காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவைச் சேர்ந்த இளைஞர்களால் நடத்தப்படும் தொண்டு அமைப்பான Independent Students Helping Association - ISHA சார்பில், அரசு மருத்துவமனையுடன் இணைந்து, இரத்தப் பரிசோதனை & மனநல மருத்துவ இலவச முகாமை, 19.11.2016. சனிக்கிழமையன்று 09.00 மணி முதல் 13.00 மணி வரை காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப் பள்ளியில் நடத்தின.
காயல்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர் ஜெஃப்ரீ, மனநல மருத்துவர் ஜெஷோர் குமார், மனநல உதவியாளர் பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை செய்து, ஆலோசனைகளை வழங்கினர்.
கலையரசி, ராஜலட்சுமி, ராஜேஷ் பாரதி, இவாஞ்சலின், புனிதா சாம் ரோபி, வயோலா, செய்யித் அலீ, கன்னித் தாய் ஆகியோர் துணைப்பணியாற்றினர்.
இம்முகாமில், காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 316 பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர். அவர்களுள், 176 பேருக்கு இரத்தப் பரிசோதனையும், 35 பேருக்கு கர்ப்பப் பை பரிசோதனையும், 61 பேருக்கு ICTC பரிசோதனையும், 44 பேருக்கு மனநல பரிசோதனையும் செய்யப்பட்டு, தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
பின்னர் நடைபெற்ற அரங்க நிகழ்ச்சியில், பொதுமக்களின் சந்தேகங்களுக்கு மருத்துவ நிபுணர்கள் விளக்கமளித்துப் பேசினர். இந்நிகழ்ச்சிக்கு, நகரப் பிரமுகர் ஷாஹுல் ஹமீத் தலைமை தாங்கினார்.
நகரப் பிரமுகர்களான எஸ்.ஐ.அபூபக்கர், எஸ்.ஐ.புகாரீ, எம்.ஐ.மெஹர் அலீ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
நகராட்சி ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் ஒருங்கிணைப்பில், அதன் துப்புரவுப் பணியாளர்கள் முகாம் பகுதிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனர்.
முகாம் ஏற்பாடுகளை, ISHA அமைப்பின் தலைவர் ஃபாஜில் ரஹீம் தலைமையில், செயலாளர் கஸ்ஸாலி மரைக்கார், துணைச் செயலாளர் உதுமான் அலீ, ஒருங்கிணைப்பாளர் ஹுஸைன், கவுரவ ஆலோசகர்களான ஸதக்கத்துல்லாஹ், ஹாஃபிழ் ஹமீத், ஜாஹிர் ஹுஸைன், புகாரீ, மஷ்ஹூர், உறுப்பினர்களான அப்துல் மஜீத், ஃபெரோஸ் கான், இஜாஸ், ரஸ்ஸாக், அனஸுத்தீன், இஸ்ஹாக், முஹம்மத் தம்பி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தகவல் & படங்களுள் உதவி:
கஸ்ஸலாலீ மரைக்கார்
|