செய்தி: எதிர்பார்த்தது தவறா அண்ணாச்சி அவர்களே...! “நடப்பது என்ன?” குழுமம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் பேசியதைத் தொடர்ந்து குழுமம் அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
என்னக்கொடுமை சார் இது. posted byKMT Shaikna Lebbai (Singapore)[02 November 2011] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 12791
இன்னுமா காயல்பட்டணம் கலைஞர் பட்டினம் என்று சொல்லுகிறீர்கள்.
என்னக்கொடுமை சார் இது.
திமுக கட்சி காரங்க மக்களுக்கு இவ்வளுவு துரோகம் செய்ஞ்சி கூட இன்னும் அந்த கட்சிக்காக படுபடுகிரவர்களை நெனச்சா ஒரு பக்கம் சிரிப்பும் ஒரு பக்கம் கோபமும் தான் வருது.
காயல்பட்டணம் கலைஞர் பட்டினம் என்று சொல்லுகிறவர்களை பார்த்து ஒரு கேள்வி கேக்குறேன். தயவு செய்து பதில் கூறவும்.
அழகான பெயர் கொண்ட நமது ஊர் காயல்பட்டினத்தை கலைஞர் பட்டினம் என்று கூற சரியான ஒரே ஒரு காரணத்தை உங்களால் கூற முடியுமா?
தயவு செய்து நமது ஊரில் அரசியல் (எந்த கட்சியும்) வேண்டாம்.
எந்த கட்சி காரங்க வந்தாலும் நம்மளுக்கு அவங்க ஒன்னும் செய்ய மாட்டாங்க.
தயவு செய்து அரசியல் காரங்க பின்னாடி சுத்துரத விட்டுட்டு அவங்க அவங்க வேலைய பாருங்கப்பா.
முக்கியம்,இனிமே காயல்பட்டணம் கலைஞர் பட்டினம் என்று சொல்லாதீர்கள்.please.
அல்லாஹ் வின் முடிவை யாராலும் மாத்த முடியாது.இந்த வெற்றி உண்மையான உழைப்புக்கு கிடைத்த நற்கூலி.
சகோதரி ஆபிதா அவர்களே,இனி தான் நீங்கள் மிகவும் கவனமாகவும்,சுறு சுறுப்பாகவும் செயல் பட வேண்டும்.
வல்ல அல்லாஹ் தங்கள் மூலமாக நமது ஊருக்கு நன்மையை நாடி இருக்கிறான் என்று நினைத்து கொண்டு செயல்படவேண்டும்.
கடந்த காலங்களில் தவறு நடந்தை போல்,இனி வரும் காலங்களில் அதே தவறுகள் நடக்காமல் இருக்க பார்த்து கொள்ளவேண்டும்.
உங்களுடைய கவனம் இனிமேல் நமது ஊருக்கும் நமது ஊர் மக்களுக்கும் நன்மை செய்வதில் இருக்க வேண்டும் (உங்களது குடும்பத்துக்கு நீங்கள் செய்கின்ற நன்மைபோல).
சகோதரி மிசிரிய அவர்களே இனிமேல்தான் சில நயவஞ்சகர்கள் உங்களுடைய நல்ல மனதை கெடுக்க முயல் வார்கள்.தயவு செய்து அதற்க்கெல்லாம் இடம் கொடுக்காமல் ஊர் நலனை கருதி வெற்றி பெற்ற சகோதரி ஆபிதா அவர்களுடன் தங்களுடைய நல்ல கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
எங்களது சிங்கை காயல் நல மன்றத்தின் செயல் பாடுகளை பாராட்டி கருத்து தெரிவித்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்களது மன்றத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
எங்களது நற்பணிகளும்,சிங்கை வாழ் காயல் மக்களின் ஒற்றுமை தொடரவும் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக,ஆமீன்
குசும்பு;
என்ன S.K Salih , தேர்தல்ல நிக்கிற சந்தோஷத்தில் எங்களது செய்தியை ரொம்ப தாமதமா போட்டுட்டீங்களோ.
என்னவாக இருந்தாலும் எங்களது செய்தியை மிகவும் தாமத படுத்தியது எங்களுக்கு எல்லாம் ரொம்ப வருத்தம் தான்.
Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ... posted byKMT Shaikna Lebbai (Singapore)[18 October 2011] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 11264
ஆமா காக்கும் கரங்கள்ன்னு பேரு வச்சிக்கிட்டு பின்னாடி ஒரு இளைஞர் பட்டாளத்தை கூட்டி வச்சிக்கிட்டு, அவர்களுக்கு கல்வி அறிவு மார்க்க அறிவு சமுதாய அறிவு எல்லாவற்றையும் போதிப்பதை விட்டு விட்டு அவர்களையும் உங்கள் பின்னாடி நின்று யாரோ ஒருவருக்கு வால் பிடிக்கும் வேலையை செய்வது நியாயமா? உங்களுக்கு தேவை என்றால் நீங்கள் இருந்து கொள்ளுங்கள், மற்ற இளைய சமுதாயத்தை வழி கெடுக்க வேண்டாமே?
YUF இயக்கம் இந்த பாகுபாடின்றி எல்லோராலும் மதிக்கபடுகின்ற இயக்கம். தப்பு யார் மீதிருந்தாலும் பொருத்து போங்கள். ஊதி பெரிதாக்கி விட வேண்டாம்.
Re:ஐக்கிய பேரவை கூட்டம் நிறை... posted byShaikna Lebbai (singapore)[09 September 2011] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 7816
காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் காக்கா அவர்களுக்கு.
ஐக்கிய பேரவை தீர்மானக்கள் எல்லாம் குழப்பமாகவே இருக்கிறது, காரணம் ஐக்கிய பேரவையில் சரியான கட்டமைப்பு இல்லாத காரணமே!!!
ஐக்கிய பேரவை நகராட்சி தலைவரை தேர்ந்தெடுக்கும் தீர்மானத்திற்கு போவதற்கு முன்....சில கேள்விகள்
1 .ஐக்கிய பேரவை தலைமை எந்த அடிப்படையில் யாரால் தேர்ந்தெடுக்கபட்டது?
2 . சட்டசபை மற்றும் பாராளுமன்றங்களில் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தலைமை மாறுகிறது, சட்டமாகவும் கூட இருக்கிறது, ஆனால் ஏழு வருடங்களுக்கு மேல் ஆகியும் தலைமை மாறவே இல்லையே ஏன்?
3 . ஒரு போராட்டத்திற்கோ அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவோ ஒரு அமைப்பு சட்டப்படி அரசால் பதிவு பெற்றிருக்க வேண்டும். ஐக்கிய பேரவை ஏன் இன்னும் பெற வில்லை? எப்படி நடவடிக்கை எடுப்பீர்கள்? உங்களை நம்பி வந்தால் எங்கள் கதி என்ன?
4 . கடந்த சட்டசபை தேர்தலில் ஏன் இந்த அளவுக்கு ஆர்வம் காட்டவில்லை?
5 . பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்ட பொது ஏன் மெளனமாக இருந்தீர்கள்? ஊரில் புற்றுநோய் போன்ற கொடிய நோய் பரவ காரணமாய் இருக்கின்ற தொழிற்சாலைகளை எதிர்த்து ஏன் அறிக்கை போராட்டம் மேற்கொள்ளவில்லை? விழிப்புணர்வு பல கொடுத்த பின்னும்.
6 . ஐக்கிய பேரவை தலைவர், உப தலைவர், செயலாளர், பொருளாளர் யாருடைய மின்னஞ்சல் முகவரியோ அல்லது கைபேசி எண்ணையோ வெளியிட்டு இருகிண்டீர்களா? இருந்தால் நாங்களும் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசுவோமே!!!
மேல் கூறிய கேள்விகளுக்கு தெளிவு பெற்றபின் நகராட்சி தேர்தல் சார்பாக பேசலாம்.
எனது ஆருயிர் நண்பர்கள் குத்துக்கள் தெருவை சேர்ந்த பசுல் கரீம்,அஸ்லம் மற்றும் ஓமர்,இம்மூவரையும் இந்த புகைப்படம் மூலமா பார்த்ததில் ரொம்ப சந்தோசம்.அனைவருக்கும் எனது சலாமும் பெருநாள் வாழ்த்துக்களும்.
Re:நகராட்சித் தேர்தல் வழிகாட... posted byKMT Shaikna Lebbai (Singapore)[28 August 2011] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 7387
எங்களது சிங்கை சிங்கம் காயல் மண்ணின் மைந்தன் சாலை நவாஸ் காக்கா(ஊர் நலனில் மிகவும் அக்கறை கொண்டவர்) அவர்கள் "MEGA" வின் ஒருங்கிணைப்பாளராக இருப்பதில் எங்களுக்கு ரொம்ப சந்தோசமாகவும் பெருமையாவும் இருக்குது.
"MEGA" வின் அணைத்து நட்காரியங்களுக்கு வல்ல அல்லாஹ் துணை புரிவானாக.ஆமீன்
எங்களது அருமை நண்பர் மூசா வை வெகு நாட்களுக்கு பிறகு இந்த போட்டோ வின் மூலமா பார்த்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.
இது போல எண்ணற்ற நண்பர்களை இந்த காயல் வெப்சைட் மூலமா தான் பார்க்க முடிகிறது.அதற்காக இந்த வெப்சைட் நடத்துகிறவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை இந்த தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross