பருவ மழை காரணமாக, அச்சேதங்கள் மேலும் கோரமடைந்துள்ளன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட - மழை நீர் அதிகளவில் தேங்கும் பல்வேறு தாழ்வான வீதிகளில், நகராட்சியின் சார்பில் கருங்கல் சரல் பரத்தப்பட்டு, பள்ளங்களைச் சமப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த வரிசையில், நேற்று 01ஆவது வார்டுக்குட்பட்ட அருணாச்சலபுரம் பகுதியிலும், இன்று ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் பகுதியிலும் கருங்கல் சரல் பரத்தப்பட்டுள்ளது.
|