உண்மை உரைத்தீர் posted byMohamed Abdul Cader (Saudi Arabia)[29 December 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24815
காதர் காக்கா, நான் உங்களின் கவிதையின் அன்பு ரசிகன்.
உண்மையை சொன்னீர், இன்னும் உங்களிடமிருந்து புதுக் கவிதையையும் எதிர்ப்பார்க்கிறேன். தொடருட்டும் உங்களின் கவிப்பணி, தந்தைக்கு தப்பாமல் பிறந்த மகன் நீ.
உன் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தித்தவனாக. ஆனால் ஒன்று மட்டும் நிஜம் தங்கள் தகப்பனாருக்கு கவிதையில் இணை அவர்கள் மட்டுமே!
Re:... posted byMohamed Abdul Cader (Saudi Arabi)[22 December 2012] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24727
நம் காயல்பட்டினம் முன் போன்ற ஒரு கட்டுப்பாட்டுடன் இல்லை என்பது உறுதியாக கூற முடியும்.
முந்தய காலத்தில் ஊருக்கு புதியதாக யார் வந்தாலும் தெரிந்து விடும். இப்போதெல்லாம் எவன் எவனோ ஊருக்கு பிழைக்க வருகிறான். அப்படியே ஊருக்கு மத்தியில் வீட்டையும் வாங்கி காயல்பட்டணத்து காரனாகவே மாறி விடுகிறான். வந்தோரை வாழ வைக்கும் இந்த காயல் பட்டினத்தில் மண்ணின் மைந்தர்கள் நாடோடியாக திரிகிறோம். இதற்கு நல்ல தீர்வு வர வேண்டுமானால் நம்மில் ஒற்றுமை ஒன்றே அவசியம்.
அம்மாவுக்கு ஜே posted byAbdul Cader (Saudi Arabia)[08 November 2012] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23601
அன்பிற்கினியவர்களே, கருது பதிவு செய்த நல உள்ளங்களே , எங்கள் அம்மா என்றுமே ஒரே பதிலை தான் சொல்வார்கள், நேற்று, இன்று, நாளை ஒரு பேச்சு என்ற இடமே இல்லாமல் ஒரே பேச்சாக தான் சொல்வார்கள், புரட்சி தலைவி அம்மா அவர்கள் மின் வெட்டுக்கான காரணத்தை ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள் கூடிய சீக்கிரமே நல்ல ஒரு விடுவு காலம் வரும்.
அது வரையிலும் மக்கள் தயவு செய்து பொறுமை காக்க முதலமைச்சரின் சார்பில் அகில உலக அம்மா பேரவையின் பிரதிநிதி கேட்டுக்கொள்கிறேன்.
வாழ்த்துக்கள் posted byAbdulcader (Saudi Arabia)[06 August 2012] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21081
தம்பி ஸாலிஹ் மற்றும் ஆசிரியர் குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த பத்திரிக்கை நடுநிலைமயுடனும் தரமான கருத்துக்களுடனும் வெளிவந்து அனைவரது பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகிறேன்.
கனிவான வேண்டுகோள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
தம்பி வெளி நாடுகளில் வசிக்கும் எங்களை போன்றவர்களுக்கு தங்கள் பத்திரிக்கை வாசிக்கும் வகையில் இணையத்தளத்தில் வெளியிட்டால் மிகவும் நல்லதாக அமையும். தாங்கள் இந்த விடயத்தில் நல்ல முடிவு எடுப்பீர்கள் என்ற எதிர்பார்ப்புடன்.
நகராட்சி கூட்டங்களில் ஊடக... posted byAbdul Cader (Saudi Arabia)[19 July 2012] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20050
சகோதரர் ஜலாலி அவர்களின் கோரிக்கை நியாயமானதே. குற்றம் உள்ள மனது தான் குறுகுறுக்கும் என்பார்கள், அதனடிப்படையில் தான் உறுப்பினர்கள் ஊடகத்தினரை அனுமதிக்க மறுக்கிறார்கள்.
அவ்வாறு இச்செய்தி உண்மைக்கு புறம்பாக இருந்தால் அனைத்து உறுப்பினர்களும் பொது மக்களுக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை விட வேண்டும்.
பார்த்ததில் ரசித்தது posted byAbdul Cader (Saudi Arabia)[19 July 2012] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20049
அன்பின் காயலர்களே! எங்களை தவிக்க விட்டுட்டு நீங்கள் சந்தோஷமாக இருப்பதை பார்த்து எங்களுக்கும் ஆசை தூண்டுகிறது. புகைப்படத்தில் மிகுதியான நண்பர்களை பார்த்ததில் சந்தோசம்.
குறிப்பாக கவிமகன் காதர், காக்கா நீங்கள் மட்டும் தொட்டிக்குள்ளே இறங்கினாலே பாதி தண்ணீர் வெளியே வந்து விடுமே எப்படி மற்றவர்கள் குளிக்க முடியும்?
மஜா பண்ணும் போது மட்டும் வேற்றுமைகளை களைந்து சந்தோஷமாக இருப்பது போல் எல்லா காரியங்களிலும் ஒற்றுமையுடன் சகோதர வாஞ்சையுடனும் செயல் பட்டு நம் ஊரையும் நம் சமுதாயத்தையும் முன் மாதிரியான ஊராக என்றென்றும் சிறந்து விளங்க வல்ல இறைவனிடம் இறைஞ்சுவோமாக.
வண்ணார்குடி கடைத் தெரு, அ... posted byEngr.Abdul Cader (Saudi Arabia)[12 July 2012] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19966
புதிய சாலைகள் அமைப்பது எல்லாம் சரிதான். ஆனால் எத்தனை நாட்களுக்கு அது நிலைத்து இருக்கும் என்ற கவலை தான் என் மனதில் தோன்றுகிறது.
ஏனெனில் புதிதாக வீடு கட்டுபவர்கள் மணலும் ஜல்லியும் ரப்பிஷும் கொட்டி விட்டு வேலை முடிந்ததும் இடத்தை சுத்தம் செய்யாமல் அப்படியே தனக்கு என்ன வேண்டி கிடக்கிறது என்று அலட்சியமாக இருந்து விடுகிறார்கள்.
எனவே நகராட்சி புதிதாக வீடு கட்டுபவர்களிடம் நியாயமான வரி விதித்து வேலை முடிந்ததும் நகராட்சியே அதை அப்புற படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
செய்தி: 2012-2013-ஆம் கல்வியாண்டில் பொறியியற் கல்லூரி கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுக்கான இருவழி பயண போக்குவரத்துக் கட்டணச் சலுகை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நல்லாட்சிக்கு வாழ்த்துக்கள். posted byAbdul Cader (Saudi Arabia)[09 July 2012] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19900
அருமையான திட்டம். அம்மா அவர்களின் ஆட்சியில் இன்னும் எத்தனையோ புது புது திட்டங்கள் வகுத்து மக்களுக்கு நல்லாட்சி புரிய வாழ்த்துக்கள்.
செய்தி: ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளில் தேர்ச்சியிழந்த மாணவர்களுக்கு, காவாலங்காவின் சார்பில் வழிகாட்டு முகாம்! இக்ராஃ அலுவலகத்தில் நடைபெற்றது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நல்ல வாய்ப்பு posted byAbdul Cader (Saudi Arabia)[25 June 2012] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19602
காவா லங்காவின் வித்தியாசமான அணுகு முறையை நிச்சயமாக பாராட்டி ஆக வேண்டும். மேலும் +2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை அவர்களின் சம்மதத்தின் பேரில் பத்தாம் வகுப்பு சான்றிதழை வைத்து தொழிற்கல்வி படிக்க ஆர்வம் காட்ட வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross