செய்தி: 2ஆவது பைப்லைன் திட்டம் குறித்து விவாதிக்க காயல்பட்டினம் நகர்மன்றத்தில் அவசர கூட்டம்! காரசாரமான வாக்குவாதங்களுக்கிடையில் தீர்மானம் நிறைவேற்றம்!! வீடியோ காட்சிகள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bysulaiman (abudhabi)[20 December 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24618
அஸ்ஸலாமுஅழைக்கும் ,
நமது நகராச்சி கூட்ட நிகழ்வுகளை பார்க்கும்போது காரிதுப்பும் நிலைக்கு தள்ளபடுகிறோம். யாருக்கும் விட்டு கொடுக்கும் தன்மை இல்லை ,தலைவிக்கும் உறுபினர்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி, புரிந்துணர்வு இல்லாத தன்மை ,பகைமை இவைகள் தெளிவாக தெரிகிறது.
சகோதரி ஆபிதா அவர்களுக்கு நிர்வாக திறமை மிக மோசமாக இருக்கிறது ,ஒரு தலைமை எப்படி பிரச்சனைகளை சமாளிக்க வேண்டும் என்ற படிப்பினை இல்லாமல் இருக்கிறார், பொறுமை காக்க வேண்டிய இடங்களில் அவசர பட்டு வார்த்தைகளை கொட்டிவிடுகிறார். பிறகு அதுவே பூதாகரமாக ஆகிவிடுகிறது.
சகோதரி ஆபிதா அவர்கள் தனக்கு தனது ஆதரவாளர்களால் தவறாக சொல்லிதரப்பட்ட போதனைகளில் இருந்து வெளியே வரவேண்டும்.உறுப்பினர்கள் எது செய்தாலும் அது தனக்கு எதிரான சதி ,நாட்டமை தூண்டுதல் இதுபோன்ற புரோஜனம் இல்லாத சிந்தனைகளில் இருந்தும் பேச்சுகளில் இருந்தும் விடுபட வேண்டும்.இருதரப்பாரும் மனதில் ஒருவரை பற்றி ஒருவர் பகமைஉடனும் ,தவறான சிந்தனைஉடனும் நடக்கும் எல்லா கூட்டங்களின் முடிவும் இப்படித்தான் இருக்கும் ,ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி வீசவேண்டும் என்பதற்காகவே கூடும் கூட்டத்தில் ஊர்நலனை எப்படி எதிர் பார்க்கமுடியும்.
சகோதரி ஆபிதா அவர்களை நோக்கி கடும் வார்த்தைகளை உபயோகிக்கும் உறுப்பினர் சுகு கண்டிக்க படக்கூடியவர், இவர் தனது நாவை அடக்கி கொள்வது நல்லது. தலைமை பொறுப்புகளில் இருபவர்களும் ,உறுபினர்களும் எப்படி நீதியாக நடக்க வேண்டும் என்று இஸ்லாம் கற்றுதருகிறதோ அதை அறியாமல், தான்தோன்றி தனமாக நடப்பதுதான் இத்துனை சீரழிவுக்கும் காரணம். மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழவேண்டிய நாம் இன்று கேளிபொருளாக மாறிக்கொண்டு இருக்கும் இந்த அவல நிலையை பார்க்கும் போது மனம் வேதனைபடுகிறது.
Re:... posted bysulaiman (abudhabi)[19 December 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24614
அஸ்ஸலாமுஅழைக்கும்,
நமது நகராச்சி மன்ற தலைவி அவர்கள் தனக்கு தோன்றியதை, நகராச்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிரான கருத்துக்களை பத்திரிக்கைகளுக்கு பேட்டியாக கொடுக்கலாம்! அது நாடு முழுவதும் அறியபடலாம் ,இதை குற்றம் காணமல் ஏற்றுகொள்வார்கள். நகராச்சி மன்ற உறுப்பினர்கள்,தலைவி பற்றி தாங்கள் அறிந்ததை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவாக கொடுத்தால் குற்றம் காண்கிறார்கள். மீண்டும் பழைய பல்லவியை,புளித்துப்போன கற்பனை கதைகளை கருத்துகளாக தட்டிவிடுகிறார்கள், மடியில் கணம் இல்லையென்றல் மனதில் எதற்கு பயம் ??? புகார் மனுவை ஏற்று தாரளமாக விசாரணை நடத்தட்டும்.தலைவி அவர்கள் அதைஎதிர்கொள்வார்கள்,அப்பொழுதுதான் அவர்களின் நிர்வாக திறமையை?? எல்லோரும் அறிவார்கள்.என்று கருத்து பதிவதுதனே சிறந்த செயலாக இருக்கும்,இதற்க்கு மாறாக மனுகொடுத்தவர்களை வசைமாரி பொழிவது ஏனோ? இன்னும் புகழ்பாடிகளின் குரல்கள் ஒலிப்பது ஏன்???
Re:... posted bysulaiman (abudhabi)[06 December 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24395
அஸ்ஸலாமுஅழைக்கும் ,
காவி பயங்கரவாதிகள் தங்களுடைய நீண்ட நாள் மிருக வெறி கனவை நிறைவேற்றிகொண்ட தினம் டிசம்பர் 6 1992 .நமது நாட்டின் அனைத்து அரசு இயந்திரங்களும் வாய்பொத்தி அநியாயத்திற்கு துணை போன நாள் இது. ஜனநாயகத்தை மதிக்க கூடிய, சமூக நல்லிணகத்தை மதிக்ககூடிய அனைத்து தரப்பு மக்களுக்கும் விழுந்த மரண அடி பாபர் மஸ்ஜித் இடிப்பு,இந்த நாளை முஸ்லிம்களும் ,நடுநிலைவாதிகளும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.
பாபர் மஸ்ஜித் வழக்கை பொறுத்தவரை அதே இடத்தில் மஸ்ஜிதை கட்டிகொடுத்து அங்கு தொழுகை நடப்பதுதான் ஒரே தீர்வு.வேறு எந்த தீர்வையும் முஸ்லிம்கள் எற்றுகொள்ளமாட்டர்கள்.
செய்தி: DCW தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் விதிமீறல்களுக்கெதிரான போராட்டத்திற்கு ஆதரவளித்தோருக்கு KEPA நன்றியறிவிப்பு! அனைத்து கடைகளுக்கும் நேரில் சென்று நன்றி தெரிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bysulaiman (abudhabi)[05 December 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24366
அஸ்ஸலாமு அழைக்கும்,
மனிதன் நன்றி பாராட்ட கூடியவனாகவே இருக்கவேண்டும், போரட்ட அழைப்பை ஏற்று ஊர் நலன் கருதி கலந்துகொண்டவர்களுக்கும் ,ஒத்துளைத்தவர்களுக்கும் KEPA நன்றி தெரிவித்துள்ள விதம் பாராட்ட கூடியது. இதுபோன்ற செயல் கடமையான ,ஆரோக்கியமான செயல்கள் ஆகும்.அல்ஹம்துலில்லாஹ்!
செய்தி: DCW ஆலையின் அத்துமீறலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்! நகரின் அனைத்து தரப்பினரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bysulaiman (abudhabi)[01 December 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24301
அஸ்ஸலாமுஅழைக்கும் ,
அநியாயத்திற்கு எதிராக களம் கண்டுள்ள பெரும் மக்கள் திரளை பார்க்கும்போது உள்ளம் பூரிக்கிறது.அல்ஹம்துலில்லாஹ்,நாசகார தொழிற்சாலையை அதன் விரிவாக்கத்தை முடக்கும் வரை நம்முடைய போராட்டம் தொடரவேண்டும்.அல்லாஹ் நமக்கு வெற்றியைதருவனாக.தர்மம் வெல்லும் !அதர்மம் அழியும் !! இன்ஷாஅல்லாஹ் அதர்மம் அழிந்தேதீரும்!!!
அன்பார்ந்த சகோதரர்களே !நம்முடைய சமுதாய நலனை பாதுகாப்பதாக இருந்தாலும் சரி.ஊர் நலனை பாதுகாப்பதாக இருந்தாலும் சரி .இதற்காக எல்லா கருத்து வேறுபாடுகளயும் தூக்கி எரிந்து விட்டு ஒன்றுபட்டு போராடுவதற்கு நமது மக்கள் யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை.எனவே இதில் யாரையும் யாருடனும் உரசிபார்க்கவேண்டாம்.
ஊர் நலன் ஒன்றை குறிக்கோளாக கொண்டு நடத்தபற்ற இந்த போராட்டத்திற்கு எல்லோரையும் அழைக்கப்பட்டது.அனைவர்களும் கலந்துகொண்டார்கள் ,தங்களின் ஆதரவுகளை தெரிவித்தார்கள் .போராட்டம் முடிந்தபிறகு இப்பொழுது சிலகருத்தளர்கள் பிரிவினை கருத்தை பதிக்கிறார்கள் .இது ஏற்புடையது இல்லை,ஆரோகியமான கருத்தும் இல்லை.
புதியதாக தோன்றும் அமைப்புகள் செய்யும் செயல்கள் எல்லாம் ஊரின் நன்மைக்குதான் என்ற கருத்தை திணிப்பது மிக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.இப்பொழுது இந்த அமைப்பு எடுத்துள்ள இந்த போராட்டம் ஊரின் நலனுக்கான போராட்டம் ,இதற்க்கு நமது மக்களின் அதரவு எப்பொழுதும் இருக்கும்.அதே நேரத்தில் இந்த அமைப்பனாலும்,வேறு எந்த அமைப்பனாலும் ஊரை பிரித்தாலும் செயலில் ஈடுபட்டால் அதற்க்கு மரண அடி குடுத்து முடக்கவும் நமது மக்கள் தயங்கமாட்டார்கள்.
எனவே இதுபோன்ற போராட்ட விசியங்களிலாவது தங்களது குருட்டு வாதத்தை விசம கருத்தாக பதிவு செய்வதை குறிப்பிட்ட சிலகருத்தளர்கள் நிறுத்தி கொள்ளவேண்டும்.
Re:... posted bysulaiman (abudhabi)[12 November 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23788
அஸ்ஸலாமு அழைக்கும்,
சினிமா என்றாலே அதில் பொய்,கற்பனை,வன்முறை ,ஆபாசம் இவைகள் இருக்கவேண்டும்.அப்பொழுதுதான் இதில் முதலீடு செய்பவர்கள் லாபம் சம்பாதிக்க முடியும் ,இவர்கள் எடுக்கபோகும் திரைப்படம் நல்லதாக இருக்குமோ, நம்மை சீண்டாமல் இருக்குமோ என்று நம்பிக்கை நாம் வைப்போமேயானால் அது அவ நம்பிக்கையாகவும்,பெருத்த ஏமாற்றமாகவும் தான் அமையும்,
தமிழகத்தில் எத்தனையோ சினிமாக்களின் பெயர்கள் ஒரு இனத்தையோ ,இனத்தின் தலைவரையோ குறிப்பதாக கூறி, அந்த இனத்தினர்களின் வீரியம் மிகுந்த எதிர்ப்பால் தான் அந்த பெயர்கள் மாற்றப்பட்டன.இது நமக்கு தெரிந்த வரலாறு. காயல்பட்டணம் என்றாலே தமிழகத்தின் பெரும் பலான மக்கள் அறிந்து வைத்து இருப்பது. இது முஸ்லிம்கள் பெரும் வாரியாக வாழ்கின்ற கண்ணியமும்,அமைதியும் இஸ்லாமிய கலாச்சாரத்துடன் மக்கள் வாழ்கிற ஊர் என்பதுதான். இந்த திரைபடத்தின் தலைப்பு காயல்பட்டினம் என்று தெளிவாக இருக்கிறது.இந்த படத்தில் எந்த கருவை மையமாக வைத்து கதை எடுத்தாலும்.இதை பார்பவர்களின் கண்முன்னால்,மன ஓட்டத்தில் நம்முடைய மக்களும்,நம்முடைய இஸ்லாமிய கலாச்சாரமும்தான் பிரதிபலிக்கும்.எனவே கதை கேட்டு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என்ற கருத்தெல்லாம் நம்முடைய கையை வைத்து நம்முடைய கண்ணை குத்தகூடிய செயலாகவே இருக்கும்.
இதில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பேச்சுக்கே இடமில்லை.ஒரு சமூக தீமைக்கு ,இஸ்லாம் தடுத்துள்ள இந்த கேடுகெட்ட வியாபாரத்துக்கு, காலம்தொட்டு இஸ்லாமிய கலாச்சாரத்துடன் வாழ்ந்துவரும் நமது ஊரின் பெயரை வைத்ததற்கு முதலில் நாம் நம்முடைய எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும். திரைப்படத்துக்கு காயல்பட்டணம் என்ற பெயரை மாற்றுவதுக்கான அனைத்து முயற்சிகளும் நாம் மேற்கொள்ளவேண்டும்.
Re:... posted bysulaiman (abudhabi)[11 November 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23740
அஸ்ஸலாமு அழைக்கும்,
சமூக சீரழிவின் பிறப்பிடமாக திகழ்கின்றது சினிமா. இதன் சினிமா கூத்தாடிகள், நமது மார்க்கத்தையும், இஸ்லாமிய கலாச்சாரமாக திகழ்கின்ற நமது ஊரையும் வைத்து சினிமா என்ற பெயரில் பொய்யையும், கற்பனையையும், வன்முறையையும், ஆபாசத்தையும் கதையாக்கி பணம் சம்பாதிக்க முயல்வதை ஆரம்பத்திலையே தடுத்து நிறுத்தவேண்டும். இதில் நமது ஊர் மக்கள் அனைவர்களும் விழிப்புடன் செயல்பட்டு இந்த சமூக தீமையை முளைலையே கில்லி எறியவேண்டும்.
Re:... posted bysulaiman (abudhabi)[05 November 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23508
அஸ்ஸலாமு அழைக்கும்,
தமிழ் பேசும் மக்களிடம் .மார்க்க மற்றும் சமுதாய பணிகளில் உயர்ந்த இடத்தை பிடித்துள்ள தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத். தனது அணைத்து சேவைகளையும் எந்த ஒரு தன்னலமோ, பிரதிபலனோ எதிர்பார்க்காமல் செயல்படுகிற ஒரு சிறந்த ஜமாஅத். இந்த ஜமாஅத் உடைய அணைத்து சேவைகளுக்கும் பிரதிபலனாக இவர்கள் எதிர்பார்ப்பது ஒன்றே ஓன்று தான். அதுதான் "மறுமை வெற்றி".
அல்லாஹ்வின் உதவியையும், அவனுடைய திரு பொருத்தத்தையும், மறுமை வெற்றியும் குறிக்கோளாக கொண்டு செயல்படுகிற தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் உடைய மார்க்க மற்றும் சமுதாய பணிகள் மென்மேலும் சிறப்புற அல்லாஹ்விடம் துவா செய்கிறேன் .
Re:... posted bysulaiman (abudhabi)[30 October 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23308
அஸ்ஸலாமு அழைக்கும் ,பாதுகாப்பற்ற பொழுதுபோக்கு
சாதனங்களை கொண்டுவந்து தனது காரியங்களை நிறைவேற்றி ,கைநிறைய சம்பாதித்த பிறகு நடவடிக்கை எடுப்பதால் யாருக்கு என்ன நன்மை. நோன்பு பெருநாளின் போதே எச்சரித்தும் அதை பொருட்படுத்தாமல் முன் அனுமதி பெறாமலும் மீண்டும் அதே தவறை செய்துள்ளார்கள்.இதை நமது நகராச்சி நிர்வாகமும் வாய்பொத்தி வேடிக்கை பார்த்துவிட்டு 3 நாட்கள் கழித்து அப்புற படுத்தி எதை சாதித்து விட்டார்கள் . காலம் தாழ்த்திய நடவடிக்கை வெறும் கண் துடைப்பு நாடகம்தான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross