Re:...பேய் ஆளும் ஊரில் posted byசெய்து அலி (காயல்பட்டினம் )[23 December 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32154
அம்மாடி எப்போ எப்போ அம்மா தமிழர்களின் முதுகின் மீது ஏறி தலைமீது எம்பி எட்டி தள்ளி டெல்லி உயரத்திற்கு சென்று செங்கோட்டைக்குள் குதித்து அங்கேயே நிரந்தர போனி பண்ணப்போகிறார்கள் .அம்மா பிரதமர். அப்பா பிரெசிடெண்ட் இரண்டு ராகு கேதுகளும் இங்கிருந்து தொலைந்தால் நிம்மதி நாம் பெற்ற இன்பம் இந்த நாடும் பெற்று எல்லாமே நாறட்டும்
Re:...உண்ட மயக்கம் posted bySEYED ALI (ABUDHABI)[30 August 2013] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29868
ஆஹா நெய்ச்சோறும்,கத்தரிக்காய் மாங்காயின்,சிறு புளிப்புடன் காயல் களறி கறியையும், பிசைந்து போடு சோற்றையும் விட்டுவைக்காமல் போட்டு வாசமும் மணமுமாக உண்ட களைப்புடன் வேப்ப மர காற்றில் சுகம் காணும்,வெள்ளை வேட்டி மஹா ஜனங்களே உங்களின் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.ஆமா MASTER OF EMINENT HEALTH EDUCATION & RESEARCH (MEHER ) அலி அவர்கள் ஏன் கால்களை நீட்டி தூணில் சாய்ந்து உட்கார்ந்து விட்டார்கள்?உறங்கவில்லையா?
Re:...ஒரு பிறையா?!!! posted bySEYED ALI (ABUDHABI)[28 August 2013] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29819
சின்ன வயதிலிருந்தே ஒரு ஆதங்கம்,வானத்தில் ஒரு பிறை தானே இருக்கிறது,இது எப்படி ஊருக்கொரு பிறையாக பிறக்கிறது,என்றொரு கேள்வி மனதில் நெருடியது.இதை பற்றி கேட்டாலே அதிகப்பிரசங்கி என்ற பழிதான் மிஞ்சியது.நாட்காட்டி என்றாலே அது எல்லோருக்கும் ஒரு நாளை காட்டுவதுதான் பொருத்தம்,ஆளுக்கு ஒரு நாளை காட்டினால் அதில் வரலாற்றை எப்படி பதியமுடியும்.ஹிஜ்ரி காலண்டரை பிரிண்ட் போட்டால் கூட ரமழான் வந்தவுடன் அது பயனற்று போய்விடுகிறது.எதோ ஒரு நல்ல முடிவு வரட்டும்.
Re:...பாராட்டு posted bySEYED ALI (ABUDHABI)[13 June 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28010
ஆஹா.அருமையான முயற்சி அழகான பள்ளி.நம்மூருக்கு பெருமை சேர்க்கும் ஒரு அறிய முயற்சி.
இந்தக் குழந்தைகளை காணும்போது எனக்கு ஒரு அழகான பழைய பாடலின் வரிகள் நினைவுக்கு வருகிறது,'பால் மணக்கும் பருவத்திலே உன்னை போல் நானிருந்தேன்,பட்டாடை தொட்டிலிலே சிட்டுப்போல் படுத்திருந்தேன் அந்நாளை நினைக்கையிலே என் வயதும் மாறுதடா உங்களுடன் ஆடி வர உள்ளமே தாவுதடா..'
Re:...பிரார்த்தனை posted bySEYEDALI (ABUDHABI)[11 June 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27912
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்.இறைவன் மர்ஹூமின் பிழை பொறுத்து சுவனம் அளிப்பானாக.ஆமீன்.தங்கம் காக்கா அவர்களுக்கும்,அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது சலாமும் ஆழ்ந்த அனுதாபங்களும்.அஸ்ஸலாமு அலைக்கும்.பிரிவினால் துயருறும் நீங்கள் அனைவரும்,யகீன் எனும் இந்த இறைவனின் ஏற்ப்பாட்டிர்க்காக சப்ர் செய்யவும்.
Re:... posted bySEYED ALI (ABUDHABI)[17 May 2013] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27433
இரண்டு ஆண்டுகளில் இந்த தாய் செய்த சா(வே)தனைகள், மின்தடை நேரத்தை ஒரிலக்கத்திலிருந்து ஈரிலக்க எண்ணிற்கு உயர்த்தியது, புஸ கட்டண உயர்வு, ஆயிரக்கணக்கில் மக்கள் பணத்தை வீணடித்து சட்டசபை நடத்துவதற்காக, கட்டப்பட்ட கட்டிடத்தை மேலும் வீணடிக்க உருப்படாத ஆஸ்பத்திரி ஆக்கியது, சமச்சீர் கல்வி விஷயத்தில் கஜிநி முஹமது பாணியில் கோர்ட்டுக்கு படை எடுத்து மக்கள் பணத்தை வீணடித்தது, மெட்ரோ ரயில் போடுவதற்காக எம்ஜியாரால் கட்டப்பட்ட அண்ணா வளைவை இடித்து பிறகு மீண்டும் கட்டி மக்கள் பணத்தை துவம்சம் செய்தது, மந்திரிமார்களை கைகூப்ப வைத்து அழகு பார்த்தது, இப்போது தமிழ் தாய்க்கு சிலை வைக்க பல நூறு கொடிகளை உருப்படாமல் வீணடிப்பது, இன்னும் வெற்று அறிக்கைகளை விட்டு ஏமாற்றுவது, இப்படி பட்டியலிடலாம் இவர் சாதனைகளை.
ஆனாலும் என்ன செய்ய இன்னும் அப்பா அவர்களின் கொள்ளை சாதனைகளை இவர் மிஞ்சவில்லை. அந்த வகையில் இவரை மன்னிக்கலாம்தான்.
Re:...பாலுக்கும் காவல்....!!! posted bySEYED ALI (ABUDHABI)[19 April 2013] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26953
இதை யாராவது வைகோவிடம் சொல்லி வையுங்களேன்.அவர்தான் இன்று தமிழகத்தின் உரிமைகளுக்கும்(பாலுக்கும்) காவல்,ஈழத்திற்க்கும்(பூனைக்கும்) தோழன்.என்னே அரசியல் சாணக்கியத்தனமும் தமிழர்களின் கேணத்தனமும்.
அன்று!(1982-83) ஒரு முறை துக்ளக் சோ தன்பத்திரிக்கையில் அகதிகளாக இங்கு ஓடிவந்த இலங்கை தோட்டத்தொழிலாளர் ஒருவரிடம் பேட்டி காணுகையில் உங்களுக்கு ஈழம் வேண்டுமா என கேட்டார்.அவருடைய பதில்"ஐயோ அதை நாங்கள் கேட்கவும் இல்லை,அது எங்களுக்கு வேண்டவே வேண்டாம்"என்று.
அவர்கள் நம் தொப்புழ் கொடி உறவுகள்.ஈழம் என்று வந்தால் எங்களுக்கு இங்கும் இடமில்லை.அங்கும் இடம் தர மாட்டார்கள் என்று பதறினார்.சமீபத்தில் தலைமன்னார் வீதியில் ஈழ மீனவர்கள் ஆர்ப்பாட்டம் பண்ணினார்கள்.இந்திய மீனவர்கள் கச்சதீவு பகுதியில் மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து.இப்போது சொல்லுங்கள் இந்த வைக்கோ போன்றோரின் தூண்டுதலால் ஈழ விடுதி போராட்டம் நடத்தும் தமிழன் ஒரு கேணயன்தானே.
செய்தி: காயல்பட்டினம் நகராட்சியில் திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன உயிரி எரிவாயு கூடம் (BIO-GAS PLANT) அமைக்க நிதி ஒதுக்கீடு! சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bySEYED ALI (ABUDHABI)[13 April 2013] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26839
எதோ நல்லது நடந்தால் சரிதான் பாராட்டத்தான் வேண்டும். திட்டங்கள் வெறும் அறிவிப்போடு நின்றால் அது ஏமாற்றம்தான். எனது தலைமை நான் என்ற அகங்காரத்துடன் எக்கச்சக்கமான் நிலைமைக்கும் மீறிய பட்ஜெட்டுகளுடன் திட்டங்களின் பட்டியலை, அம்மா அறிவிப்பதை பார்த்தால் மொட்டைகளின் மண்டையில் தேங்காய் அரைப்பது மாதிரிதான் இருக்கு.
காவேரி பிரச்சினையில் நடுவர்மன்றத்தின் தீர்ப்பை அம்மாவின் தலைமையில் மத்திய அரசை நிர்பந்தித்து அரசிதழில் வெளியிட்டு வெற்றிவிழா கொண்டாடியாச்சு.ஆனால் மேட்டூர் வரண்டதுதான் மிச்சம்.
கேசும் அராபிய இரவுக்கதைகள் மாதிரி,ஒண்ணுக்குள் ஒன்னு என்று முடிவற்று போய்க்கொண்டேதான் இருக்கிறது.அதற்க்கு ஆகும் செலவே அறிவித்த அத்தனை திட்டங்களையும் தூக்கி சாப்பிட்டு விடும். பிறகு முல்லைபெரியார் தொடர் சீரியல் வெயிட் பண்ணுது. இந்த லக்ஷணத்தில் இவர் அறிவிப்பதை எல்லாம் எப்படி நம்புவது?
எல்லாம் செல்லத்திட்டம் மோனோவின் கதிதான்..பிறகு அம்மா போய் அப்பா வந்துவிடுவார்.அவர் பங்குக்கு தமிழன் மண்டையில் மீண்டும் மிளகாய் அரைப்பு. மண்டையை கொடுக்கும் நமக்கு வெட்கம் என்பதும் இல்லை. சலிப்பும் இல்லை.விதி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross