செய்தி: மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில் KSC அணி சாம்பியன்! தமிழக அளவிலான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடத் தகுதி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
KSC யின் மகத்தான வெற்றி! posted byMuthu Ibrahim (Hong Kong )[08 April 2016] IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 43446
நடந்து முடிந்த மாவட்ட அளவிலான கால்பந்து லீக் மற்றும் சூப்பர் லீக் நாக் அவுட் ஆட்டங்களில் வெற்றி பெற்று மாவட்டத்திலேயே முதன்மை அணியாக தேர்வு செய்யபட்டுள்ள KSC கால்பந்து அணியிரை மனமார வாழ்த்துகிறேன்.
குறிப்பாக பலம்வாய்ந்த வில்சன் அணியினரை 4-1 என்ற goal கணக்கில் அரை இறுதியில் வெற்றி பெற்றது அற்புதம். லத்தீப், மிஷல் தலா ஒரு goal லும் முஹம்மது அலி இரண்டு goal லும் அடித்தனர்.
இறுதி ஆட்டத்தில் Sprited Youth அணியினரை ஆரம்பம் முதல் தாக்குதல் ஆட்டம் மூலம் ஆடி, நிலை குலையச் செய்து 5 -0 என்ற goal கணக்கில் வெற்றி என்பது மிக அபாரம்! லத்தீப் ஒரு goal லும் முத்து மற்றும் முஹம்மது அலி தலா இரண்டு goal லும் அடித்தனர்.
வெற்றி வாகைச் சூடிய KSC அணியின் வீரர்களையும், அவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்த தம்பி செய்யது முஹியத்தீன் அவர்களுக்கும், KSC நிர்வாகிகள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்!
Re:... V-UNITED KPL போட்டிகள் posted byMuthu Ibrahim (Hong Kong)[11 June 2015] IP: 124.*.*.* Hong Kong | Comment Reference Number: 40950
நல்ல முயற்சி, பாராட்டுக்கள்!
இது போட்டி காலத்தில் உரிய நேரத்தில் பங்கு கொள்ள முடியாத வீரர்கள் மற்றும் போட்டியில் பங்கு பெற்றுள்ள அணிகளில் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையையும் தாண்டிய வீரர்களுக்கான போட்டி என்று சொல்லலாம்.
போட்டிகள் சிறப்பாகவும், சம பலத்துடன் இருக்க வேண்டும் என்ற போட்டி அமைப்பாளர்களின் அறிவுறுத்தலின்படி Goal Keeper, Defence, Midfield, Striker என்று அனைத்து பிரிவுகளையும் தரம்வாரியாக வீரர்களை பிரித்து அவர்களுக்கு தர மதிப்பெண் அளித்து குலுக்கல் முறையில் ஒவ்வொரு அணிக்கும் தேர்வு செய்கின்றனர்.
அதனால் எண்ணிக்கையின் அடிப்படையில் சில வீரர்கள் விளையாடும் வாய்ப்பை இழப்பது இயல்பு. சில வீரர்கள் தங்களின் அலுவல் காரணமாக அனைத்து போட்டிகளிலும் பங்கு கொள்ள வேண்டும் என்ற போட்டி அமைப்பாளர்களின் அறிவுறுதலின்படி இப்போட்டி தொடரில் விளையாட முடியாமல் போயிருக்கலாம்.
அதனால் போட்டி ஏற்பாட்டு குழுவினர் இத்தொடரில் இடம் பெறாத வீரர்களை ஊக்கம் அளிக்க இது போன்ற போட்டியை ஏற்பாடு செய்துள்ளனர் என அறியப்படுகிறது.
Re:... posted byMuthu Ibrahim (Hong Kong)[05 June 2015] IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 40860
இங்கு குர்ஆன் மக்தப் நடத்தம் விதம் சற்று வித்யாசமானது. பள்ளிக்கூடம் செல்லும் மானவர்களுக்கு அவரவர் பள்ளி நேரத்தை கருத்தில் கொண்டு இரண்டு அமர்வாக செயல்படுகிறது. முதலில் CD யில் பதியப்பட்ட குர்ஆன் ஒலியை பின் தொடர்ந்து அனைவரும் ஒன்றாக ஓதுவர். பின் ஒவ்வொருவராக ஓத அவரை பின் தொடர்ந்து அனைவரும் ஓதுவர். இதனால் கூச்சம் போய் தன்நம்பிக்கை எற்பட வழிவகுக்கிறது.
வாரந்தோரும் மார்க்க கல்வி அளிக்கப்படுகிறது. மானவர்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தி மீலாது தினத்தில் மேடையில் பரிசு அளித்து கவ்ரவிக்கப்படுகின்றனர்.
இத்துனை காரியத்தையும் தனி நபராக இருந்து பணியாற்றி வரும் மரியாதைக்குரிய சகோதரர் ஹாபில் தவ்ஹீது அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்ல ஆரோக்கியத்தையும், நற்கூலியையும் அளிப்பானாக, ஆமீன்! மேலும் இந்த மக்தப் அமைய காரனமானவர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்!
ஆசிரியரின் கண்டிப்பான ஒழுக்கம், நேரந்தவராமை கொள்கையால் இன்றைய நவீன காலத்திலும் குரஆன் மக்தபிற்க்கு விரைந்தோடும் மானவர்களை பார்க்கும் போது நம் மனம் ஆறுதல் அளிக்கிறது.
Re:... posted byMuthu Ibrahim (Hong Kong)[23 May 2015] IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 40706
மிகவும் பலம் பொருந்திய பெங்களூர் அணியினரிடம் போராடி வெற்றி வாய்ப்பை இழந்த KSC வருங்காலங்களில் மிகச்சிறந்த அணியாக உருவாக வாழ்த்துக்கள்!
நேற்றைய ஆட்டம் மிகவும் பரப்பரப்பாகவும், விறுவிறுப்பாகவும் அமைந்தது. பெங்களூர் அணியினர்
பெரும்பாலும் தொழில் முறை ஆட்டகாரர்கள் ஆவார்கள். தங்கள் மாநில அணிக்கும், I -League கில் பங்கு கொள்ளும் அணிகளுக்கும் மற்றம் பெங்களூரில் உள்ள ஏனைய அணிகளுக்கும் விளையாடும் வீரர்களை கொண்ட அணியாகும். அந்த அணியினரின் ஆட்டம் மிகவும் வேகமாக இருந்தது. அதை நம் KSC யின் இளம் வீரர்கள் மிகவும் திறம்பட சாமாளித்து ஆடியது பாராட்டதக்கது.
குறிப்பாக KSC யின் தடுப்பாட்டக்காரர்கள் அரண் போல் நின்று எதிர் அணியினரின் ஊடுருவளை தடுத்தமை மிகவும் அருமை. கடந்த ஒரு மாதத்திற்க்கும் மேலாக இப்போட்டியல் பங்கேற்ற வீரர்களுக்கு மிக நல்ல முறையில் பயிற்ச்சி அளித்த அருமை சகோதரர் செய்யது முஹியத்தீன் மற்றும் வீரர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்த KSC யின் நிர்வாகிகளுக்கும் மணமார்ந்த நன்றி!
செய்தி: ஆஸாத் கோப்பை பொன்விழா கால்பந்து 2015: KSC அணி அரையிறுதிக்குத் தகுதி! இன்றைய போட்டியில் USC - சென்னை அணிகள் மோதல்!! அன்றாடம் போட்டிகள் இணையத்தில் நேரலை!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byMuthu Ibrahim (Hong Kong)[18 May 2015] IP: 124.*.*.* Hong Kong | Comment Reference Number: 40632
இளம் வீரர்கள் உள்ளடங்கிய KSC அணியினர் மிக அழகான ஆட்டத்தினை வெளிபடுத்தி அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது மிக்க மகி்ழ்ச்சியாக உள்ளது. மேலும் நன்றாக விளையாடி கோப்பையை தட்டிச் செல்ல வாழ்த்துக்கள்!
இன்று களம் காணும் USC அணி வெற்றி பெற வாழ்த்துக்கள்!
Re:... posted byMuthu Ibrahim (Hong Kong)[17 February 2015] IP: 124.*.*.* Hong Kong | Comment Reference Number: 39288
நமதூரில் இதுவரை சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான ஹாபில்கள் இருப்பதாக அறியப்படுகிறது. அவர்களை ஒருங்கினைக்கும் முகமாக இந்த ஹாபில்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்க்கதக்கது, பாராட்டக்கூடியது.
இதுவரை இந்த அமைப்பில் சேராத ஹாபில்மார்கள் உடனடியாக சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கின்றேன். இயந்திரமயமான இக்காலகட்டத்தில் ஹாபில்களையும் அவர்களின் தரத்தையும் பாதுகாப்பதற்காக தன்னலம் பாராமல் இத்தகைய அரிய முயற்சியில் இறங்கி இயங்கி கொண்டிருக்கும் இதன் நிர்வாகிகள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நற்கூலியை வழங்குவானாக ஆமீன்.
ஹாபில்மார்களும் தங்களின் தரத்தை உயர்த்தும் குறி்க்கோள்களுடன் இது போன்ற போட்டிகளில் கலந்து மாநில அளவில், தேச அளவில், சர்வதேச அளவில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூட வாழ்த்துகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross