உடனடி கவனம் தேவை. posted byமுஹம்மது அலி (வெள்ளி) (Dubai)[14 February 2015] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39250
அவங்க வந்து மூடி போடுறதுக்குள்ள வேறு ஏதாவது விபத்து நடந்து விட போகிறது. சிறுவர்கள் கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளது. தயவு செய்து ஒரு பேப்பர் வைத்தோ அல்லது மாஸ்கிங் டேப் மூலமோ அதை மூடி வைக்கவும்.
Re:... posted byS.A.Muhammad Ali Velli (Dubai)[15 May 2014] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34973
(1) தூத்துக்குடி தொகுதியில் [__.தி.மு.க] கட்சி வெற்றி பெறும்
(2) தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி (20-22) இடங்கள் பெறும், தி.மு.க. கூட்டணி (13-15) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (3-4) இடங்கள் பெறும், காங்கிரஸ் (0-1) இடங்கள் பெறும்
(3) தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி (120-140) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (160-180) இடங்கள் பெறும், இதர கட்சிகள் (140-160) இடங்கள் பெறும்.
செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: முஸ்லிம்கள் ஓரணியில் திமுகவுக்கு வாக்களிப்பது மட்டுமே மதவாத சக்திகளைத் தடுக்கும்! திமுக வேட்பாளர் ஜெகனுக்கு ஆதரவாக மவ்லவீ ஹாமித் பக்ரீ பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இனியும் தி.மு.க-வுக்கு வாக்களிக்கலாமா? posted byS.A.Muhammad Ali Velli (Dubai)[23 April 2014] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34548
2004 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் தி.மு.க-வுக்கு நாம் மாபெரும் வெற்றியை அளித்தோம்.ஆனால் அந்த செல்வாக்கை தன் குடும்பத்திற்கு மட்டுமே பயன் படுத்தினார். தமிழினப் படுகொலையைக் கண்டு கொள்ளாமல் இருந்ததோடும், அதை நிறுத்தும் ஆற்றல் தன் கையிலிருந்தும் அதைச் செய்யாமல் இருந்ததோடு மட்டுமில்லாமல் அவரது உண்ணாநிலைப் நாடகம் முடித்த பிறகும் போர் தொடர்வது பற்றிக் கேட்டதற்கு “மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்று ஏளனம் செய்தார். 2002 குஜராத் கலவரம் உள்மாநில பிரச்சனை என்று பூசி மெழுகினார். இப்படி பட்ட கருணாநிதி
நாளை பதவி என்றால் உடனே போவார் மோடி தேடி.
கோடியை கண்டால் கொள்கையை புதைப்பார் தோண்டி
நாம் கிழித்தெறிய வேண்டும் இவரின் முகமூடி
மதவாதம் மற்றும் ஊழலிற்கு எதிராக போராடும் ஆம் ஆத்மி
ஒன்றே இதற்கு மாற்றாக அமையும். முயற்சி செய்து முடியாவிட்டால் வேறு முயற்சியே செய்யாமல் முடங்கி கிடப்பது மூடத்தனம் அல்லவா?
தற்போது உள்ள பலமுனை போட்டி ஆம் ஆத்மி வேட்பாளர் போராளி ம.புஷ்பராயன் அவர்களுக்கு சாதகாமாகவே உள்ளது என்று உளவு துறை அறிக்கை கூறுவதால் தான் அனைத்து திமுக கூட்டணி பேச்சாளர்களும் ஆம் ஆத்மியை முழு மூச்சோடு எதிர்கிறார்கள். ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களும் வீண் பழிகளும் சுமத்துகிறார்கள். இதற்கு இந்த ஆலிமும் விதி விலக்கல்ல.
காயலில் உதயசூரியன் உதிர்ந்து போகும் நாள் ஏப்ரல் 24.
அந்த கூளங்களை கூட்ட போவது "துடைப்பம்"
அரசியல் புரட்சி posted byS.A.Muhammad Ali Velli (Dubai)[20 April 2014] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34485
"மதுவால் நாட்டிற்கு வருமானம் வருமாயின் அது அவமானம்" என்று கூறிய அண்ணாவின் பெயரை சொல்லி கட்சி நடத்தும் கயவாளிகள் இனியும் காயல்பட்டினத்தை சொந்தம் கொண்டாட முடியாது.
ஜனநாயகத்தின் உண்மையான புரட்சி வரும் 24ம் தேதி வாக்குபெட்டிகளில் நடைபெற உள்ளது. வெறும் வார்த்தை ஜாலங்களால் மக்களை மாறி மாறி ஏமாற்றிய இனதுரோகிகளை மக்கள் அடையாளம் கண்டு கொண்டுள்ளனர். பணத்தை பெற்று கொண்டு வீடு வீடாக சென்று பணம் கொடுக்கும் கட்சிகளின் மத்தியில் தங்களது சொந்த காசை போட்டு மக்களை விழிப்புணர்வு அடைய செய்யும் ஆம் ஆத்மி சகோதரர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
இந்தியாவில் மோடி அலை அடிக்கிறதோ இல்லையோ காயலில் ஆம் ஆத்மி அலை அடிக்கிறது. இது வரும் 24ம் தேதி அடை மழையாக பெய்து கலைஞர் பட்டினம் கரைய இருக்கிறது.
மறவாதீர் நமது சின்னம் "துடைப்பம்"
சுதந்திர காற்று வேண்டுமா? நச்சு காற்று வேண்டுமா ? posted byS.A.Muhammad Ali Velli (Dubai)[20 April 2014] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34465
திமுக
அஇஅதிமுக
காங்கிரஸ்
பாஜக, தேமுதிக, மதிமுக,அஇசமக,
இப்படி எத்தனையோ கட்சிகள்,
ஏன் இத்தனை கட்சிகள்? இவர்களின் கொள்கை என்ன? குறிக்கோள் என்ன? அனைத்திற்கும் ஒரே பதில் பணம், பதவி, சுயநலம்.
இதற்காக ஒவ்வொருவருவரும் தங்கள் கையில் எடுத்துள்ள ஆயுதம் தான் வேறு ஆனால் குறிக்கோள் ஒன்றே. இக்கட்சிகளின் வேட்பாளர்கள் பெரும்பாலும் குற்ற பின்னணி உள்ளவர்களாகவே இருக்கின்றனர். இவர்களால் எப்படி நல்லாட்சி தர முடியும்? அனைவரின் குறிக்கோளும் நல்லாட்சி, நாட்டு வளரச்சி என்றால் ஏன் இத்தனை கட்சிகள்?
ஒரு கட்சிக்குள் அடிமைகள் இருக்கலாம்
ஆனால்
ஒரு கட்சியே இங்கு அடிமையாக இருக்கிறது . ஒரேயொரு சீட்டிற்காக 40 தொகுதிகளில் வேலை செய்கிறார்கள்.
எல்லா கட்சிகளும் வாக்கு கேட்கிறது ஆனால் ஆம் ஆத்மி கட்சி மட்டுமே சிந்திக்க சொல்லுகிறது.
ஊழல் மற்றும் மதவாதத்தை ஒழிக்க, வாரிசு அரசியலை ஒழிக்க, கார்பரேட் கம்பனிகளின் கைகூலிகளை அழிக்க துடைப்பத்தை கையில் எடுங்கள். சுத்தமான சுதந்திர காற்றை சுவாசியுங்கள்.
மறவாதீர் நமது வேட்பாளர் ம.புஷ்பராயன்
நமது சின்னம் - துடைப்பம்
செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: DCW ஆலைக்கெதிரான நடவடிக்கைகள் குறித்து KEPA அமைப்புக்கு ஆம் ஆத்மி வேட்பாளர் கையெழுத்திட்டு வாக்குறுதிக் கடிதம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பூச்சாண்டி காட்டாதீர்கள் posted byS.A.Muhammad Ali Velli (Dubai)[19 April 2014] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34457
மதவெறி, மதச்சார்பின்மை பற்றி தற்போது எல்லோரும் பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆரம்பத்தில் மோடி எனது நண்பர், சிறந்த நிர்வாகி என்று கூறிய கருணாநிதி சுதாரித்து கொண்டு பிஜேபி க்கு எதிரான நிலை எடுத்ததால் அனைத்து இஸ்லாமிய கட்சிகளும் அவருக்கு ஆதரவு நிலை எடுத்து உள்ளது.
மோடி ஆட்சிக்கு வந்தால் அதிக இடம் பெரும் அதிமுகவின் ஆதரவை தான் கோருவார் என்பதால் தான் இந்த சிறுபான்மை மக்களின் காவலன் இந்த வேஷம் போடுகிறார். தவ்ஹீத் ஜமாஅத் விலகிய பின்பு அம்மாவும் பிஜேபி க்கு எதிராக பேச தொடங்கி இருக்கிறார்.
பிஜேபி மற்றும் காங்கிரஸ் என இரண்டு கட்சிகளும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களே . பிஜேபி என்னும் மதவெறியர்களை காட்டி சிறுபான்மையினரை தங்களின் ஓட்டு வங்கியாக மட்டுமே மதசார்பின்மை பேசும் கட்சிகள் பயன்படுத்துகிறது. மதசார்பின்மை கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்க முடியவில்லை என்றால் அவர்கள் அனுமதியுடன் தான் ஹிந்துத்வா தீவிரவாதிகள் தங்களது மதவெறியாட்டாங்களை நிகழ்த்துகிறார்கள்.
நாட்டு மக்களை எப்போதுமே முட்டாள்களாகவே வைத்திருக்க முடியாது... உங்கள் இற்றுப்போன மதவாத மாய்மாலமெல்லாம் இனி இங்கே செல்லுபடியாகாது. பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிகளை எதிர்க்க கூடிய ஒரே கட்சி ஆம் ஆத்மி. நமது தொகுதியில் நமக்காக போராட கூடிய ஆம் ஆத்மி வேட்பாளர் போராளி ம.புஷ்பராயன் அவர்களை வெற்றி பெற செய்து நமது கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்வது நம்முடைய கடமை.
செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆம் ஆத்மி கட்சி சார்பில் காயல்பட்டினத்தில் ஏப். 16 அன்று பரப்புரை பொதுக்கூட்டம்! வேட்பாளர் ம.புஷ்பராயன் சிறப்புரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சிந்திக்கும் மக்களுக்கு ஆம் ஆத்மி ஒரு அருமருந்து posted byS.A.Muhammad Ali (Dubai)[16 April 2014] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34405
தேர்தலுக்கு தேர்தல் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை. மாற்றம் வேண்டுமெனில் நாம் மாற வேண்டும். நமது ஓட்டு விற்பனைக்கு அல்ல.
தலை ஆட்டும் கூட்டங்களை தலை நிமிர செய்யும் கட்சி ஆம் ஆத்மி.
"கை" யால் கொசுவை தான் அடிக்க முடியும்
"துடைப்பத்தால்" தான் ஊழல் மற்றும் மதவாதத்தை ஒழிக்க முடியும்.
ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் முறையும், கொள்கைகளும் தமிழகம் இதுவரை ஆதரித்து வந்தவற்றுடன் ஒத்து வருவதுடன் அதில் நேர்மை, நல்லாட்சி என்ற முக்கிய அம்சங்களையும் கொண்டுள்ளது. இது தமிழக அரசியலை முற்போக்குப் பாதையின் அடுத்து கட்டத்திற்கு எடுத்து செல்ல உதவும். எனவே திராவிடவியலாலர்களும் பிறரும் ஆம் ஆத்மி கட்சியை ஆதரிப்பது தற்போதய காலகட்டத்தின் தேவை.
ஆம் ஆத்மி ஒரு "அடை மழை"
அதில் கலங்கள் இருக்கலாம்
அமிலக்கழிவுகள் இருக்காது
குளங்கள் நிறையுமே தவிர
குருதிகள் ஓடாது.
திமுகவின் இரட்டை நிலைப்பாடு posted byS.A.Muhammad Ali Velli (Dubai)[13 April 2014] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34269
தமிழகத்தில் அதிக இடங்களை பெரும் கட்சியிடமே மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சி ஆதரவு கோரும் நிலையில் தற்போதையை நிலவரப்படி வாய்ச்சொல் வீரர் கருணாநிதி பத்து இடங்களுக்கு மேல் ஜெயிப்பது கடினம்.
மதவாதத்திற்கு எதிராக பேசும் கருணாநிதி பிஜேபி க்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் என்று உறுதிமொழி கொடுக்க வில்லை. மோடிக்கு எதிராக தான் பேசுகிறார். பிஜேபி பெரும்பான்மை சீட்டுக்களை பெறாவிட்டால், அத்வானியை தவிர்த்து வாஜ்பாயியை கொண்டு வந்தது போல் வேறு யாரையாவது முகமூடியாக தேர்தலுக்கு பின் கொண்டு வந்தால் இந்த வாய்ச்சொல் வீரர் நாங்கள் சில நிபந்தனைகளுடன் ஆதரிக்கிறோம் என்று வாய் கூசாமல் சொல்ல கூடியவர்.
அம்மா எதிரி என்றால் அய்யா துரோகி. ஆகையால் திராவிட கட்சிகளை நம்பி மோசம் போனது போதும். அதிமுக வை விட திமுக அதிக சீட்டுக்கள் பெற்றால் அந்தர் பல்டி அடிக்க தயங்க மாட்டார் இந்த கலைஞர். இல்லை என்றால் நான் தான் சிறுபான்மை மக்களின் தலைவன் என்று தனக்கு தானே பட்டம் சூட்டி கொள்வார்.
திருநெல்வேலியில் நடந்த திமுக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் மமக வை சேர்ந்த தலைவர் ஒருவர் மோடியை எதிர்த்து பேசிய பொழுது திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது இஸ்லாமியர்களின் ஓட்டுக்களை பெறுவதர்காகவே இந்த குள்ள நரி மோடியை எதிர்க்கிறது. பிஜேபி க்கு ஆதரவு இல்லை என்று திமுக உறுதிமொழி கொடுக்க தயாரா?
இஸ்லாமிய கட்சிகள் போட்டியிடும் தொகுதியில் பாரபட்சமின்றி நமது சமுதாய வேட்பாளர்கள் வெற்றிக்கு உழைப்பதும் மற்ற தொகுதிகளில் ஊழல் மற்றும் மதவாதத்திற்கு எதிராக போர்ராடும் ஆம் ஆத்மி கட்சிக்கும் ஆதரவு அளிப்பதே சால சிறந்தது ஆகும்.
செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: அதிமுகவுக்கு போடப்படும் வாக்குகள் பாஜகவுக்கு சாதகமாகும்! முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எத்தனை காலம் தான் ஏணியாய் இருப்பது ? posted byS.A.Muhammad Ali (துபாய் )[11 April 2014] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34246
முஸ்லிம்களின் தாய் கழகமான முஸ்லிம்லீக் வழக்கம்போல் ஒரு சீட்டை பெற்று கொண்டு திமுகவிடம் கட்சியை அடகு வைத்து விட்டது. இதற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட விடுதலை சிறுத்தை, பா.ம.க , தேமுதிக போன்ற கட்சிகள் எல்லாம் அசுர வளர்ச்சி அடைந்து விட்டது. முன்பு தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சியாக இருந்த ஒரு மாபெரும் கட்சி இன்று, பாராளுமன்றத்திற்கு ஒரே ஒரு சீட்டை மட்டும் பெற்றுக்கொண்டு தன்மானத்தை இழந்து நிற்கின்றது. சமீபத்தில் கூட நடைபெற்ற முஸ்லிம்லீக் கட்சி நடத்திய மாநாட்டிற்கு கூடிய கூட்டத்தினை கண்டால், நமக்கே பிரமிப்பாக இருக்கின்றது.! இவ்வளவு செல்வாக்கை வைத்துகொண்டு இக்கட்சி ஏன் மேலும் மேலும் வளர்ச்சிபெற முடியாமல் திணறுகின்றது என்று நம்மால் கணிக்க முடியவில்லை!.முஸ்லிம்களின் ஓரணி என்ற கோட்பாடே நம் அரசியல் தீர்வுக்கு வழிவகையாகும். பின் நமக்கு சச்சார் கமிட்டியும் தேவை இல்லை!. சாச்சா கமிட்டியும் தேவை இல்லை!.
தற்போது உள்ள சூழ்நிலையில் முஸ்லிம்கள் போட்டியிடும் தொகுதியில் கட்சி வேறுபாடின்றி அனைத்து முஸ்லிம்களும் ஆதரவு அளிக்க முன்வர வேண்டும். மற்ற தொகுதிகளில் ஊழல் மற்றும் மதவாதத்தை தேசிய அளவில் எதிர்க்க கூடிய குற்ற பின்னணி இல்லாத வேட்பாளர்கள் கொண்ட ஆம் ஆத்மி கட்சியை நம் மக்கள் ஆதரித்தால் தான் ஏற்புடையதாக இருக்கும்.
திமுக தனது முன் வாசலை காங்கிரஸ் கட்சிக்கும் பின் வாசலை பிஜேபி யிற்கும் திறந்து வைத்து உள்ளது. காசை விட்டெறிஞ்சா எந்த தொகுதியிலும் ஜெயிக்கலாம் என்ற எண்ணத்தை வித்திட்ட திமுக, மற்றும் அதிமுக என இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.
நமது தொகுதியில் ஆம் ஆத்மி சார்பாக போட்டியிடும் சமூக போராளி தோழர் ம.புஷ்பராயன் அவர்களின் கரத்தை வலுப்படுத்துவது நம்முடைய கடமை.
வாரிசு அரசியலை ஒழிக்க,
ஊழலை அகற்ற,
மதவாதத்தை ஒழிக்க,
சிறையில் வாடும் குற்றமற்ற இஸ்லாமிய சகோதரர்களை மீட்க,
dcw விற்கு எதிராக போராட,
வாக்களிப்பீர் துடைப்பம் சின்னத்திற்கு .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross