பேரிழப்பு... posted byPalayam MAC (Kayalpatnam)[05 May 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 34757
எமது ஐக்கிய விளையாட்டு சங்க வாலிபால் (கைப்பந்து) அணியின் ஆற்றல் மிக்க அணித்தலைவராக பல காலம் திகழ்ந்துள்ள நண்பர் மம்மாலெப்பையுடன் இணைந்து விளையாடிய பொற்காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.
அதற்கு முன்பாக, எல்.கே.மேனிலைப்பள்ளியின் சார்பில் பல ஊர்களில் கைப்பந்து அணிக்குத் தலைமையேற்று விளையாடியவர்.
பொதுவாக கிரிக்கெட், கால்பந்து போட்டிகளில்தான் வீரர்களுக்கு ரசிகர்கள் இருப்பர் என்ற எண்ணப் போக்கை மாற்றிய இவரது உற்சாகமான கைப்பந்து ஆட்டத்தால் கவரப்பட்டு, அவர் சென்று விளையாடும் இடங்களிலெல்லாம் ரசிகர்கள் மொய்ப்பது வழமை.
இத்தனை சிறிய வயதில், நம் யாவரையும் மீளாத் துயரில் விட்டுச் சென்றுவிட்டார்.
மர்ஹூம் அவர்களின் பாவப் பிழைகளை வல்ல அல்லாஹ் பொறுத்தருளி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாக வழங்கியருளவும், அன்னாரின் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமை அமையவும் நான் மனதார துஆ செய்கிறேன்.
Re:வாக்குபதிவு இன்று காலை து... posted byPalayam MAC (Kayalpatnam)[18 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 11291
தைக்கா தெரு , புதுக்கடை தெருவில் மிகுதியான அளவுக்கு கள்ள வோட்டு போடப்பட்டிருக்கிறது என்று நம்பத்தகுந்த செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது . ஒரு ஆசாரிக்கு பணம் கொடுத்ததை , என் உறவினர் ஒருவர் நேரில் பார்த்த சாட்சியும் உண்டு. ஆக , dear gentlemen , , யாரைப்பற்றியும் குறை கூறாதீர்கள். - comment # 11165
மேலே கூறப்பட்டிருக்கும் கருத்து முற்றிலும் பொய். சகோதரி மிஸ்ரிய அவர்களுக்கு அவர்களது மாமாவும், பெண் உறவினரும் சகோதரி ஆபிதா அவர்களுக்கு தோழிகளும் பூத் ஏஜன்ட்களாக இருந்ததாலும், வார்டு வேட்பாளர்கள் சாமு காக்கா, பாட்டா மஹ்மூது மற்றும் செயிது காக்கா ஆகியோருக்கு அவர்களது உறவினர்களே பூத் ஏஜென்ட்களாக இருந்ததால் கள்ள ஓட்டுகள் அங்கு போடப்படவில்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும். மேலும் சாமு மற்றும் செய்து கக்காமார்கள் இடையே கடும் போட்டி இருப்பதால் நிச்சயமாக அவர்கள் ஏஜண்டுகள் யவரையும் கள்ள வோட்டுகள் போட அனுமதித்திருக்கமாட்டர்கள்.
Note: இந்த வார்டில் எந்த ஒரு ஆசாரிக்கும் வோட்டு இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். சந்தேகம் இருந்தால் வாக்காளர் ஜாபிதாவை சரிபார்த்து தெரிந்துகொள்ளவும்.
ஒருவேளை வூடு போடவந்த வாக்காளர் யாராவது அந்த ஆசாரிக்கு அன்றைய கூலியை கொடுக்கும்போது பார்த்துவிட்டு தவறுதலாக உங்களுக்கு தெரிவித்து இருக்கலாம்.
Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ... posted byPalayam MAC (Kayalpatnam)[18 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 11257
"தம்பி நேற்று நீங்கள் எங்கு இருந்தீர்கள் ? ஊரிலா அல்லது சிங்கையிலா ? அமைதியாக வாக்களிப்பு நடந்த நேரத்தில் , அராஜகம் எங்கிருந்து வந்தது என்பது எங்களுக்கும் தெரியும் . மிகவும் உறுதியான சாட்சிகளுடந்தான் இதை சொல்கிறேன் . ஒரு பள்ளியில் , பெண்கள் அமைதியாக வாக்களித்த நேரத்தில் , உங்கள் ஆதரவு வேட்பாளர் அங்கு சென்று , அங்குள்ள பெண்களிடம் " அராஜகமாக " நடந்து கொண்டது , அனைவரும் அறிந்தது . மொபைல் போன் கேமராவில் இது பதிவாகி விட்டது ". comment ref 11247
தயவுசெய்து அந்த வீடியோ காட்சியை நாங்கள் பார்ப்பதற்காக வெலிடமுடியுமா. உண்மை என்னவென்று எல்லோரும் தெரிந்து கொள்ளலாம்.
சதுக்கை தெருவில் வைத்து சகோதரி ஆபிதா அவர்களை பல பெண்கள் சூழ்ந்துகொண்டு கண்ணியமற்ற, எழுத முடியாத வார்த்தைகளால் , தனிப்பட்ட விமர்சனங்களால் திட்டி இருக்கிறர்கள். நீங்களே உங்கள் தெருவில் இது பற்றி விசாரித்து தெரிந்து கொள்ளலாம்.
Re:காயல்பட்டின வாக்குப்பதிவு... posted byPalayam MAC (Kayalpatnam)[17 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 11192
செய்தி 1:
8 வது வார்டு பேரவை வேட்பாளரின் பூத் ஏஜன்ட் [edited] ஒருவர் கள்ள வோட்டு போடும் போது VAO அவர்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு , போலீசாரால் ரிமான்ட் செய்யப்பட்டு , பின்னர் சென்னை செல்வந்தர் மந்திரிகளை தொடர்புகொண்டு , ஐந்து மணிக்கு பிறகு வெளியில் விடப்பட்டார்.
நமது Comment:
இப்படியும் கள்ள வோட்டு போட்டு கேவலப்பட்டு ஜெயிக்க வேண்டுமா? பேரவை பெரியவர்களே இதற்க்கு என்ன சொல்லுகிறீர்கள்.
சென்ட்ரல் ஸ்கூல், முஹியட்டீன் ஸ்கூல் வார்டுகளில் நமது பெண்கள் சிலரும் கள்ள வோட்டு போட முயன்ற பொழுது அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு , சிறிது நேரம் காவலில் வைத்து , பின்னர் எச்சரித்து விடப்பட்டார்கள்.
நமது comment:
இதல்லாம் நமக்கு தேவையா? நமது பெண்கள் இந்த அளவுக்கு கீழிறங்கி என்ன சாதிக்கபோகிறார்கள்?
பேரவை பெரியவர்களே இதையும் நீங்கள் ஆதரிக்கிறீர்களா? அரசியல்வாதிகளிடம் சரண் அடைந்தால் இதுவும் நடக்கும், இதுக்கும் மேலேயும் கேவலமும், அவமானமும் தான் மிஞ்சும். இனிமேலாவது ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள்.
நமது ஊரில் நடமாடும் [edited] என்பவர் ஒரு கடையில் இருந்து மூன்று பாட்டில் சயனைட் வாங்கி சென்றாராம். அதை கொண்டு தான் விரலில் இருக்கும் மையை அளித்துவிட்டு மீண்டும் கள்ள வோட்டு போட முடியும்.
நமது comment
உடலை வருத்தி, விஷத்தை உபயோகித்து தோல் வியாதியை பெறவேண்டுமா? இப்படியும் கள்ள வோட்டு போடனுமா?
All the above news n comments are real and not fictitious. you can verify the same with your own sources and publish it as a news item, so that all kayalites abroad can know about all our tactics of bogus voting.
Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம... posted byPalayam MAC (Kayalpatnam)[16 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 10930
Dear Admin
We request you to publish our comment as a news item in your site.
It has been already issued as a fullscale notice/flyer and distributed all over kayal door to door. It is just the general questions and doubts in the hearts of kayalites about Ikiya Peravai . we hope kayalites abroad can also read the same if it is published as a news item.
It is for the public to decide, who to vote.
Let them decide, select & elect their own Chairman.
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளருக்கு ஆதரவு கோரி காக்கும் கரங்கள் நடத்திய கூட்டத்தில் அவமதிக்கப்பட்டதாக YUF செயலர் அறிக்கை! (Updated) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byPalayam MAC (Kayalpatnam)[16 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 10926
YUF செயலாளர் அவமானபடுத்தபட்டது ஒரு துரதிஷ்டமான செயல். இதுற்கு சம்பத்தப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.
காக்கும் கரங்கள் அமைப்பு YUF போன்ற பொது சேவை சங்கங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள்வேண்டும். அவர்கள் எல்லாம் நமது ஊரின் முன்மாதிரி இயக்கங்கள்.
காக்கும் கரங்களே, அரசியல்வாதிகளிடம் உஷாராக இருங்கள். அவர்களை பின் பற்றினால் உங்களது பெயர் தான் கேட்டு போகும். உங்களது பொது நல நோக்கு சந்தேகத்துக்கு உட்பட்டுவிடும். ஜாக்கிரதையாக இருங்கள்.
Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம... posted byPalayam MAC (kayalpatnam)[16 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 10913
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...
ஊர் ஒற்றுமை என்ற போர்வையில் தங்களது வேட்பாளரை ஆதரிக்கச் சொல்லும் ஐக்கிய பேரவையிடம் எங்கள் மனதில் தோன்றிய சில கேள்விகள்...
கடந்த 26-09-2011 அன்று ஜலாலியாவில் நடைபெற்ற அனைத்து ஜமாத்கள். சங்கங்கள் கலந்து கொண்ட நகராட்சி மன்ற தலைவர் தேர்வுக்குழு
கூட்டத்தில் கலந்து கொண்ட ஜமாத் பிரதிநிதிகள் அனைவரும் அவர்களது ஜமாத் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டவர்களா?
இந்த கூட்டத்தில் முச்சரிக்கை கையெழுத்திட்ட நான்கு வேட்பாளர்களின் பெயரையும் முற்கூட்டியே எல்லா ஜமாத்களுக்கும் அனுப்பி அவரவர் ஜமாத்
பொதுக்குழுவில் விவாதித்து பின்பு ஐக்கிய பேரவை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அவகாசம் வழங்காதது ஏன்?
முச்சரிக்கை கையெழுத்திட்டவர்களை மட்டும் வாக்கெடுப்பில் தேர்ந்தெடுப்பதா அல்லது விருப்ப மனு கொடுத்த அனைவரையும் கருத்தில் கொண்டு
விவாதித்து வாக்கெடுப்பு மூலமாக தேர்ந்தெடுப்பதா என்று கூட்டத்தில் தான் முடிவு செய்யப்பட்டது எனில் முற்கூட்டியே நான்கு வேட்பாளர்களின்
பெயர்கள் மட்டும் அச்சடிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் கொண்டுவரப்பட்டு ஓட்டெடுப்பு நடந்தது எப்படி?
பொது வேட்பாளரின் தாயார் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததன் மர்மம் என்ன? உங்கள் கூற்றுப்படி அவர்கள் டம்மி வேட்பாளர் என்றால் பேரவை
வேட்பாளருடன் சேர்ந்து அல்லவா மனு தாக்கல் செய்திருக்கவேண்டும். அதை விடுத்து வேட்புமனு தாக்கல் முடிவதற்கு சில நிமிடங்களுக்கு
முன்னால் அவசர கோலத்தில் மனுச் செய்ய வைத்தது ஏன்? அப்படி என்றால் ஒருவேலை பேரவை வேட்பாளர் இரட்டை வாக்குமுறை
குற்றச்சாட்டினால் நிராகரிக்கப்பட்டால் அவர்கள் தாயாரை பேரவை வேட்பாளராக அறிவிக்க திட்டமா? இது என்ன நியாயம்?
மற்ற மூன்று வேட்பாளர்களும் முச்சரிக்கையில் கையெழுத்திடவில்லை என்றும் அதனால் தான் ஐக்கிய ஜமாத் தேர்வுக்குழுவால் நிராகரிக்கப்பட்டார்கள்
என்று கூறும் நீங்கள் பேரவை வேட்பாளரின் தாயார் ஐக்கிய பேரவைக்கு விருப்ப மனு கொடுத்தார்களா? முச்சரிக்கையில் கையெழுத்திட்டார்களா?
ஓட்டெடுப்பில் அவர் பெயர் பரிசீலிக்கப்பட்டதா? பிறகு எப்படி அவர்களை மனு செய்ய வைத்தீர்கள்?
ஆமீனா பள்ளி ஜமாத்தில் நடந்த வேட்பாளர் தேர்வில் மூன்று பேர் போட்டியிட்டதில் 11 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாம் இடத்தில் வந்த
சகோதரியை எந்த அடிப்படையில் ஐக்கிய பேரவையின் பொது வேட்பாளராக அங்கீகாரம் செய்தீர்கள்.
கடந்த 10-10-2011 அன்று நடந்த ஐக்கிய பேரவை வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய பேச்சாளர் ஒருவர் கள்ள ஓட்டு போட்டே ஜெயித்து
விடுவோம் என்பது போல் அறைகூவல் விடுத்தார். மேடையில் இருந்த ஐக்கிய பேரவை பெரியவர்கள் அவரின் அந்த பேச்சை ஆட்சேபிக்காமல்
கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள். அப்படி எனில் கள்ள ஓட்டு போடுவதை ஐக்கிய பேரவை ஊக்குவிக்கிறதா? ஆதரிக்கிறதா? கள்ள ஓட்டு
போட்டுத்தான் உங்கள் வேட்பாளரை ஜெயிக்க வைக்க வேண்டிய அவசியம் என்ன?
அதே கூட்டத்தில் பேசிய ஐக்கிய பேரவையின் அதிகாரப்பூர்வ பேச்சாளர் ஏதோ பாதுகாக்கப்பட்ட ஒரு பரம ரகசியத்தை வெளியிடுவது போல் ஒரு
கடிதத்தை குறிப்பிட்டு பேசினார்கள். அது என்னவெனில் பேரவை வேட்பாளர் சகோதரி மிஸ்ரிய்யா அவர்கள் ஏற்கனவே கடந்த 2001ம் ஆண்டு
தலைவர் பதவிக்கு போட்டியிட பேரவைக்கு விருப்ப மனு அளித்ததாகவும் ஐக்கிய பேரவையின் வேண்டுகோளை ஏற்று சகோதரி வஹிதா அவர்களுக்கு
விட்டுகொடுத்து போட்டியில் இருந்து விலகிக் கொண்டதாகவும் தெரிவித்தார்கள்.
இந்த கடிதம் / செய்தி உண்மையெனில் இது பற்றி ஏன் அனைத்து ஜமாத்கள் தேர்வுக்குழுக் கூட்டத்தில் தெரியப்படுத்தவில்லை?
ஐக்கிய பேரவை வெளியிட்ட அறிக்கையில் இதுபற்றி ஏன் குறிப்பிடப்படவில்லை.
அந்த கடிதத்தின் நகலை சகோதரி மிஸ்ரிய்யா அவர்கள் அனைத்து ஜமாத்தார்களுக்கும் கொடுத்த விருப்ப மனுவோடு ஏன் இணைத்து அனுப்பவில்லை.
அந்த கடிதம் உண்மையெனில் அது குறித்து பேசிய பேச்சாளரும் அதனை ஆமோதித்த ஐக்கிய பேரவை நிர்வாகிகளும் அல்லாஹ் மீது சத்தியமிட்டு
இது உண்மை என உறுதி கூறுவார்களா?
அதே கூட்டத்தில் பேசிய மற்றொரு பேச்சாளர் இது புறநகர் மக்களுக்கு வேட்பாளரை அறிவித்து அறிமுகம் செய்யும் கூட்டம் என்றார். அப்படியெனில்
ஏறத்தாள ஏழாயிரம் வாக்குகள் கொண்ட புறநகர் சகோதர சமுதாய பிரதிநிதிகளோடு வேட்பாளர் தேர்வு சம்பந்தமாக ஏதேனும் கலந்து
ஆலோசித்தீர்களா? எல்லா சகோதர சமுதாய மக்களின் ஆதரவோடுதான் ஐக்கிய பேரவை வேட்பாளரை அறிவித்தீர்களா?
அதே கூட்டத்தில் புறநகர் சகோதர சமுதாயத்தில் இருந்து இரண்டு பேர் மட்டும் தான் கலந்து கொண்டு பேசினார்கள். அப்படியென்றால் மற்ற சமுதாய
மக்களின் பிரதிநிதிகளை அழைக்கவில்லையா? உங்களுக்கு ஆதரவு கொடுத்தவர்களை மட்டும்தான் மேடை ஏற்றினீர்களா?
மெகா என்ற தன்னார்வ அமைப்பு நடத்திய வேட்பாளர்கள்- வாக்காளர்கள் நேர்காணலுக்கு உங்கள் பேரவை வேட்பாளரை பங்கு கொள்ளச் செய்யாதது
ஏன்? மக்களின் நியாயமான கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லை என்ற காரணத்தினால் தான் அதை தவிர்த்தீர்களா?
கடந்த 12-10-2011 அன்று ஜலாலியாவில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு பெண் வாக்காளர்களை வாகனங்களில் கூட்டிச் சென்றதும், அங்கு
தேனீர் மற்றும் திண்பண்டங்கள் வழங்கப்பட்டதும் தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பானது அல்லவா?
அங்கு பேசிய பேச்சாளர் ஒருவர் மற்ற வேட்பாளர்களின் பொது சேவை குறித்து குறை கூறி பேசியது ஏன்? தங்களது வேட்பாளரை பற்றி
பெருமையாகக் கூறிக்கொள்ள சேவைகள் ஏதும் இல்லை என்ற காரணத்தினாலா?
அதே பேச்சாளர் தான் பேசும்பொழுது நகராட்சி தலைவிக்கு திறமையானவர்கள் தேவையில்லை என்ற கருத்தை கூறியிருக்கிறார். அதனால் தான்
திறமையானவர்களை நீங்கள் நிராகரித்தீர்களா? அந்த கூட்டத்தில் பொதுமக்கள் வேட்பாளரிடத்தில் கேள்விகள் கேட்க அனுமதிக்காதது ஏன்? மக்களின்
நியாயமான சந்தேகங்களுக்கு உங்களிடம் பதில் இல்லையா?
தேர்தல் களத்தில் உண்மைகள் வெற்றி பெற்றால்தான் நாம் எதிர்பார்க்கும் நேர்மையான நகராட்சி அமையும். பொதுமக்களே! சிந்திப்பீர்! சிந்தித்து
வாக்களிப்பீர்!
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byPalayam MAC (Kayalpatnam)[13 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 10534
"ஓட்டுப் போடும் விஷயத்தில் மத்திய காயல் பகுதியினரை விஞ்சிட யாராலும் முடியாது. 10 நிமிடங்கள் போதும்... அவர்கள் பெட்டியையே நிறைத்து விடுவார்கள்..."
நண்பர் ஷாஜஹான் என்ன சொல்ல வருகிறார் - கள்ள வோட்டு போட்டுதான் ஜெயிகனுமுன்னு சொல்கிறாரா? அல்லது கள்ள வோட்டு போட்டு ஜெயிசுடுவோம்னு பறை சாற்றுகிறாரா?
_____________________________________________
"இந்த ஐக்கியப் பேரவையின் தினசரி நிகழ்வுகளில் நான் தொடர்புடையவன் அல்ல என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். அது செய்யும் நல்லவற்றில் நானும் இணைந்து பணியாற்றுவேன். எனக்கு கருத்து வேறுபாடுள்ள அம்சங்களில் ஒதுங்கிக்கொள்வேன். "
அமானுல்லாஹ் காகா அவர்களே, இந்த தேர்தல் விஷயத்தில் எங்களுக்கு கருத்து வேறுபாடு உள்ளது. அதனால் தான் ஒதுங்கி இருந்து எங்கள் கருத்துகளை பதிவு செய்கிறோம்
."நம்முடைய வேட்பாளர் மிஸ்ரிய்யா அவர்களும் பேரவைக்கு விருப்ப மனு கொடுத்தார்கள். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பும் நான் விருப்ப மனு அளித்தேன். அன்று என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை. இன்றாவது என்னைத் தேர்ந்தெடுங்கள் என்று உரிமையோடு கேட்டுள்ளார்"
இந்த விஷயத்தை இவ்வளவு நாள் ஏன் மூடி மறைத்தீர்கள். இந்த மனுவை ஐக்கிய பேரவை தேர்வு கூடத்தில் வெளிப்படுத்தி இருக்கலாமே?
"கையெழுத்திட மறுத்த எதிரணி வேட்பாளரிடம் கையெழுத்தைப் பெறுவதற்காக இரண்டு நாட்கள் நானே அலைந்தேன்... அவர் சார்ந்த ஜமாஅத் நிர்வாகிகள் மூலம் அணுகினோம்... அவரது நெருங்கிய தோழியர் மூலம் அணுகினோம். எதற்குமே அவர் வளைந்து கொடுக்கவில்லை"
வேட்பாளரின் பெரியவாப்பா அல்லது அவரது பெரியாவாப்பா மக்கள், காக்காமார்கள் மூலம் அணுகி இருக்கலாமே.
__________________________________________
பின்னர் நடைபெற்ற கூட்டத்தில், “பேரவையின் முச்சரிக்கையில் கையெழுத்திட்டவர்கள் 4 பேர். கையெழுத்திடாதவர்கள் 3 பேர்... அனைவரின் பெயர்களையும் வாக்கெடுப்பில் சேர்க்கலாமா? அல்லது கையெழுத்திட்டவர்களின் பெயர்களை மட்டும் பரிசீலனைக்கு எடுக்கலாமா?” என்று அக்கூட்டத்தை நெறிப்படுத்திய நான் கேட்டேன். அனைத்து ஜமாஅத்தாரும் ஒருமித்து, “கையெழுத்திட்டவர்களை மட்டுமே பரிசீலிக்க வேண்டும்” என்றனர். இருந்தும் நான், “இதில் மாற்றுக்கருத்து உள்ளதா?” என்று கேட்டேன். ஐந்து நிமிடங்கள் வரை மவுனமே நீடித்ததால், “உங்கள் அமைதியை அனுமதியாக எடுத்துக்கொள்கிறேன்” என்று கூறி, பின்புதான் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இப்படி நீங்கள் ஜனநாயக முறைப்படி நடந்திருந்தாலும், நான்கு பெயர்கள் மட்டுமே அச்சடிக்கப்பட்ட வாக்கு சீட்டுகள் தானே அங்கிருந்தது. ஒரு வேலை அணைத்து வேட்பாளர்களையும் பரீசீலிக்க வேண்டி வந்திருந்தால் வோட்டடுப்பு எப்படி நடத்தி இருப்பீர்கள்.
_______________________________________
“தாய் - மகளை எதிர்த்துப் போட்டி” என்று வெப்சைட்டில் கருத்து எழுதியிருக்காங்க... எல்லாத்தையுமே திறந்தா சொல்ல முடியும்? வாக்குச் சாவடியில் அதிக முகவர்களை வைத்துக்கொள்வதற்காக செய்யப்படும் சில உள்நடவடிக்கைகள்தான் இவை. “ஏன், அதற்கு இரண்டாவது இடத்தில் வந்தவரை வைத்திருக்கலாமே...?” என்று ஒரு கேள்வி. ஒருவேளை அவர் வாபஸ் பெறாமல் விட்டுவிட்டால் வாக்குகள் பிரிந்துவிடுமே என்ற அச்சம்தான் அதற்குக் காரணம்
தாயார் முச்சரிக்கையில் கையழுத்து. போட்டார்களா? அவர்களுக்கு ஒரு நீதி மற்ற சஹோதரிகளுக்கு ஒரு நீதியா?
_____________________________________________
“ஏன், அதற்கு இரண்டாவது இடத்தில் வந்தவரை வைத்திருக்கலாமே...?” என்று ஒரு கேள்வி. ஒருவேளை அவர் வாபஸ் பெறாமல் விட்டுவிட்டால் வாக்குகள் பிரிந்துவிடுமே என்ற அச்சம்தான் அதற்குக் காரணம்
உங்களை நம்பிய வஹீதா லாத்தவை நீங்கள் நம்பாமல் இப்படி பேசி இருப்பது துரதிஷ்டமே
ஐக்கியப் பேரவையின் இந்த நடவடிக்கைகள் முடிவல்ல, முயற்சி மட்டுமே! உங்களை நான் மன்றாடி, மனம் வருந்திக் கேட்டுக்கொள்கிறேன்... தயவுசெய்து ஊர் மானத்தைக் காப்பாற்றுங்கள்...
யாரின் வெற்றி தோல்வியை பொருத்தும் ஊரின் மானம் போகாது.
காயல் பதி என்றுமே அதன் பெருமையை யாருக்காகவும் இழக்காது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross