காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய கோவை மண்டல பேருந்துகளில் "வழி காயல்பட்டினம்" என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இயக்கப்படவுள்ளது.
இது குறித்து நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு;
காயல்பட்டினம் வழியாக இயக்கப்படவேண்டிய அரசு பேருந்துகள் - பல ஆண்டுகளாக, காயல்பட்டினம் வழியை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. இது குறித்து - கடந்த ஜூன் மாதம் முதல், நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் - தொடர்ந்து, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வுகளில் ஒன்றாக, காயல்பட்டினம் வழியாக இயக்கப்படவேண்டிய பேருந்துகளில், "வழி காயல்பட்டினம்" என போர்டு வைக்க அல்லது ஸ்டிக்கர் ஓட்ட, தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
கோவை மண்டலத்தில் இருந்து இயக்கப்படும் 8 பேருந்துகளிலும் "வழி காயல்பட்டினம்" என்ற ஸ்டிக்கர் ஓட்ட, அந்த கழகத்தின் அதிகாரிகள் முன் வந்துள்ளதை அடுத்து, அதற்கு தேவையான ஸ்டிக்கர்கள் - சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், நேற்று கோவையில் நேரடியாக ஒப்படைக்கப்பட்டது.
ஸ்டிக்கர்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், 2-3 தினங்களில், கோவை மண்டல பேருந்துகளில் இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும் என்றும், இனி கண்டிப்பாக கோவை மண்டல பேருந்துகள் - காயல்பட்டினம் வழியில் செல்லும் என்றும் உறுதி அளித்தனர்.
மேலும் - ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்கள் இயக்கப்படும் தகவலையும், பேருந்துகள் காயல்பட்டினம் வழியாக வருகின்றனவா என்ற தகவலையும், கோவை மண்டல உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தெரிவிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.
காயல்பட்டினம் வழியாக ஓடும் 16 (8 * 2 வழி) கோவை மண்டல பேருந்துகள் விபரம் கீழே வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த சில தினங்களுக்கு இந்த பேருந்துகளை, நடப்பது என்ன? சமூக ஊடக குழும நிர்வாகிகள் கண்காணிப்பர். இந்த பேருந்துகளை பொது மக்களும் கண்காணித்து (COMMUNITY MONITORING), தகவல்களை - நடப்பது என்ன? குழுமத்திற்கு வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கும்பக்கோணம், மதுரை மற்றும் திருநெல்வேலி மண்டல பேருந்துகள் விபரங்கள் - பொது மக்கள் கண்காணிப்புக்கு தோதுவாக, விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிய தருகிறோம்.
இவ்வாறு அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |