Re:... posted byHameed Sirajudeen (Villupuram)[14 March 2014] IP: 106.*.*.* India | Comment Reference Number: 33706
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமதூருக்கு தேவையான
மிக நல்லதொரு பதிவு...
குஜராத் 'மோடி' மஸ்தானின் தேர்தல் சூட்டில் நாடே காற்று வாங்கி வரும் இந்த வேளையில், காயலம்பதியினர் சுவாசிக்கும் காற்று மாசு பட்டு வருகிறது என்பதை குஜராத் பூகம்பம் மூலமாக தெளிவு படுத்தும் இந்த கட்டுரை நமக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று. இது போன்ற கட்டுரைகள் தான் நமது தேவையை நமக்கே எடுத்து காட்டுகிறது. ஊடகங்களும் இது போன்ற கட்டுரைகளை அதிகம் வெளியிட வேண்டும்.
கல்வியை தருவது அரசாங்கத்தின் கடமை. ஆனால், அந்த கல்வியை தனியாருக்கு தாரை வார்த்து விட்டு சாராயத்தை காய்ச்ச போய்விட்ட அரசாங்கத்திற்கு நமது பிரச்சனை கண்ணில் படாது. நாம் தான் அதை தெரிய வைக்க வேண்டும். ஊடகங்கள் தான் அந்த வேலையை கையில் எடுத்து போராட வேண்டும்.
அதனால் தான் ஊடகங்களை ஒரு நாட்டின் நான்காவது தூணாக சித்தரிக்கின்றனர்.
ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளில் சிக்கி தவிக்கும் நாடுகளில் கூட ஊடகங்கள் மனது வைத்ததால் பிரச்சனைகள் தீர்ந்த வரலாறு நிறைய உள்ளது. நமது நாட்டை பொறுத்தவரை ஊடகங்களின் சக்தி வீணாகி வருகிறது.
நம்மை பொறுத்த வரை நடிகர் நடிகைகளின் வாழ்க்கை வரலாறு அறியவும், அரசியலாளர்களின் அறிக்கை பலத்தை அறியவும் மட்டுமே ஊடகங்களை பயன்படுத்தி வருகிறோம் என்பது வெட்கக்கேடு. இது போன்ற கட்டுரைகளை காண்பதைவிட அந்த மாதிரி படங்களுக்கு வரும் 'லைக்' அதிகமாக இருக்கிறது. ம்ம்ம்ம் என்ன செய்ய?
டி சி டபிள்யு - ஒரு முற்றிய நோய் கிருமி. அதனை அழிப்பது மட்டுமே நமது சுற்றுபுறத்திற்கு நல்லது. ஒரு லட்சம் கையெழுத்து மட்டுமல்ல, கரங்களும் இணைய வேண்டிய வேளை வந்து விட்டது.
சுற்றுசூழல் மாசு விளைவிக்கும் டி சி டபிள்யு இல்லாமல் போக வல்ல ரஹ்மானிடம் கரமேந்துவோம்.
செய்தி: ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளியின் முன்னாள் பொருளாளரும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முன்னாள் மேலாளருமான எம்.ஏ.எஸ்.ஹமீத் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byHameed Sirajudeen (Pondicherry)[13 September 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 22099
இன்னா நில்லாஹி வ இன்னா இலஹி ராஜிஹூன்.
அன்னாரின் மறு உலக வாழ்க்கையில் வல்ல ரஹ்மானின் அருள் புரிவானாக.
Re:மரணத்தை வெல்ல முடியுமா? ம... posted byHameed Sirajudeen (Pondicherry)[01 June 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 20799
தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பலர்
வாட பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே .....
என்ற பாரதியாரின் வரிகள் நமக்கு பொருந்திவிடுமோ என்று அச்சப்படும் நிலைக்கு தான் நாமெல்லாம் சென்றுக் கொண்டு இருக்கிறோமோ என்ற கவலை கட்டுரை ஆசிரியரின் வரிகளில் ஆதங்கமாக வெளிவருவதை காண்கிறோம்.
“ஒரு கைப்பிடி அளவு உணவு ஒரு மனிதனுக்கு போதுமானது” – என்பது நமக்கு இஸ்லாம் எனும் வெளிச்சத்தை எடுத்தியம்பிய பெருமானார் (ஸல்) அவர்களின் அறிவுரை. நாம் கடைப்பிடிக்கிறோமா என்ன? “தின்று கெட்டான் து...ன்’ என்பது தான் நாம் வாங்கி வைத்திருக்கும் பட்டப்பெயர். அதுவும் நமதூர் ‘கலறிச் சோறு’ என்றால் கறியையும் எண்ணையையும் ஒரு கைப் பார்த்துவிடுகிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. கட்டுரை ஆசிரியரின் கவலைகளில் இதுவும் உள்ளது.
டாக்டருக்கு நூற்றுக்கணக்கில் செலவு செய்வதில் நமக்கு தயக்கம் இல்லை. மருந்து மாத்திரைகளில் ஆயிரக்கணக்கில் செலவு செய்வதில் நமக்கு தயக்கம் இல்லை. ஹாஸ்பிடல்களுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்வதில் நமக்கு தயக்கம் இல்லை – ஆனால், ஒரு ஒரு மணி நேரம் நடைப் பயிற்சி செய்வதற்கு நமது மக்கள் தயக்கம் காட்டிவருகிறார்களே என்ற சமூக கவலை கட்டுரையில் மிகுதியாகவே தெரிகிறது.
வல்ல ரகுமானின் கிருபையால், வீரபாண்டிபட்டணம் போகும் வழியிலும், ரத்தினாபுரி போகும் வழியிலும் நமது மக்கள் நடைப்பயிற்சி செய்வதை சமீபகாலமாக பார்க்கிறோம். வரவேற்க வேண்டிய செயல். இது தொடர வேண்டும். வல்லோனைப் பிரார்த்திப்போம்.
Re:முயன்றால் உங்களால் முடியு... posted byHameed Sirajudeen (Pondicherry)[29 April 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 21027
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
முட்டையோடு குஞ்சு வாழ காற்று உள்ளது
முட்டிப்பாரு நீயும் வாழ வாழ்க்கை உள்ளது.
இளமையில் உழைப்பவன் முதுமையில் சிரிக்கிறான்
இளமையில் படுப்பவன் முதுமையில் தவிக்கிறான்
கடலுக்கு பயந்தவன் கரையினில் நிற்கிறான்
அதை படகினில் கடந்தவன் உலகை ஆள்கிறான்.
படிப்போரை உத்வேகப்படுத்தக் கூடிய
கருத்துக்களையும்,
நெஞ்சில் நிறுத்தினால் துள்ளி எழச் செய்யும்
எண்ணங்களையும்,
அருமையான நடையுடன் கூடிய
எழுத்துக்களையும்..
கொண்ட இந்த கட்டுரை பலரை
‘முயற்சித்து முன்னேற’ தூண்டும் என்பதில் ஐயமில்லை.
ஆசிரியரின் இன்னும் பல ஆக்கங்களை
எதிர் நோக்கி காத்திருக்கிறோம்.
தொடரட்டும் அவரது இந்த மகத்தான பணி.
Re:சமூக நலனில் தண்ணீரும் ஒர... posted byHAMEED SIRAJUDEEN (Pondicherry)[20 March 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 20988
அருமையான கட்டுரை....
நம்மில் எத்தனை பேர் இந்த "தண்ணீர் ஆக்கிரமிப்பு" செய்வதில் இருந்து விலகி இருக்கிறோம் என்று உள் நோக்கி உற்று பார்ப்பது மிக முக்கியம்.
மேலும், தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சி எடுப்பதை விட அடி-பைப்பில் அடித்து எடுப்பது நமது உடலுக்கு நல்லது.
கூடுதலாக ஒரு நன்மையையும் உள்ளது. நாம் இப்போதெல்லாம் வீட்டில் உள்ளவர்களோடு கலந்து பேசுவதே இல்லை. இனி அடி-பைப்பில் தண்ணீர் அடித்துக் கொண்டே, உங்கள் மனைவி, தாயார், பிள்ளைகள் அல்லது உங்கள் அன்புக்குரியவர்களுடன் பேசிக் கொண்டே தண்ணீர் அடித்துப் பாருங்கள். பல மன இறுக்கங்கள் அகன்று உடல் நலத்துடன் உள்ளமும் விசாலமாகும்.
Re:ஒரு வழி பாதைக்கு மனச் சுவ... posted byHAMEED SIRAJUDEEN (Pondicherry)[29 February 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 20957
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மிகச் சிறந்த, தற்போதைய காயலுக்கு தேவையான ஒரு கட்டுரை.
With a hearty wish for the brothers of our beloved town to become closer. These kinds of thoughts are the must for our town now.
இதை படிக்கும் நாமும் கூட,
இது போன்ற என்ணங்களை வளர்த்துக் கொண்டு,
இவ்வாறான எண்ணங்கள் கொண்ட
அனைவரின் துணை கொண்டு,
பரஸ்பரம் புரிந்து கொள்ள தயங்கிக் கொண்டிருக்கும்
சகோதரர்கள் இணைந்து, மனச் சுவர்களை இடிக்க
முயற்சி செய்ய வேண்டும்.
எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக.
வஸ்ஸலாம்.
சினேகத்துடன்
சிராஜுதீன்
Re:நகரில் ஆக்கிரமிப்புகளை அக... posted byHAMEED SIRAJUDEEN (Pondicherry)[27 February 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 17222
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மேலே கமெண்ட் எழுதிய சகோரர்களில் பலர் ஒன்றில் ஒற்றுமையாக இருக்கிறார்கள். “தனக்கு வரும் போது தான், தலைவலியும் திருகு வலியும் தெரியும்” – என்பதை நாம் எல்லோருமே மறந்து விடுகிறோம். சரி! அது மனித இயல்பு.
ஆனால், போகிற போக்கில் கமெண்ட்களை அள்ளி வீசாமல், தயவு செய்து அடுத்தவர்களின் மனவலிகளையும் சிறிது யோசித்து எழுதியிருக்கலாம்.
நீங்கள் சொல்வதைப் போல், ஆவணங்களும் சான்றுகளும் சரியாக இருந்தால், இடித்த வீட்டை கட்டிக் கொடுத்து விடுவார்களா? வீட்டின் உரிமையாளர் இல்லாத போது, அரசாங்க அதிகாரிகள் வருவார்களாம், நோட்டீஸ் கொடுத்தோம், பதில் இல்லை என்று கூறி வீட்டை இடித்து விடுவார்களாம். அவரது நிலையை யாராவது கணக்கில் எடுத்தார்களா? கிட்டத்தட்ட 25-30 வருடம் பழமையான வீடு அது. இதுவரை எந்த அரசாங்க அதிகாரிக்கும் கண்ணில்படாமல் மறைந்து இருந்ததா?.
20 வருடமாக ஒருவழி பாதை வரவேண்டும் என காயல்பட்டணமே தவம் கிடக்கிறது. இத்தனை வருடமாக எடுக்கப்படாத முயற்சி, சில நாட்களிலேயே எடுக்கப்படுவதைப் பார்த்தால், சகோரதரர் முஜீப் அவர்களின் கருத்தின் கடைசி பாராவில் உள்ள வரிகள் உண்மையாகிவிடுமோ என சந்தேகம் வருகிறது..
கிட்டத்தட்ட இதே வார்த்தைகளில் தான் பெரிய தெருவாசிகளும் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என இதே வெப்-சைட்டில் எழுதினார்கள். அப்போது எழுதியதற்கும், இப்போது நீங்கள் எழுதுவதற்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. (இப்போது மீண்டும் முதல் பாராவை படிக்கவும்)
இடிக்கப்பட்ட வீடு, ஸ்தாபனங்களின் உரிமையாளர்கள் அனைவருமே காசு உள்ளவர்களா? (பணம் உள்ளவர்களாக இருந்தாலும், இப்போதுள்ள விலைவாசியில் கட்டுபடியாகுமா? மறுபடியும் கட்ட முடியுமா?)
Re:IOB வங்கி கணக்கு 15 இலக்க... posted byHAMEED SIRAJUDEEN (Pondicherry)[25 February 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 17191
சகோதரர்களே!
இந்த நடைமுறை தற்போது வேண்டுமானால் கடினமாக இருக்கலாம், பிற்காலத்தில் வரப்போகும் ஆன்-லைன் முறைக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதை மறந்து விட வேண்டாம். நீங்கள் சொல்வது போன்று டெபாசிட்-செலான் சிறியதாக இருக்கிறது என்பதை ஒற்றுக் கொள்கிறேன். அதை மாற்ற வங்கி நபர்களை நாம் தூண்ட வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross