காயல்பட்டினத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாமை, 08.12.2016. வியாழக்கிழமையன்று நடத்துவதென, கேரள மாநிலம் மலபார் காயல் நல மன்ற (மக்வா) செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
மலபார் காயல் நல மன்றத்தின் 100ஆவது செயற்குழுக் கூட்டம் அதன் அலுவலகத்தில் 13/11/2016 ஞாயிறு அன்று, மன்றத் தலைவர் எஸ்.என்.ரஹ்மத்துல்லாஹ் தலைமையில், செயலாளர் என்.எம்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் முன்னிலையில் நடைபெற்றது.
கடந்த (99ஆவது) செயற்குழுக் கூட்ட நிகழ்வறிக்கை இக்கூட்டத்தில் வாசிக்கப்பட்டு, தீர்மானங்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.
நடப்பு 100ஆவது செயற்குழுக் கூட்டத்தின் நிறைவில், பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
1) மன்றத்தால் ஏற்கனவே திட்டமிட்ட படி, டிசம்பர் 08ஆம் நாளன்று புற்றுநோய் விழிப்புணர்வு முகாமை நகரில் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இம்முகாமில், மக்வா மன்ற உறுப்பினர்களின் குடும்பத்தினர் உட்பட - நகரின் அனைத்து பொதுமக்களையும் பெருமளவில் பங்கேற்க வைப்பதற்கு முயற்சிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
2) காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை அனுப்பிய கடிதத்திற்கு, அதன் சட்ட திட்ட செயல்முறை தெளிவாக எடுத்துரைக்கப் பட்ட பின், அதுகுறித்து கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
பல்வேறு தேவைகளை முன்னிறுத்தி உதவி கோரிய கடிதங்கள் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படம்:
கோழிக்கோட்டிலிருந்து...
S.N.மீரான்
(செய்தி தொடர்பாளர் - மக்வா)
|