அனைத்தும் இறைவனின் நாட்டம்...தங்கள் தாயாரின் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். மர்ஹூமா அவர்களின் மண்ணறைய வெளிச்சப்படுத்தி விசாலமாக்கி சுவனத்தின் தென்றல் தழுவ, மறுமையில் மேலான நற்கூலியைப் பெற்று சுவனத்தில் நிரந்தமாக இருக்க வல்ல நாயன் அருள் புரிவானாக... ஆமீன்.
தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் அழகிய பொறுமைதனை அல்லாஹ் வழங்கிடுவானாக... ஆமீன்.
செய்தி: சிங்கை கா.ந.மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுவை & குடும்ப சங்கமத்தை முன்னிட்டு மகளிருக்கான சிறப்புப் போட்டிகள்: சமையல் போட்டி முடிவுகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சமையல் போட்டி உறுப்பினர்களிடையில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. போடடியில் பங்கெடுத்த அனைவரும் தமது திறமைகளை அசாத்தியமாக வெளிப்படுத்தியிருந்தனர்.
இவர்களின் ஆக்கங்களையும், காட்சிப்படுத்தி வைத்திருந்த விதத்தையும் பார்த்து நடுவர்குழுவினர் மிகுந்த ஆச்சர்யம் அடைந்தனர். இதில் போட்டியாளர்களின் பங்கெடுப்பு பாராட்டும்படியாக இருந்தது.
வெற்றி தோல்வி வெறும் புள்ளிகள் வித்தியாசத்தில் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டன. போட்டியில்பங்கெடுத்த ஒன்பது குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்...!
நலமன்றத்தின் வருடாந்திர விழாவை முன்னிட்டு ஆண்களுக்கும் பெண்களுக்கு தனித்தனியே பல்வேறு போட்டிகளை நடத்தி வருகின்றனர். குர்ஆன் மனன போட்டி, பொது அறிவு, பூப்பந்து, கால்பந்து பவுளிங், கேரம் என உற்சாகமான ஆரோக்கியமான போட்டிகளை செம்மையாக ஒருங்கிணைத்துள்ள போட்டிக் குழுவினரை பாராட்டியே ஆக வேண்டும்.
இதயம் கனக்கிதே தம்பி இதயம் கனக்கிதே... posted byM.N.L.Mohamed Rafeeq (Singapore)[10 August 2017] IP: 119.*.*.* Singapore | Comment Reference Number: 45725
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜஜியூன்.... எனது ஆருயிர் நண்பர் ஹாஜி சாளை ஹுமாயுன் அவர்களின் மூத்த மகனும், சிங்கப்பூர் கா.ந.மன்றத்தின் உறுப்பினருமான இளவல் ஷேக் ஷீத் அவர்களின் எதிர்பாராத மரணம் நம் யாவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன். எல்லாம் வல்ல நாயன் அந்த இளவலின் பிழைகளைப் பொறுத்து மறுமையில் மேலான நற்பதவியை வழங்கி சுவனத்துச் சோலையில் பிரவேசிக்க அருள் புரிவானாக...
அன்னாரின் இழப்பால் தவிக்கும் அவரது மனைவி, பெற்றோர், உற்றார் உறவினர் யாவருக்குக்கும் மேலான பொறுமையையும், இழப்பை தாங்கும் மன வலிமையையும் வழங்கியருள்வானாக...ஆமீன். மர்ஹூமின் தாய், தந்தை மற்றும் குடும்பத்தார் அவைருககும் எனது ஆழ்ந்த இரங்கலையும், சலாத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.
அஹ்மத் பஷீர் மற்றும் முஹம்மது அபூபக்கர் ஆகியோர் இன்னும் பல வெற்றிகளைக் கண்டு பிறந்த மண்ணுக்கும் பெற்றோருக்கும் உகந்த பிள்ளையாய், உலகம் போற்றும் உத்தமராய் திகழ அகம் குளிர வாழ்த்துகிறேன். வாழ்த்துக்கள்...!
சரியான நேரத்தில் சரியான பதிவு சபாஷ்...! posted byM.N.L.Mohamed Rafeeq (Singapore)[03 November 2016] IP: 14.*.*.* Singapore | Comment Reference Number: 44861
காலத்தின் அவசியம் கருதி சரியான தருணத்தில் வெளிவந்த சரியான பதிவு! ஆசிரியை அஃப்ஸலுல் உலமா ஆயிற்றே! அதனால்தான் இறை சட்டத்தை முன் நிறுத்தி சங்பரிவாரின் சாத்தியமற்ற சதி திட்டத்திற்கு சாட்டையடி கொடுத்துள்ளார்.
‘குலா’ என்னும் உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளதைப் பற்றி அறிவார்களா? ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆங்காங்கே சலசலப்பு ஏற்படுமளவுக்கு முஸ்லிம் பெண்கள் இன்று இவ்வுரிமையை முழுமையாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களே...? அதெல்லாம் இவர்களது காமாலைக் கண்களுக்குத் தெரியவில்லையா?"
இந்த வாசகங்கள் ஒன்றே போதும்.
மணமுடித்த மங்கையுடன் வாழாமல், மணவிலக்கும் அளிக்காமல் ஆட்சிபீடத்தின் உச்சாணிக் கொம்பில் ஒய்யாரமாக வீற்றிருக்கும் இந்திய பிரதரின் மனைவி மட்டும் இஸ்லாமியராக இருந்திருந்தால் "குலா" எனும் உரிமை சட்டத்தால் மோடியை என்றே தூக்கி பந்தாடியிருப்பாள். கட்டுரை ஆசிரியை கூறியது போல் பெண்களுக்கதிராக ஓராயிரம் பிரச்சனைகள் உள்ள நம் நாட்டில் அதற்கோர் தீர்வை ஆராயாமல் முத்தலாக் விஷயத்தில் முஸ்லிம் பெண்களுக்காக முதலைக்கண்ணீர் வடித்து அதையே விவகாரமாக்கி விஸ்வரூபம் எடுக்கச் செய்து ஓட்டு பிச்சை எடுக்க முனையும் இவர்களின் ஈனத்தனமான திட்டத்தை இன்ஷா அல்லாஹ் இறைவன் முறியடிப்பான்.
குலா எனும் கூர் வாள் பெண்ணின் பாதுகாப்பிற்காக அவர்கள் கையில் இறைவனால் கொடுக்கப்பட்ட தற்காப்பு ஆயுதம். அதன் விதிமுறைகளைப் பேணி அதை சரியான நேரத்தில் சரியான சூழலில் சரியாக பயன்படுத்தி சரியில்லாத கணவனிடமிருந்து மணமுறிவை பெறுவதுதான் சரி...!
ஆசிரியை ஆலிமா அவர்களின் வலிமையான வைர வரிகளுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்...!
-ஹிஜாஸ் மைந்தன்.
அவசியமான கட்டுரை... posted byM.N.L.Mohamed Rafeeq (Singapore)[18 October 2016] IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 44813
இன்றைய கால சூழலில் நம்மையும் நமது உயரினும்மேலான இறை சட்டங்ளை புறந்தள்ளி குளிர்காய நினைக்கும் பாசிச கும்பலுக்கு குறு குறுப்பு இன்னும் தீர்ந்தபாடில்லை. எப்படியாவது தமது ஆட்சி காலத்திலேயே இந்த சட்டதை நடைமுறைப் படுத்திவிட துடிக்கின்றனர்.
தலாக், பலதாரமனம் பற்றி விரிவாக விளக்கிய கட்டுரை ஆசிரியர் குலா மற்றும் அது குறித்த சட்டங்களையும் சற்று தெளிவு படுத்தியிருக்கலாம். சுயநலத்திற்காக மனிதன் இயற்றிய சட்டங்கள் யாவும் இறை சட்டத்தின்முன் மண்டியிட்டு மங்கிவிடுவதை பல்வேறு சரித்திரங்கள் மற்றும் அனுபவத்தில் நாம் உணர்ந்திருக்கின்றோம். தக்க சமயத்தில் தரமான கட்டுரையைத் தந்த அருமை நண்பர் ஷமீமுல் இஸ்லாமிற்கு நன்றி..!
தனி மரம் தோப்பாகாது... posted byM.N.L.Mohamed Rafeeq (Singapore)[14 October 2016] IP: 203.*.*.* Singapore | Comment Reference Number: 44805
மரம்,செடி,கொடிகள் மட்டுமா இங்கு மனிதர்களும் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.
அன்று கதைகள் சொல்லியும் கரம் பிடித்தும் வழிநடத்திய அப்பாக்களும், கம்மாக்களும் இன்று வெறும் கடைசிப்பொருளாகவே கருதப்படுகின்றனர். உறவின் மகத்துவத்தை பிள்ளைகளுக்கு சொல்லித்தர மறந்த பெற்றோர்கள் இவர்கள்தாம் இன்று பிள்ளை வளர்ப்பில் கெட்டிக்காரர்கள். சதா எந்நேரமும் ஐ பேடிலும் அண்ட்ராய்டிலும் மூழ்கிக்கிடக்கும் சிறார்களுக்கு அந்த ஆத்மாக்களுடன் நேரம் செலவிட நேரமில்லை என்பதுதான் உண்மை!
இவர்கள் வாட்ஸாப்பிலும் பேஸ்புக்கிலும் செலவழிக்கும் நேரத்தின் மூன்றில் ஒரு பங்கை தாத்தா பாட்டிகளோடு செலவிட்டாலே போதும் அந்த பட்டமரங்கள் புத்துணர்ச்சி பெற்றுவிடும். சுய நலத்திற்காக கூட்டுகுடும்பத்தை கூட்டுக்குள் குடும்பமாக மாற்றிய பெருமை படித்து வெளிநாட்டில் வேலைக்கு செல்லும் அநேக இளைஞர்களையே சாரும். தனி மரம் தோப்பாகாது என்பது வெறும் ஏட்டு சுரைக்காய்தானோ...?
எனது பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய உடன்பிறவா சகோதரர் அல் ஃபத்தாஹ் ஹஜ் சர்வீஸின் உரிமையாளர் அபுல்ஹஸன் காக்கா அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினர் அனைவர்க்கும் எல்லாம் வல்ல இறைவன் மேலான அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக. அல்லாஹ்வுக்காக சபூர் செய்து கொள்ளுங்கள்.
செய்தி: காயல்பட்டணம்.காம் எழுத்து மேடை மூத்த ஆசிரியர் ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ்.மாமா காலமானார்! செப். 23 காலை 10.30 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.
செய்தியை முதலில் முகநூலில்தான் பார்த்தேன். அதிர்ச்சியில் உறைந்து போனேன்.
முத்துச்சுடர் நற்சிந்தனை அல் ஹிதாயா போன்ற இதழகள் வெளிவந்து கொண்டிருந்த கால கட்டத்தில் எழுத்துப்பணியை துவங்கிய நான் ALS மாமாவின் நட்பு வட்டாரத்திற்குள் வந்தேன்.
அருமை நண்பர் காயல் ஏ.தர்வேஷ் முஹம்மத் ஒருநாள் கடற்கரையில் வைத்து மாமா அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
நான் கேரளாவில் தொழில் செய்து கொண்டிருந்த காலம் நீங்கள்தான் கோணியூர் ரஃபீகா என்று ஆச்சரியத்துடன் கேட்டார்கள். அன்று துவங்கிய நட்புறவு இன்று வரை நீடித்து வருகின்றது.
சந்திக்கும் பொழுதெல்லாம் நிறைய பேசுவோம். அவர்து கட்டுரைக்காக பல முறை நான் கேமிராவை தூக்கிக் கொண்டு அலைந்திருக்கின்றேன். வயது பேதமின்றி சம வயது நண்பரைப் போன்று பழகுவார். அவர்களிடம் நிறைய விஷயங்களை கற்றிருக்கின்றேன்.
அவர்கள் வீட்டிற்கு நான் சென்றாலும் சரி எனது வீட்டிற்கு அவர்கள் வந்தாலும் சரி நேரம் போவதே தெரியாது.
உருவமில்லா ஓவியம், எழுத்து, புகைப்படம் என அனைத்திலும் நிறகுடமாய் வாழந்தவர். சிரார்களிடத்தில் அன்பும் நகைச்சுவை உணர்வும் மிகுந்தவர். தனக்கென்று சில கொள்கைகளை வகுத்து அதன்படியே வாழ்ந்தவர். இளைய சமுதாயத்தின் இன்றைய போக்கு குறித்து கவலைப்பட்டு அதற்காக கட்டுரைகள் பல எழுதி கருத்துக்களைச் சொன்னவர். அன்னாரின் பிரிவு என்போன்றோருக்கு பெருத்த இழப்பே.
எல்லாம் வல்ல நாயன் அவரது பிழைகளைப் பொருத்து அன்னாரது அமல்களுக்கு நற்கூலியையும், மண்ணறையில் விசாலத்தையும் வெளிச்சத்தையும் கொடுத்து மறுமையில் உயர்ந்த சுவனப்பதியை வழங்கியருள்வானாக அமீன். அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.
மறக்க மனம் கூடுதில்லையே... posted byM.N.L.Mohamed Rafeeq (Singapore)[15 September 2016] IP: 14.*.*.* Singapore | Comment Reference Number: 44626
மங்காத மாறாத பசுமையான பள்ளிக்கால நினைவுகளை அசைபோட வைக்கும் அருமையான பதிவு!
ஆசிரியர்களின் உயர்ந்த உன்னத சேவைகளை குறைவாக மதிப்பிட்டு விட இயலாது. அவர்கள்தாம் ஒரு சமூகத்தை உருவாக்குகின்றனர். கலை கல்வி கலாச்சாரம் மண் மரம் செடி கொடி என உலகத்தையே நமக்கு காட்டித்தரும் அற்புத கண்ணாடி அவர்கள். பாவம் மாணவர்களோடு மல்லுக்கட்டி மாரடித்து ரசம் போன அந்த கண்னாடிகள் பலரும் தம் சொந்த வாழ்க்கையின் சோகத்தை ஒருபோதும் பிரதிபலிப்பதில்லை! வாழ்க ஆசிரிய பெருமக்கள்...!
நமது இதயத்தில் பசுமை மாறாமல் பச்சை பசேலென படர்ந்திருக்கும் நினைவுகளில் பள்ளிப்பருவம், திருமணநாள், முதல் பிரசவம், இப்படி நிலைகொள்ளும் நினைவுகளில் பள்ளிப்பருவத்திற்கே முதலிடம் எனலாம். கட்டுரை முடிந்துவிட்டதே எனும் ஆதங்கம் சற்று நெஞ்சைப்பிழிந்த போதும் தரமான ஒரு பதிவை படித்து முடித்ததில் ஓர் திருப்தி. வாழ்த்துக்கள்...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross