மொபைல் எண் இணைப்புகள் சதவீதம்படி, ஆதார் எண் இணைப்புகள் சதவீதம்படி, ரேஷன் அட்டைகள் எண்ணிக்கைபடி, ரேஷன் பயனாளிகள் எண்ணிக்கைபடி - நகரின் TOP 15 ரேஷன் கடைகள் விபரங்களை (நவம்பர் 27 நிலவரப்படி) நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பு வருமாறு:
தமிழக அரசு விரைவில் - பயோ மெட்ரிக் அடிப்படையில் ரேஷன் அட்டைகள் வழங்கவுள்ளது. அதற்காக - மொபைல் எண் மற்றும் ஆதார் எண்கள் ஆகியவற்றை, ரேஷன் அட்டையோடு இணைக்கும் பணி தற்போது நடைபெறுகிறது.
காயல்பட்டினம் பகுதியில் உள்ள 15 ரேஷன் கடைகளில் - நவம்பர் 27 வரை, மொபைல் எண் மற்றும் ஆதார் எண்கள் இணைக்கப்படாத ரேஷன் அட்டைகள் விபரங்களை - நடப்பது என்ன? குழுமம், kayal.org/ration இணையதளம் வாயிலாக வெளியிட்டுள்ளது தாங்கள் அறிவீர்கள்.
இப்பணிகளை எந்த ரேஷன் கடைகள் சிறப்பாக செய்து வருகின்றன என உணர்த்தும் வகையில் - சில வரைமுறைகள்படி - முன்னணி 15 (TOP
15) ரேஷன் கடைகள் விபரங்களை நடப்பது என்ன? குழுமம் தயாரித்துள்ளது.
இப்பட்டியல்கள் மூலம் -
(1) TOP 15 ரேஷன் கடைகள் - மொபைல் எண் இணைப்புகள் சதவீதம்படி
(2) TOP 15 ரேஷன் கடைகள் - குடும்ப தலைவரின் ஆதார் எண் இணைப்புகள் சதவீதம்படி
(3) TOP 15 ரேஷன் கடைகள் - அனைத்து பயனாளிகளின் ஆதார் எண் இணைப்புகள் சதவீதம்படி
(4) TOP 15 ரேஷன் கடைகள் - ரேஷன் அட்டைகள் எண்ணிக்கைபடி
(5) TOP 15 ரேஷன் கடைகள் - பயனாளிகள் எண்ணிக்கைபடி
ஆகியவற்றை நாம் எளிதாக அறியலாம்.
இவ்வாறு அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |