மொபைல் எண் இணைப்புகள் சதவீதம்படி, ஆதார் எண் இணைப்புகள் சதவீதம்படி, ரேஷன் அட்டைகள் எண்ணிக்கைபடி, ரேஷன் பயனாளிகள் எண்ணிக்கைபடி - நகரின் TOP 15 ரேஷன் கடைகள் விபரங்களை (நவம்பர் 18 நிலவரப்படி) நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பு வருமாறு:
தமிழக அரசு விரைவில் - பயோ மெட்ரிக் அடிப்படையில் ரேஷன் அட்டைகள் வழங்கவுள்ளது. அதற்காக - மொபைல் எண் மற்றும் ஆதார் எண்கள் ஆகியவற்றை, ரேஷன் அட்டையோடு இணைக்கும் பணி தற்போது நடைபெறுகிறது.
காயல்பட்டினம் பகுதியில் உள்ள 15 ரேஷன் கடைகளில் - நவம்பர் 18 வரை, மொபைல் எண் மற்றும் ஆதார் எண்கள் இணைக்கப்படாத ரேஷன் அட்டைகள் விபரங்களை - நடப்பது என்ன? குழுமம், kayal.org/ration இணையதளம் வாயிலாக வெளியிட்டுள்ளது தாங்கள் அறிவீர்கள்.
இந்த தகவல்கள் - தற்போது, நகரின் அனைத்து ஜமாஅத்துகளுக்கும், பொது நல அமைப்புகளுக்கும் - நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.
நகரில் மொபைல் எண் / ஆதார் எண் இணைப்புகள் பணிகளின் தற்போதைய நிலை - ரேஷன் கடைகள் வாரியாக, இணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் -
(1) TOP 15 ரேஷன் கடைகள் மொபைல் எண் இணைப்புகள் சதவீதம்படி
(2) TOP 15 ரேஷன் கடைகள் ஆதார் எண் இணைப்புகள் சதவீதம்படி
(3) TOP 15 ரேஷன் கடைகள் ரேஷன் அட்டைகள் எண்ணிக்கைபடி
(4) TOP 15 ரேஷன் கடைகள் பயனாளிகள் எண்ணிக்கைபடி
ஆகியவற்றை நாம் எளிதாக அறியலாம்.
இவ்வாறு அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |