Re:...உண்மை முகம் posted byMOHUDOOM (AL-HASA)[09 March 2014] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33637
இரு திராவிட கட்சிகளும் தேர்தல் சமயத்திலோ அதற்கு பின்போ மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அந்த கட்சியுடன் இணைத்து மந்த்ரி பதவியை பெறுவது வழக்கம் .ஆனால்இரு கட்சி தலைவர்களும் ஒரு சமயத்தில் பா ஜ க யுடன் கூட்டணி கிடையாது என்று சொன்னவர்களதாம் .
கருணாநிதி அவர்கள் பா ஜ க வை தீண்ட தகாத கட்சி யன்று சொல்லி பிறகு அதனுடன் கூட்டணி வைத்து கொண்டார் .ஜெயலலிதா அவர்கள் ஒரு அமைப்பு நடத்திய மாநாட்டில் இனி ஒரு போதும் பா ஜ க யுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்றார் . பிறகு அதனுடன் கூட்டணி வைத்து கொண்டார் .
இது ஒன்றும் ஆச்சரியமோ,அதிர்ச்சியான விஷயமோ இல்லை.
ஏன் என்றால் இந்த கட்சிகள் ஒன்றும் முஸ்லிம்களால் நடத்தக்கூடிய கட்சிகள் அல்ல ஒவ்வரு கட்சியுமே ஆட்சியை பி்டிக்க வேன்டும். அதிகாரத்தை அனுபவிக்க வேன்டும். என்பதற்ககாகவே கட்சியை நடத்துகின்றன இதில் எந்த கட்சியையும் குற்றம் சொல்ல முடியாது .
முஸ்லிம் நலனா...? பதவியா..? எனறு வரும் பொழுது இந்த கட்சிகள் முஸ்லிம் நலனை கண்டுகொள்வதில்லை . பதவிககாவே முஸ்லிம் விரோத கட்சியுடன் இந்த கட்சிகள் கூட்டணி சேர்த்தாலும் நாம் அதை ஆதரிக்க முடியாது . இது இவ்வாறு இருக்க
துல்லியமாக கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் உள்ளது .
ஜெயலலிதா அவர்கள் பாரளுமன்ற . தேர்தலோ அல்லது தமிழக சட்டமன்ற தேர்தலோ நடைபெறாத காலத்தில் பா ஜ க மத்தியில் ஆட்சயில் இல்லாத நேரத்தில் ( பதவியை பெறுவதற்காக என்று சமாளிக்க முடியாது )
குஜராத்தில் வெற்றி பெற்ற மோடி மற்றும் பா ஜ க தலைவர்களை தமிழகத்துக்கு அழைத்து விருந்து கொடுத்தார் என்றால் ஆட்சி அதிகாராம் மற்றும் பதவி சுகத்தையும் தாண்டி எதோ ஒரு விஷயம் யுள்ளது என்பது சிந்திக்க வேண்டிய தருணம் இது .
அது தண்ணீரை விட ரத்தத்துக்கு அடர்த்தி அதிகம் என்பது மட்டும் காரணமாக இருக்க முடியாது. குஜராதில் முஸ்லிம்களின் இரத்தத்தை ஒட்டி வெற்றி பெற்றதின் காரணமாக கூட இருக்கலாம். என்று சொல்லி தெரியவேண்டியது இல்லை.
அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; என்று
தொடங்கும் இந்த வசனத்தை மனதில் நிறுத்தி உங்கள் வெற்றி
இறைவனின் நாட்டப்படி கிடைத்த வெற்றி ; என்று எண்ணி சுய விருப்பு வெறுப்பின்றி, .போட்டி பொறாமைகளை மறந்து மக்களுக்கு நல்லது செய்வது மட்டுமே உங்கள் நோக்கமாக இருக்கட்டும்
மறுமையில் ஒவ்வருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புக்காக விசாரிக்கபடுவர்கள் என்ற இறை வசனத்தை
எண்ணி அறிவித்த ஒவ்வொரு தேர்தல் அறிக்கையையும் செயல் படுத்த வாழ்த்துக்கள்.இந்த வெற்றியுன் மூலம் நமதூர் வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் பாடு படுங்கள், மக்கள் உங்களிடம் அதையே எதிர்பார்கிறோம் உங்கள் பிரசாரத்தின் போது நீங்கள் வாக்குறுதி அளித்ததுபோல் , லஞ்சம் அற்ற நகராட்சி மலர பாடு பட வேண்டும்.
! மக்களின் மனநிலையை பேரவை புரிந்து .இனி பேரவை தனது செயல்பாடுகளை சுய பரிசோதனை செய்யவேண்டும். வாக்கு பெற்ற விபரத்தை பார்த்தால் அனைத்து மக்களின் ஓட்டு சகோதரி ஆபிதாவுக்கு கிடைத்துள்ளது தெரிகிறது!
.
தற்போது ஊரில் ஏற்பட்டுள்ள மனக்கசப்புகள், பகைமைகள் ,ஆகிய வற்றை போக்க,நம் ஊரின் ஒற்றுமையை காப்பாற்ற தாங்கள்ஐக்கிய ஜமாஅதையும்
மற்ற அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லுங்கள். நீங்கள் பெற்றுள்ள வெற்றியை விட இனி பெறப்போகும் வெற்றிதான் முக்கியம்.
.............................. இறுதியாக
சிறந்த நகர்மன்றமாக நமது காயல் நகர் மன்றத்தின் செயல்பாடுகள் அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் துணை நிற்பானாக...
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. 1:5-7
“என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன்” . “இன்னும் அவை என்னிடம் நெருங்காமலிருக்கவும் என் இறைவனே! உன்னிடம் காவல் தேடுகிறேன்”. 23:97-98
“எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது”. “எங்கள் இறைவா! காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்”. 60:4-5
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bymohudoom ali sahib (al-hasa)[05 October 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9606
மெகா வின் அறிக்கை கழுவுற மீனில் நழுவுற மீன் என்பதா ? அல்லது குழம்புற குட்டையில் மீன் பிடிபவர்கள் என்பதா ? அல்லது கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பதா ?அல்லது கீழ விலுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை யன்று சொல்பவர்களை போலவா ? பாம்பும் சாகனும் கம்பும் முரியகூடாது என்று நீனைபவர்களை போலவா ? எந்த பழமொழி உங்களுக்கு பொருந்தும் மேகாவே
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை?” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bymohudoom ali sahib (al-hasa)[04 October 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9531
நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். போலி ஒற்றுமையோ நிஜ ஒற்றுமையோ தயவு செய்து ஒன்று சேருங்கள். சமுதாய நலனுக்கு என்று சொல்லி சொல்லியே பல பிரிவுகளாய் பிரிந்து இந்த ஊர் பலவீனப்பட்டு போனது தான் மிச்சம்.
இயக்கவாதிகளே இயக்க மாயையிலிருந்து மீளுங்கள்.
கட்சிகரர்களே கட்சி மாயையிலிருந்து மீளுங்கள் சமுதாய நலன் நாடும் நல்லுள்ளங்களே இயக்க தலைமைகளிடம் ஒன்று பட வற்புறுத்துங்கள். வலியுறுத்துங்கள்..
"எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.
எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (அல் குர்ஆன்-2:286)
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!” ஆமீன்.
அன்று சொன்னது posted bymohudoom ali sahib (al-hasa)[22 March 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3470
கடவுளோடும் மக்களோடும் தான் கூட்டணி' என்று முழங்கி கடந்த தேர்தல் வரை தனிக்கடை போட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்பார்த்த 'வியாபாரம்' நடக்காததால், வழக்கமான அரசியல்வாதிகள் போல் கொள்கையை தூக்கி மூட்டை கட்டிவிட்டு, போயஸை நோக்கி நடையைக் கட்டி நாற்பத்தியொரு தொகுதிகளை அள்ளிக்கொண்டு வந்துவிட்டார்.
கடந்த தேர்தல் வரை விஜயகாந்த் கட்சிக்கு கணிசனமான வாக்கு கிடைத்ததற்கு அதிமுக மற்றும் திமுகவிற்கு எதிரான வாக்குகளும், மாற்றத்தை விரும்பும் சிலரின் வாக்குகளும் தான் காரணமாக அமைந்தது. அதோடு சில இடைத்தேர்தலில் அண்ணாதிமுக தேர்தல் புறக்கணிப்பு செய்ததும் விஜகாந்தின் வாக்கு வங்கி உயர காரணமாகியது. ஆனால் இப்போது விஜயகாந்த் தனது கொள்கையை விட்டு கூட்டணி கண்டுள்ளதால் அவருக்கு இருப்பதாக கூறப்படும் எட்டு சதவிகித வாக்கில் இறங்குமுகமே ஏற்படும் என்கின்றன்றனர் அரசியல் ஆய்வாளர்கள். மேலும் விஜயகாந்திற்கு அதிமுக ஒதுக்கியுள்ள சீட்டுக்கள் மிக மிக அதிகம் என்றும், பாமகவை கழகங்கள் மாறி மாறி வளர்த்து விட்டது போல், விஜயகாந்தின் வளர்ச்சிக்கு ஜெயலலிதா தன்னையறியாமலேயே அடித்தளம் அமைத்து தந்துவிட்டார் என்ற கருத்தும் அரசியல் அரங்கில் நிலவுகிறது.
அடுத்து அரசியல்வாதிகள் அணிமாறுவதும், அணி சேர்வதும் சகஜம்தான் என்றாலும், கூட்டணி வைத்து போட்டியிடுபவர்களை கடந்த காலங்களில் கடுமையாக விமர்சித்தவர் விஜயகாந்த். அதிலும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இவரின் கடும் தாக்குதலுக்கு உள்ளானார். ராமதாஸ் பற்றி விஜயகாந்த் அன்று;
கூட்டணி சேர்வது பற்றி விஜயகாந்தின் சூப்பர் விளக்கம் அன்று;
''திமுக, அதிமுக ரெண்டு கட்சிகளோட கொள்கை என்ன தெரியுமா? கூட்டுச்சேர்; கொள்ளையடி;பங்குபிரி என்பதுதான்'!
AWARENESS posted by ali sahib (al-hasa)[14 March 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3271
தமிழகத்தின் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளை கொண்ட நன்னிலம் சட்டமன்றத் தொகுதி தவிர, ஏறத்தாள 60க்கும் மேற்பட்டத் தொகுதிகள் 80ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களை கொண்டவை.
நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் இருந்தாலும் இன்றுவரை அந்த தொகுதியில் எந்த ஒரு முஸ்லிம் வேட்பாளரோ அல்லது முஸ்லிம் அரசியல் கட்சியோ தமிழகத்திற்காக இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடவேயில்லை என்பது ஆச்சரியகரமான, அதே சமயம் வருத்தத்திற்குரிய செய்தியாகும்.
தமிழகத்தில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் முப்பதுக்கும் அதிகமாக இருக்கின்றது. அவைகளில் சிலவற்றை இங்கே காணலாம்:
1. நன்னிலம்,2. கடலாடி,3. கேயம்புத்தூர் மேற்கு ,4. மதுரை மத்தி, 5. திருச்சி, 6. சேலம், 7. அரவக்குறிச்சி, 8. குடியாத்தம், 9. ராணிப்பேட்டை,10. ஆற்காடு,11. சென்னை துரைமுகம்,
இதுதவிர, தமிழகத்தில் 30 சட்டமன்றத் தொகுதிகள் என்பதாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை. 23 சட்டமன்றத் தொகுதிகள் அறுபதாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை. தமிழக முஸ்லிம்கள் அனவைரும் ஒரே குடையின் கீழ் ஒன்றினைந்து நமக்கு நாமே உருவாக்கும் அரசியல் அமைப்புக்கு வாக்களிப்போம் எனில் தமிழகத்தில் மாத்திரம் 45-55 சட்டமன்றத் தொகுதிகளிலும், 4-6 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நமக்கு வெற்றி நிச்சயம் என்பதை உறுதியாகக் கூறமுடியும். அனைத்து அரசியல் கட்சிகளையும் நம் காலடியில் விழ வைப்பதுடன், தமிழக அரசியலைப் பொறுத்தவரை நாம் வகுத்ததுதான் சட்டம் என்கிற நிலையையும் உருவாக்க முடியும்.
தமிழகத்தின் 6 மாநகராட்சிகளில் முஸ்லிம்களே மேயர்கள் என்பதையும் உறுதியாகக் கொள்ளலாம். சென்னையைத் தவிர தமிழத்தில் மற்றுமுள்ள மாநகராட்சிகளில் ஒன்றரை இலட்சம் வாக்குகள் பெறுபவரே மேயர். மதுரை, திருச்சி மற்றும் கோவை மாநகராட்சிகள் 3 இலட்சம் முஸ்லிம் வாக்களர்களைக் கொண்டவை. சேலம் மற்றும் நெல்லை மாநகாராட்சிகள் இரண்டரை லட்சம் முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை.
சட்டசபை தொகுதிகளில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள் ஒருங்கிணைந்து தமது வாக்குகளையும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கே அளிப்பார்கள் எனில், தமிழக சட்சடசபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் முஸ்லிம்களே என்கிற நிலை ஏற்படும். முஸ்லிம்களின் சம்மதம் இல்லாமல் எந்த ஒரு சட்டமும் நிறைவேற்றப்பட முடியாது என்கிற நிலையை தமிழக சட்டசபையிலும் உருவாக்கமுடியும்.
தமிழகத்தில் மட்டுமில்லாது, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா என இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் உள்ள சட்டசபைகளிலும் இந்நிலையே உருவாகும். இதே நிலை தொடருமெனில் நாடாளுமன்றத்திலும் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை பெரும்பான்மை நிலைக்கு உயரும்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 400 முதல் 800 பள்ளிவாயில்களை ஒன்றிணைப்பது மிகவும் எளிதான காரியம். தமிழகத்தில் உள்ள 8000 பள்ளிவாயில்களைச் சார்ந்த ஒன்றரை கோடி முஸ்லிம்களும் ஒரு பொது நலனுக்காக ஒன்றிணைவார்கள் எனில், நாம் நினைக்கும் எதையும் சாதிப்பது எளிது என்பதை முஸ்லிம்கள் அனைவரும் உணர வேண்டும்.
இது நேர்த்தியான, அதேசமயம் யாருக்கும் எந்தவித ஆபத்தும் இல்லாத அமைதியான முடிவு என்பதையும் முஸ்லிம்கள் அனைவரும் உணர வேண்டும். தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் அரசியல் செல்வாக்கு மற்றும் ஆட்சி அதிகாரம் பெற வேண்டும் என்பதற்கு இதைத்தவிர ஒரு சரியான தீர்வு இல்லையென்றே சொல்ல வேண்டும். அரசியல் செல்வாக்கு மற்றும் ஆட்சி அதிகாரம் இன்றி இந்த பூமியில் நாம் எதையுமே சாதிக்க முடியாது என்பது உறுதி.
இதுபோன்ற பிற அரசியல் கட்சிகளுக்காக கொடி தூக்கி அவர்களை வெற்றிபெற செய்ய வேண்டுமா? அவர்கள் வெற்றி பெற்று ஆட்சிபீடம் ஏறிய பின்பு நம்முடைய அடிப்படை உரிமைகளுக்காக அவர்களிடம் கையேந்தி நிற்க வேண்டிய நிலை தேவைதானா?
தேர்தல் காலங்களில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறோமே. ஏன்? முஸ்லிம்கள் முஸ்லிம் வேட்பாளருக்கே வாக்களிக்கட்டும். முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிபெற்று வந்த பின்புள்ள நிலைமையை ஆய்ந்தறிந்து, முஸ்லிம்களுக்கு நல்லது செய்யக்கூடியவர்களுக்கு நம்முடைய ஆதரவை வழங்கலாம். மானம் மற்றும் சுயமரியாதை ஈமானின் ஒரு பகுதி என்பதை முஸ்லிம்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
இக்கட்டுரையை மீண்டும் மீண்டும் படியுங்கள். முஸ்லிம்களுக்கு நன்மை செய்யாத எந்த ஒரு அரசியல் கட்சியையும் நம்பாதீர்கள். முஸ்லிம்களே! அனைவரும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைவோம். நமது ஒற்றுமையின் மூலம் நாம் விரும்பியவைகளை உடனடியாகப் பெற முடியும். இந்த முடிவை சிந்தித்து செயல்படுத்துவது முஸ்லிம்களாகிய நம்மீது கடமையாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைவோம். நம் அன்றாட வாழ்க்கை எளிதாக அமையும். நாம் நமது அடிப்படை உரிமையான இறைவழிபாட்டு உரிமைகளை தங்கு தடையின்றி தொடரலாம். நம் வருங்கால தலைமுறையும் பாதுகாப்பான வாழ்வைத் தொடரும்.
தேர்தலில் நாம் வாக்களிக்காமல் புறக்கணிப்போம் எனில் நஷ்டம் நமக்குத்தான். ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றது. நாம் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் ஏராளமான மாற்றங்களை கொண்டுவரும். அரசை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நம்மில் சிலர் வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள். அதனால் ஏற்படும் நஷ்டம் நமக்கே! மற்ற அரசியல் கட்சிகள் நம்மை எள்ளி நகையாடுவதுடன், அதிக பயனடைவது அவர்களே என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனதருமை முஸ்லிம் சொந்தங்களே! நமக்கென ஒரு தனி அரசியல் அமைப்பு காண்பதும், அந்த அமைப்பின் மூலம் நமக்காக பாடுபடக்கூடிய முஸ்லிம் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்புவதுமே இனி நம்முடைய தலையாய பணியாக இருக்க வேண்டும்.
நாளைய உலகம் நம் கையில் என்பதை தெளிவாக தெரிந்த நாம், மரணித்த பிணம் போல் நடமாட வேண்டுமா? நாம் நம்முடைய குறிக்கோளில் தெளிவாக இருப்போம். அனைத்து அரசியல் கட்சிகளையும் நம் பின்னால் கைகட்டி நிற்க வைப்போம். அமைதியாக நாம் நம்முடைய குறிக்கோளை எட்டுவோம். நமது உறுதிமொழி நம் வருங்கால தலைமுறையின் வாழ்வுரிமைக்கு அடிப்படையாக அமையட்டும். எந்த காரணம் கொண்டும் முஸ்லிம்களின் ஒற்றுமை என்னும் அடிப்படை குறிக்கோளை விட்டு நம் கவனம் சிதறாமல் இருக்கட்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் இதற்கு அருள் புரியட்டும்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross