செய்தி: காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி நிர்வாகிகளுடன், ஐக்கியப் பேரவை பிரதிநிதிகள் சந்திப்பு! வீடியோ பதிவு வெளியீடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bySabeer (Bangalore)[02 September 2016] IP: 101.*.*.* India | Comment Reference Number: 44575
காயல்பட்டனத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல் ஜமாஅத் மற்றும் சங்கங்கள்-அமைப்புகள் யாவும் ஒருங்கிணைந்து புதிய பேரவை துவங்க வேண்டும். இதுவே நகரின் இழந்த ஐக்கியத்தை மீண்டும் உருவாக்கும்.
பேரவையின் செயல்பாடுகள் உள்ளம் தூய்மை கொண்டதாக இருத்தல் மிகவும் அவசியம்.
யாரையும் பணிய வைக்கவோ அல்லது ஆதிக்கம் செலுத்தவோ கூடாது.
வெறிப் பிடித்த குல பெருமையோ எந்த வகையிலும் ஐக்கியத்தை ஏற்படுத்த போவதில்லை.
ஊரின் பொது அமைதி சீர்குலைத்த முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் முன்னாள் நிர்வாக பிரமுகர்களின் உண்மை முகம், செயல்பாடுகள் யாவற்றையும் அறிந்து நீங்கா மனவேதனை அடைகிறோம்.. மீண்டும் இது போன்ற வன்முறையாளர்கள் பேரவையில் அங்கம் வகிக்க தகுதியில்லாத நபர்களை தவிர்த்துக்கொண்டு புதிய ஐக்கியப் பேரவை அமைக்க வேண்டும் என்பது எங்களது கருத்தை பதிவு செய்கிறோம்.
Re:... posted bySabeer (Bangalore) (Bangalore)[04 February 2016] IP: 182.*.*.* India | Comment Reference Number: 43037
உறுப்பினர்களாகிய நீங்கள் அனைவரும் வெளியிட்டுள்ள இந்த பிரசுரத்தின் மூலம் ஒன்று மட்டும் விளங்க முடிகிறது. மக்களின் வரிப்பணத்தை சுருட்டிக் கொண்டிருக்கும் ஆணையருக்கு நீங்கள் அனைவரும் துணையாக இருக்கிறீர்கள் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
வரிக்கு வரி தலைவரை குறை சொல்லும் நீங்கள் எங்காவது ஆணையரை கண்டித்திருக்கிறீர்களா?
அவர் நேர்மையாகத்தான் நடந்து கொள்கிறார் என்று உங்கள் மனசாட்சியின் படி சொல்ல முடியுமா?
இருப்பது இன்னும் கொஞ்ச காலம். ஆனால் மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. உங்களைப் பற்றி தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். அடுத்த முறை தேர்தலில் போட்டியிட்டு பாருங்கள்! தெரியும்.
உள்ளே....வெளியே...... posted bySabeer (Bangalore)[04 August 2015] IP: 115.*.*.* India | Comment Reference Number: 41532
உள்ளே.... வெளியே...... அன்று நகராட்சி கூட்டம் நடைபெறும் போது தலைவர் தீர்மானத்தை கொண்டு வர நினைத்தால் உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு.
இன்று துணைத் தலைவர் தலைமையில் கூட்டத்தை நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் உறுப்பினர்கள் அனைவரும் உள்ளே தலைவர் வெளியே.
இவ்வாறான கூட்டம் தலைவர் இருக்கும்போது துணைத்தலைவர் தலைமையில் கூட்டத்தை நடத்துவது சாத்தியமா? எங்காவது இது போன்று நடந்ததுண்டா? சட்டரீதியான அணுகுமுறையில் அது தலைவருக்கே சாதகமாகும் என்பது தெரியாதா? ஏன் இந்த அவசர கதி? எதற்கு என்பதற்கு அனைவருக்கும் புரிந்திருக்கும்.
என்னய்யா கூத்து இது. மொத்தத்தில் செயல்படாத நகர்மன்றத்திற்கு காரணமாக உறுப்பினர்கள் அனைவர்களும் செயல்படுகிறார்கள் என்பது திண்ணம். உறுப்பினர்களில் யாராவது அடுத்த நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டி இடுங்கள். அப்போது தெளிவாகத் தெரியும்... மக்களின் முடிவு என்னவென்று.... பொறுத்திருந்து பார்ப்போம்.
Re:... posted bySabeer (Bangalore)[13 June 2015] IP: 115.*.*.* India | Comment Reference Number: 40963
நகர்மன்றத்தலைவரும் சரி எங்களது 5வது வார்டு உறுப்பினரும் சரி. இருவருமே 5வது வார்டுக்குட்பட்ட மொகுதூம் தெருவைச் சார்ந்தவர்கள். ஆனால் கவலைக்குரிய விசயம் என்னவென்றால் இருவருமே 5வது வார்டைச் சார்ந்தவர்களாக இருந்தும் 5வது வார்டுக்கென்று எந்த ஒரு நலனும் இது நாள் வரை இந்த நகர்மன்றம் பொறுப்பேற்றது முதல் கிடைக்கப் பெறவில்லை.
நகர்மன்றம் பொறுப்பேற்று மூன்று வருடங்களுக்கு மேலாகிறது. இதுவரை 5வது வார்டுக்குட்பட்ட கோரிக்கையாக எதையும் கவுன்சிலர் முன் வைத்து தீர்மானம் நிறைவேற்றியதாக தெரியவில்லை. (செய்தியின் வாயிலாக அறிந்து கொண்டது தான். அப்படி ஏதாவது தீர்மானம் நிறைவேற்றியிருப்பின் அறியத்தரவும்).
இப்படியே நீங்கள் சண்டை பிடித்துக் கொண்டிருந்தால் மக்களுக்குப் பிரயோஜனமாக எதையும் செய்ய இயலாது. உங்களை மக்கள் தேர்ந்தெடுத்தது மக்களுக்காக உழைக்கத் தான் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்.
Re:... posted bySabeer (Now @ Mumbai)[04 November 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31207
சகோதரர் ஜஹாங்கிர் அவர்களுடைய கேள்வி நியாயமானதே. ஆனால் அதில் ஒரு சில விளக்கங்களை சகோதரருக்கு எடுத்து வைக்க முன் வந்துள்ளேன்.
புதுப்பள்ளி ஜமாத் மற்றும் அதற்கு ஐக்கியப்பட்ட அமைப்பின் சார்பாக ஒரு சிலர் வரவேற்றால் அதை நாம் எந்த கேள்வியும் கேட்க இயலாது. அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். உதாரணத்திற்கு நீங்கள் மற்றும் நமது ஊரைச் சார்ந்த நான்கைந்து பேர் வெளியூர் எங்காவது சென்று அங்கு ஏதாவது ஒரு அரசியல் தலைவருக்கு பொன்னாடை போர்த்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது ஊடகங்களில் வெளியிடும் செய்தி இதுவாகத்தானிருக்கும். 'அரசியல் தலைவரை காயலர்கள் வரவேற்றனர்'. "காயல்பட்டணத்தில் வரவேற்பு" என்பது வேறு "காயலர்கள் வரவேற்றனர்" என்பது வேறு. அது போல் தான் இதுவும்.
ஜமாத்தைச் சார்ந்த ஒரு சிலர் வரவேற்றதால் அவ்வாறு செய்தியில் இடம் பெற்றுள்ளது என்று கருதுகிறேன்.
ஏன் சமீபத்தில் மதுவிலக்கை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்ட ம.தி.மு.க. கட்சி தலைவர் வை.கோ. அவர்களுக்கு வரவேற்பளிக்கிறோம் என்ற பெயரில் கல்லூரி மாணவிகளை தெருவிற்கு இழுத்து மாற்று மதத்தவர்கள் நமது சமுதாய மாணவிகளின் கைகளில் துண்டுப்பிரசுரம் கொடுத்து அதை அவர்கள் கல்லூரியின் கட்டுப்பாட்டிற்கு கட்டுப்பட்டு வேறுவழியின்றி பெற்றுக் கொண்டார்களே. அதற்கு உங்களுடைய கருத்து என்ன?
'மதுவிலக்கை வலியுறுத்தித் தானே நடைபயணம் மேற்கொண்டுள்ளார். நல்ல காரியத்திற்காகத் தானே வரவேற்பு கொடுத்துள்ளார்கள் அதில் என்ன தப்பு' என்று நீங்கள் வினவலாம். அது போல் தான் இதுவும்.
ஊருக்கு நல்லது நடக்க வேண்டும் என்று தான் அதிமுக தலைமையிடத்தை நாடியுள்ளார்கள்.
செய்தி: காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் இன்று தமிழக முதல்வருடன் சந்திப்பு! அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தார்!! (தொலைகாட்சி படம் இணைக்கப்பட்டது) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bySabeer (Now @ Mumbai)[28 October 2013] IP: 116.*.*.* India | Comment Reference Number: 31032
நல்லதொரு முடிவு. பல நாட்களாக முயற்சி செய்தது தற்போது மாற்றத்தின் (அதாங்க. மாவட்ட செயலாளர்) காரணமாக கைகூடியுள்ளது. இன்னும் எஞ்சியுள்ள இரண்டு வருடங்களில் ஊருக்காக நல்லது செய்ய துரிதமாக செயல்படுங்கள். இந்த வவுந்துடுவேன். நாக்கை அறுத்துடுவேன்! இனி ஜாக்கிரதை. அடக்கி வாசியுங்கள் உறுப்பினர்களே!.
என்ன சிலர் கேள்வி கேட்பார்கள். சுயேட்சையாக நீங்கள் போட்டியிட்டதால் தானே நாங்கள் உங்களுக்கு வாக்களித்தோம் என்று?
நீங்கள் எந்த அமைப்பையும் சார்ந்து நிற்கவில்லை. தனித்தே போட்டியிட்டீர்கள். உங்களை நம்பித்தான் வாக்களித்தார்கள். ஆதலால் உங்களை எந்த அமைப்பும் கேள்வி கேட்க இயலாது. ஊரின் ஒட்டு மொத்த ஜமாஅத்தின் கூட்டமைப்பு என்று சொல்லிக் கொள்ளும் அமைப்பின் சார்பாக வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி கண்ட வஹிதா அவர்களும் சுயேச்சையாகத் தான் போட்டியிட்டார்கள். பின்னர் ஊரின் நலன் கருதி அதிமுகவில் சேரவில்லையா!? அதுபோல ஊரின் நன்மைக்காகத் தான் இந்த முடிவு எடுத்துள்ளீர்கள் என்பது எல்லாருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனி என தௌ;ளத் தெளிவாக தெரியும். இனி வெற்றியை நோக்கி பீடு நடை போடுங்கள். உங்கள் குரல் பலமாக ஒலிக்கும்.
Re:... posted bySabeer (Mumbai)[24 July 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 28878
என்னத்த சொல்ல... தேர்தலுக்கு முன் நான் நகர்மன்றத் தலைவிக்கு ஆதரவாக என்றென்றும் இருப்பேன் வார்டுக்கு நல்லது செய்வேன் என்று சொல்லி வாக்குகள் வாங்கியவர்களெல்லாம் இப்போது மக்களைப் பற்றி கொஞ்சமும் கவலை கொள்ளாமல் மகாராஜனின் சொல் கேட்டு ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
மக்களுடைய ஓட்டை வாங்கியாச்சு. இனி என்ன மக்கள் நம்மை கேட்பது என்ற தைரியம். உங்களிடத்தில் ஒன்றைக் கேட்கிறேன். தலைவரை பதவி நீக்கம் செய்ய 16 உறுப்பினர்களும் கையெழுத்திட்டு கோரிக்கை விடுத்துள்ளீர்கள். உங்களை தேர்ந்தெடுத்த நாங்கள் உங்கள் மீது நம்பிக்கை இழந்துள்ளோமே. உங்களை பதவி நீக்கம் செய்ய நாங்கள் யாரிடத்தில் முறையிடுவது. உங்கள் மீது அதிருப்தி அடைந்துள்ள மக்கள் அனைவரும் கையெழுத்திட்டு மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கலாமா?
எனது வார்டுக்குட்பட்ட (கி.மு.கச்சேரி தெரு) உறுப்பினர் சகோதரர் ஜகாங்கிரை கேட்கிறேன். பதவியேற்று இரண்டரை வருடங்களாகி விட்டது. தாங்கள் இந்த வார்டுக்காக என்ன தான் செய்துள்ளீர்கள். ஏதாவாது ஒரு தெரு செப்பனிடப்பட்டுள்ளதா? அல்லது புதிதாக ரோடு ஏதும் போடப்பட்டுள்ளதா? எத்தனையோ நகர்மன்றக் கூட்டங்கள் இது வரை நடைபெற்று முடிந்துள்ளன. எந்த கூட்டத்திலாவது தங்களது வார்டுக்குட்பட்ட கோரிக்கையாக ஏதாவது வைத்துள்ளீரா? 5வது வார்டு சம்பந்தமாக ஏதாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதா? ஒன்றுமே இல்லை. கி.;மு. கச்சேரி தெரு குண்டும் குழியுமாகத் தான் இருக்கிறது. இதையெல்லாம் கவனிக்க உங்களுக்கு நேரம் எங்கே இருக்கப் போகிறது.
ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள்! நேர்மையான வழியில் சம்பாதிக்கும் பணம் மட்டுமே தரிபடும். மற்றவைகளெல்லாம் வந்த இடம் தெரியாமல் போய் விடும். இறைவன் மீது பயபக்தி உள்ள யாரும் இந்த செயலை செய்ய மாட்டார்கள். மார்க்கப் பற்று மிக்கவர் ஒரு அறக்கட்டளையை நிர்வகித்து வரும் ஒருவரும் இவர்களோடு சேர்ந்துள்ளது வியப்பாக உள்ளது. எல்லோரும் இறைவனிடத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஆனால் உண்மையில் சகோதரி ஆபிதா அவர்களை சரித்திரம் காயல்பட்டணத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு புரட்சிப் பெண் என்று நிச்சயம் சொல்லும்.
Re:... posted bySabeer (Bangalore)[02 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26629
அதிமுக நகர்மன்றத்தலைவி மீது அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் எப்படி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடியும்? அரசியலில் புதுமையாக உள்ளதே! சற்று சிந்தித்தால் பார்த்தால் தலை(யின்) கனம் குறைந்து தலைநகர் ஆட்டம் கண்டு உள்ளதாக கேள்வி? ஆறு மாதங்கள் கழித்து வழிக்கு வந்துள்ளது யார் என்பது புரியாமலே புரியும்.
மக்களே! இது உங்கள் தருணம்! posted bySabeer (Bangalore)[09 March 2013] IP: 101.*.*.* India | Comment Reference Number: 26135
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரை நீங்கள் 17 பேரும் ஒன்று சேர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கோரியுள்ளீர்கள் என்றால் வார்டு உறுப்பினராக உங்கள் மேல் நம்பிக்கை வைத்து உங்களைத் தேர்ந்தெடுத்த நாங்கள் தற்போது நம்பிக்கை இழந்து உள்ளோமே. இதற்கு எங்கு போய் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது.
மனசாட்சியுடன் நடக்க வேண்டும். மக்களே! இது உங்கள் தருணம்! வெகுண்டெழுங்கள் அந்தந்த வார்டு பொறுப்பாளர்களே மக்களை ஒன்று திரட்டி இவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்று பெரும்பாலானவர்களிடம் கையெழுத்து பெற்று ஆட்சியரிடம் சமர்ப்பியுங்கள். ஒரு முடிவு வரட்டும்!
சமாதானக்குழுவே உங்கள் குழுவின் ஒரு உறுப்பினரை நீங்கள் திருத்தாத வரையில் இவர்களை யாராலும் திருத்த முடியாது.
Re:ஒரு சக்தி ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது posted bySabeer (Bangalore)[20 December 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24694
நீங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு தலைவி மேல் நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு கொடுத்துள்ளீர்களே! உங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ள எங்களுக்கு உங்கள் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. நாங்கள் யாரிடத்தில் முறையிட? ஒன்று செய்யலாம்.
வாக்காளாகள் அனைவரிடத்திலும் ஒரு சர்வே எடுங்கள். அதில் கீழ்க்காணும் வாசகத்தை குறிப்பிடவும்.
1) ___வது வார்டு உறுப்பினரின் செயல்பாடுகள் உங்களுக்கு திருப்தியளிக்கிறதா?
ஆம் / இல்லை.
2) நகர்மன்றத் தலைவரின் செயல்பாடுகள் உங்களுக்கு திருப்தியளிக்கிறதா?
ஆம் / இல்லை.
இதற்கு ஏதாவது அமைப்பு முன்வந்து தெருவாரியாக அதற்கென நபர்களை நியமித்து சர்வே எடுத்தால் இவர்களின் யோக்கியதை என்னவென்று தெரியும்.
அனைவரும் ஒன்றுபட்டு இந்த DCW விசயத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருந்தீர்கள் என்றால் இந்த ஊர் உங்களை வாழ்த்தும். ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகி விட்டது. 'உங்களை ஒரு சக்தி ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது'
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross