பள்ளிக்கூடங்களுக்கிடையிலான - தமிழ்நாடு மாநில அளவிலான கால்பந்துப் போட்டி, சென்னை ஜெ.பீ.ஆர். பொறியியல் கல்லூரியில், இம்மாதம் 17, 18, 19 ஆகிய நாட்களில் (வியாழன், வெள்ளி, சனி) நடைபெற்றது.
துவக்கச் சுற்று நாக்அவுட் முறையிலும், அடுத்த சுற்று லீக் முறையிலும் நடத்தப்பட்டது. போட்டியின் துவக்கச் சுற்றில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி, வேலூர் டான் பாஸ்கோ அணியுடன் மோதி, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, லீக் சுற்றுக்குத் தகுதிபெற்றது.
லீக் சுற்றில், எல்.கே.மேனிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல், மதுரை காஜா மியான் ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல், நெய்வேலி ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஆகிய அணிகள் மோதின.
எல்.கே.மேனிலைப்பள்ளி அணியும் - காஜா மியான் அணியும் மோதிய போட்டி சமனில் முடிவுற்றது. அடுத்து, கிருஷ்ணகிரி ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அணியுடன் மோதி, 1-0 என்ற கோல் கணக்கில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி வெற்றி வாய்ப்பை இழந்தது. தனது கடைசி லீக் போட்டியில் நெய்வேலி ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அணியை எதிர்த்தாடிய எல்.கே.மேனிலைப்பள்ளி அணி, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, இச்சுற்றுப்போட்டியில் மூன்றாமிடத்தைப் பெற்றது.
இதற்காக, எல்.கே.மேனிலைப்பள்ளி அணிக்கு சுழற்கோப்பையும், 6 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும், அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
தகவல்:
HIMS
படங்கள்:
ஜமால்
(உடற்கல்வி ஆசிரியர், எல்.கே.மேனிலைப்பள்ளி) |