கத்தர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், 09.12.2016. அன்று நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள காயலர்களுக்கு அழைப்பு விடுத்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.என்.முஹம்மத் சுலைமான் வெளியிட்டுள்ள அழைப்பறிக்கை:-
அன்பின் மன்ற உறுப்பினர்கள் மற்றும் கத்தர் வாழ் காயலர்கள் அனைவருக்கும் அன்பார்ந்த ஸலாம் "அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)"
வல்ல அல்லாஹ்வின் பேரருளால், நமது கத்தர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர மற்றும் 28ஆவது பொதுக்குழுக் கூட்டம், வரும் 09.12.2016 வெள்ளிக்கிழமையன்று காலை 11.00 மணி முதல் 6.30 மணி வரை, கத்தர் Messaid (Umm Sayyid) Parkஇல் வைத்து குடும்ப சங்கம நிகழ்சியாக நடைபெறவுள்ளது.
மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஜும்ஆ தொழுகையை நிகழ்விடம் அருகிலேயே நிறைவேற்றிடுவதற்குத் தோதுவாக வந்து சேரவும். வாகன வசதி & மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு பொழுதுபோக்கு சிறப்பு அம்சங்களுடன் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிகளில், மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் அனைவரும் - இச்செய்தியையே அழைப்பாகக் கருதி, உங்கள் குடும்பத்தினருடன் தவறாமல் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
மேலதிக விபரங்களுக்கு, கீழ்காணும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
முஹம்மத் முஹ்யித்தீன் (தொடர்பு எண்: 55 25 96 06)
ஹாஃபிழ் ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன் (தொடர்பு எண்: 55 40 29 91)
பொக்கு ஹுஸைன் ஹல்லாஜ் (தொடர்பு எண்: 33 49 22 65)
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
காயல்பட்டினத்திலிருந்து...
எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி - கத்தர் கா.ந.மன்றம்)
|