Re:... posted byKADER K.M (Dubai)[12 May 2017] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45526
அன்பிற்கினிய துபை காயல் நல மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவர்களுக்கும் பரிமார் நல மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரின் அஸ்ஸலாமுஅலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி பரக்காத்தஹு!!!
எங்களின் கோரிக்கைகளை ஏற்று எங்கள் தெருவாசிகளின் வாழ்வாதாரம் முன்னேறுவதற்காக உதவி புரிந்த துபாய் காயல் நல மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் ஈருலக நற்பாக்கியங்களை தந்தருள்வானாக! ஆமீன்! நீங்கள் செய்த உதவிகளுக்கு நாங்கள் என்றும் நன்றி கடன் பட்டவர்களாக இருப்போம். நாங்கள் எடுத்த முயற்சி வெற்றி பெற வல்ல ரஹ்மானிடம் நீங்கள் எல்லோரும் இறைஞ்சுமாறு வேண்டுகிறோம்.
இப்படிக்கு,
கே.எம். காதர்,
துணை தலைவர்,பரிமார் நல மன்றம்,
துபாய். ஐக்கிய அரபு அமீரகம்.
Re:... posted byKader K.M (Dubai)[05 March 2013] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26008
அல்லாஹ் உங்கள் அறிவு திறனை மேன்மை அடைய செய்து, மார்க்கத்திற்கும், இஸ்லாமிய சகோதரர்களுக்கும், தங்கள் குடும்பத்தினர்களுக்கும் உதவியாக்கி வைப்பானாக ஆமீன்!
Re:... posted byKader K.M (Dubai)[27 February 2013] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25805
மாப்பு வச்சுட்டாங்கையா ஆ.....ப்பு!
காற்று நுழைய முடியாத இடத்திலும், நிருபர்களின் கேமரா நுழையும் என்பதை நிரூபித்துள்ளீர்கள்! பாராட்டுக்கள்!
கடைக்காரர் புதியவராம்! மண்ணெண்ணெய் அளப்பது எப்படி
என்பதை கற்று கொடுக்க புதிய ஆள் வந்தாராம்!
நீங்கள் அதற்குள் போட்டோ எடுத்து தப்பாக நினைக்க வைத்து விட்டீர்கள்!
கேட்கிரவன் கேனையன் என்றால், எருமை மாடு ஏரோ பிளேன் ஓட்டுமாம்! அந்த கதையாகி விட்டது! நமது காயலின் நிலை!
ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காது என்பது பழமொழி! எப்படி திருந்துவார்கள் இவர்கள்!
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!
செய்தி: காயல்பட்டினம் நல அறக்கட்டளை (KWT) தலைவர் ஹாஜி எஸ்.ஐ.அபூபக்கர் மனைவி காலமானார்! (கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byKader K.M (Dubai)[26 February 2013] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25760
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அல்லாஹ் மர்ஹூமா அவர்களை பிழைபொறுத்து அவர்களின் கப்ர் வாழ்விலும் மறுமை வாழ்விலும் உயர்ந்த பதவிகளை கொடுப்பானாக.
அவர்களை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் மிகுந்த பொறுமையையும் பிரிவை ஏற்றுக்கொள்ளும் மனதையும் தந்தருள்வானாக ஆமீன்!
செய்தி: காயல்பட்டினம் நகர்மன்ற சாதாரண கூட்டம்! பெரும்பான்மை உறுப்பினர்கள் வெளிநடப்பு!! தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப் படாமலேயே கூட்டம் நிறைவுற்றது!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byKader K.M (Dubai)[26 February 2013] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25758
செய்தி: முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு, முழு மதுவிலக்கு, நீண்ட கால விசாரணைக் கைதிகள் விடுதலை ஆகியவற்றை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஏப்.02 அன்று கவன ஈர்ப்புப் பேரணி! இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byKader K.M (Dubai)[19 February 2013] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25631
எங்கே போயிருந்தீர்கள் ? இத்தனை நாளா! இதில் ஏதோ சதி இருப்பதாகவே தோன்றுகின்றது! காரணம், சமீப காலத்தில் ஆரம்பித்த SDPI (popular front of india ) இந்தியாவில் வளர்ந்து வருவது அனைவர்களும் அறிந்ததே! அதனை முடக்குவதற்காக அரசியல் அரசர்கள் போட்ட திட்டமாக இருக்குமோ என்று தோன்றுகின்றது!
இல்லையென்றால், கட்சி தொடங்கி இத்தனை காலம் ஆகி இஸ்லாமியர்களுக்காக என்ன செய்தீர்கள்?
சிறையில் வாடக்கூடிய என் மார்க்க சகோதரனுக்காக என்ன செய்தீர்கள்?
இறை இல்லமாம் பாபரி மஸ்ஜித் ஐ தகர்க்கும் பொழுதும், தகர்த்த பின்னும் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?
கோவை கலவரத்தில் பாதிக்கப்பட்ட என் சகோதரனுக்காக என்ன செய்தீர்கள்?
சிறுபான்மையினர்கள் இட ஒதுக்கீட்டிற்காக என்ன செய்தீர்கள்?
இன்னும் எங்கள் உள்ளத்தில் என்னெற்ற கேள்விகள், விடை அந்த வல்லோன் அறிவான்!
800 வருட காலம் ஆட்சி செய்த நாம், இட ஒதுக்கீட்டிற்காக, எவர்களை எல்லாம், வாழ்க! என்று சொல்லக்கூடிய அவலம்!காரணம் நம்முடைய ஈமானின் பலகீனம்!
இன்று தொடங்கிய தே.மு.தி.க இன்றைய எதிர் கட்சி! என்றோ தொடங்கிய எம்தாய் சபை?....
எம்தாய் சபை சரி இல்லாததால்தான், பல இஸ்லாமிய கட்சிகள் நம் நாட்டில் தோன்றின! பலன் ஒற்றுமையும், ஓட்டுக்களும் சிதறின!
இன்றும், நம் நாட்டில் பிரித்தாளும் கொள்கை நடந்துக்கொண்டு இருக்கின்றது! இஸ்லாமிய (மார்க்க, கட்சி)தலைவர்களே! எங்களை அந்நிய சக்திகளிடம் அடகு வைக்காதீர்கள்!
நீங்கள் அனைவர்களும், ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து
உங்களுக்குள் ஒரு நல்ல முடிவை எடுத்து ஒரு குடையின் கீழ் வந்து, நம் இனத்திற்காகவும், நம் சகோதர சமுதாயத்திற்காகவும், பாடு பட்டால்,
இறைவன் நாடினால், நாளை நமதே! இந்த நாடும் நமதே!
Re:... posted byKader K.M (Dubai)[16 February 2013] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25537
ஆறுமுகநேரியை சார்ந்த சகோதர, சகோதரியே! அதிலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சகோதர, சகோதரியே!
DCW வால் காயல்பட்டனத்திற்க்கு மட்டுமல்ல பாதிப்பு!
நமது சுற்று வட்டாரத்திற்க்கே பாதிப்பு!
நம் எல்லோருக்காக தான் நல் உள்ளங்கள் கொண்ட பலர் போராடுகின்றார்கள்!
சகோதரனே! பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்க உனது உயிரை பணயம் வைத்துதான் பணம் சம்பாதிக்க வேண்டுமா?
வெந்ததை தின்றுவிட்டு விதி வந்தால் சாவோம்! என்று நினைத்துவிட்டீர்கள் போலும்!
கேன்சர் வந்து அதனால் இறக்க கூடியவரின் வேதனை என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அது சரி உங்களுக்கு எப்படி தெரியும்? முள்ளு குத்திய வேதனை, முள்ளு குத்தியவனுக்கு தானே தெரியும்! (கடைசி வரை உங்களுக்கு அந்த வேதனை தெரியாமல் கடவுள் காப்பாற்றட்டும்! )
எங்கேயோ இருந்து வந்து நமது மார்பில் தொழிற்சாலை அமைத்து, அவர்கள் பணம் சம்பாதிக்க, தன் வம்சமே அழிந்தாலும் பரவாயில்லை என்று நினைக்கும் உங்கள் தியாகத்தை என்னவென்று சொல்ல?
கூட்ட தீர்மானத்தில் DCW வால் கிடைக்கும் வரி பணத்தினால் தான் காயல் பட்டணம் வளர்ச்சி அடைந்துள்ளது என்று சொல்வது சூப்பரோ! சூப்பர் அண்ணா!
இதை எல்லாம் உங்கள் அறியாமை என்பதா? அல்லது உங்களுடைய DCW விசுவாசம் என்பதா?
எது எப்படியோ, நமது மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் கண்ணியமானவர்! அவர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கையினால், நமது சுற்று வட்டாரமே சுகாதார காற்றை சுவாசிக்க கூடிய காலம் மிக விரைவில் வரும் என்று நம்மை படைத்து, பரிபாலிக்கக் கூடியவன் மீது ஆதரவு வைப்போமாக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross