ராஜஸ்தான் மாநிலம் - ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா) அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் குறித்து, அதன் செயலாளர் ஹாஃபிழ் எம்.ஏ.செய்யித் முஹம்மத் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
எமது ஜெய்ப்பூர் காயல் நல மன்றத்தின் (ஜக்வா) பொதுக்குழு கூட்டம் 19.11.2016 சனி பின்னேரம ஞாயிறு இரவு சுமார் 9 மணியளவில் மன்ற தலைவர் ஹாஜி M.A.S செய்யது அபு தாஹிர் அவர்கள் தலைமையில் கரூர் டிரேடர்ஸ் இல்லத்தில் வைத்து நடைபெற்றது.
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை செயலாளர் அல்ஹாஜ் வாவு M.M.ஷம்சுதீன் அவர்கள், அதன் துணை செயலாளர் அல்ஹாஜ் L.M.E கைலானி அவர்கள், ஒருங்கினைப்பாளர் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் வாவு S.A.R. அஹ்மத் இஸ்ஹாக் ஆலிம் அஸ்ஹரி மற்றும் ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபேர் டிரஸ்ட் செயலாளர் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் M.A.ஹபிபுர்ரஹ்மான் ஆலிம் மஹ்லரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் வாவு S.A.R. அஹ்மத் இஸ்ஹாக் அஸ்ஹரி கிராஅத் ஓதினார். மன்ற செயலாளர் அல்ஹாஜ் அலஹாஃபிழ் M.A.செய்யது முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார்.
மன்ற தலைவரின் அறிமுக உரைக்குப்பின் காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை செயலாளர் அல்ஹாஜ் வாவு M.M.ஷம்சுதீன் அவர்கள் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் தற்போதைய செயல்பாடுகள்,ஐக்கிய பேரவையால் ஊருக்கு ஏற்பட்ட நன்மைகள், வருங்காலங்களில் செயல்படுத்த இருக்கும் திட்டங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்து ஊரில் உள்ள அனைவரும் ஓற்றுமையாக ஐக்கிய பேரவை என்ற ஒரே குடையின் கீழ் இணைந்து செயல்பட வேண்டுகோள் விடுத்தார்கள்.
தொடர்ந்து உரையாற்றிய ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபேர் டிரஸ்ட் செயலாளர் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் M.A.ஹபிபுர்ரஹ்மான் ஆலிம் மஹ்லரி அவர்கள் ஷிஃபாவினால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அதன் செயல்பாடுகள் ஆகியவற்றை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள்.
ஜக்வாவின் மூத்த உறுப்பினர் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் M.A அப்துல் வதூத் ஆலிம் ஃபாஸி அவர்கள் நன்றி நவில, அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் கலீஃபதுஷ்ஷாதுலி A.H.M. கல்ஜி ஆலிம் ஃபாஸி அவர்கள் துஆ ஓத ஸலாவத்துடன் கூட்டம் இனிதே நிறைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
புதிய நிர்வாகத்தின் கீழ் செயல்படும் நமதூர் காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவையை எம்மன்றம் முழுமையாக ஆதரிப்பதுடன், அதன் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள்,அனைது ஜமாஅத் பிரதிநிதி மற்றும் ஊரிலுள்ள பொது நல அமைப்புகளுக்கு இக்கூட்டம் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவைக்கு நமது மன்றத்தின் சார்பாக கெளரவ ஆலோசனை குழு உறுப்பினராக அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் M.A அப்துல் வதூத் ஆலிம் ஃபாஸி அவர்களை நியமிப்பது எனவும் முஸ்லிம் ஐக்கிய பேரவைக்கு அதற்கான ஒப்புதல் கடிதம் அனுப்புவது என ஏகமனதாக தீர்மானிக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|