சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், 25.11.2016. வெள்ளிக்கிழமையன்று, யான்பு நகரில் நடைபெறவுள்ளது. இதற்கு அழைப்பு விடுத்து, அழைப்பு விடுத்து, கூட்ட ஏற்பாட்டாளர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
ஜித்தா காயல்நல மன்ற "யான்போ" செயற்குழு கூட்டத்திற்கு
கனிவோடு அழைக்கிறார் "கலவா" இபுறாஹிம்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கண்ணியமிகு ஜித்தா மற்றும் யான்போ காயல் நகர சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கவும்!
எதிர்வரும் 25 /11/2016 வெள்ளிக்கிழமை நமது ஜித்தா காயல் நலமன்ற செயற்குழு மற்றும் ஒன்றுகூடல் கூட்டம் யான்போ நகரில் நடைபெறயுள்ளது.இனஷா அல்லாஹ்!
அந்த சிறப்புமிகு கூட்டத்திற்கு ஜித்தாவிலிருந்து செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பல உறுப்பினர்களும் அன்றைய வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு உள்ளன்போடு வருகை புரிந்து யான்போ சகோதரர்களோடு சங்கமிக்க இருக்கிறார்கள் என்ற இனிய செய்தியோடு என் இதயம் கனிந்த வேண்டுகோளை உங்கள் முன் வைக்கிறேன்!
அன்பிற்கினிய யான்போ சகோதரகளே,நம் ஜித்தா காயல்நல மன்றத்தின் செயற்குழு கூட்டத்தை இம்முறை நம் யானாவில் கூட்ட இசைந்துள்ளார்கள்.அல்ஹம்துலில்லாஹ்!
நமதூர் ஏழை மக்களின் இன்னல்கள் தீர,ஏழை நோயாளிகளின் தேவையறிந்து உதவிகள்புரிந்திட,
வரியவர்களை வறுமையின் கோரப்பிடியிலிருந்து கூடியவரை விடுவிக்க,
நம் ஜித்தா மன்றம் உதவிபுரியக்கூடிய புண்ணிய பணியின் திட்டமிடும் தீர்மான வடிவத்தினை,நம் யான்போ நகரில் நிறைவேற்றிட கூட்டப்படும் ஒரு மனமகிலூட்டும் முக்கியமான கூட்டமாகும்!
ஜிம்மா முடிந்தவுடன் கூட்டம் ஆரம்பிக்க இருக்கிறது,தாங்கள் முற்கூட்டியே எமது "காயல் ஹவுஸ்"க்கு வருகை தந்து,பல நூறுமைல்களுக்கப்பாலிருந்து பெருவாரியாக வருகைபுரியும் நம் ஜித்தா காயல் கண்மணிகளை மனதார வாழ்த்தி வரவேற்பது உங்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்!
அவர்கள் உள்ளங்குளிரும்விதம் விருந்தோம்பல் உபசரித்தலையும் முனைப்புடன் செய்து,நம் புண்ணிய நோக்கம் முழுமையடையும் விதமாக அன்றைய ஒன்றுகூடல் கூட்டமும் அதையொட்டிய வைபவமும் வெற்றியுடன் நடந்தேறிட வல்ல அல்லாஹ்வை வேண்டிக்கொள்வதோடு, உங்களின் உயரிய ஒத்துழைப்பையும் உள்ளன்போடு நாடுகிறேன்!அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
யான்புவிலிருந்து...
‘கலவா’ இப்றாஹீம்
|