Re:... posted byV. Syed Mohamed Ali (shiqiao ,Guangzhou)[04 December 2013] IP: 183.*.*.* China | Comment Reference Number: 31803
அமிர்தா பேக்கரி .... தரத்தால் தலை நிமிர்ந்து நிற்கும் பேக்கரி . தொழிலில் நேர்மை , உழைப்பு ... வெற்றி பெற்றவர் அனைவரும் சொல்வதுதான் . ஆனால் சாச்சா அவர்கள் சற்று வித்தியாசமாக , ஊர் மக்களின் நோக்கம் அறிந்து செயல்பட வேண்டும் என்கிறார் . இதுதான் இந்த பேக்கரியின் வெற்றிக்கு மூல காரணம் .
Re:... posted byV. Syed Mohamed Ali (shiqiao ,Guangzhou)[02 December 2013] IP: 183.*.*.* China | Comment Reference Number: 31772
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் .... " புளியங்கா " சுபுக்கு காக்காவுக்கு ஒரு சிறிய பாலிதீன் கவரே தலைக்கவசம் .
காக்கைக்கும் வாத்துக்கும் குடை பிடிப்போர் எவரும் இல்லையா ?
சம்சுதீன் அசைவ உணவகம் .... இது எந்த சம்சு காக்கான்னு தெரியலையே ! " நம்ம " சம்சு காக்கான்னா பாசத்தோடு போய் சாப்பிடலாம் .
கூட்டாளி ஹிஜாஸ் மைந்தா ... ஒவ்வொரு முறையும் மழை படங்கள் எடுக்கும்போதும் , குளக்கரைக்கு அருகில் இருக்கும் என் வீட்டையே சுத்தி சுத்தி படம் பிடிக்கிறாயே . என்னப்பா காரணம் ? தலைவி வரும் பாதை என்பதாலோ !
அருமையான படத்தொகிப்பிற்கு ஒரு like .
Vilack SMA , சீச்சியாவ் , குவாங்க்ஜோ , சீன மக்கள் குடியரசு .
Re:... posted byV.Syed Mohamed Ali (Hetang , Jiangmen , PRC)[30 November 2013] IP: 218.*.*.* China | Comment Reference Number: 31749
இவ்வளவு அழகான , விலை உயர்ந்த சிவப்பு கலர் சைக்கிளை குத்தகைதாரர் பாதுகாப்பின்றி வெளியில் எல்லைகோடு உள்ளே விட்டால் , விளையாடி விட்டு வந்து பார்த்தால் " லபக் " தான் . பாவம் , சிறுவர்கள் . பறிகொடுத்துவிட்டு வீட்டுக்கு சென்றால் அர்ச்சனைதான் . புது சைக்கிளும் கிடைக்காது .
கடற்கரை பயனாளிகள் சங்கம் , சைக்கிள் , பைக் பாதுகாப்பிற்கு ஏதாவது ஏற்பாடு செய்யலாம்.
Re:... posted byV. Syed Mohamed Ali (shiqiao ,Guangzhou)[25 November 2013] IP: 183.*.*.* China | Comment Reference Number: 31664
முன்பெல்லாம் நமதூர் மக்கள் பெரும்பாலானோருக்கு வயல்கள் இருந்தது . ஆனால் ஒருநாள்கூட வயல்வெளியில் இறங்கி வேலை செய்திருக்க மாட்டார்கள் . " உழவன் " என்ற ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு , அவர் சொல்லும் கணக்கையும் , அவர் தரும் நெல் மூட்டைகளையும் வாங்குவார்கள் . அங்கு என்ன நடக்கிறது என்பதே நம்மவர்களுக்கு தெரியாது . நாளடைவில் உழுகின்ற நிலம் உழவனுக்கே சொந்தம் என்ற சட்டத்தால் எல்லா வயல்வெளிகளையும் உழவனுக்கே தாரைவார்த்து விட்டோம் .
இது ஒருபுறம் இருக்க , நம்மவர்கள் பெரும்பாலானோர் வெளியூரிலும் , வெளிநாட்டிலும் வியாபாரம் செய்து வந்தார்கள் . இதுபோன்ற வயல்வெளியைக்காட்டிலும் வியாபாரமே மேலாக தெரிந்தது . இதனால் வயல்வெளியை கவனிக்க ஆளில்லாமல் , நிலங்களை உழவனுக்கு தாரைவார்க்க வேண்டியதாயிற்று .
இன்றும்கூட நம்மவர்களுக்கு பக்கத்து ஊர்களில் தென்னந்தோப்புகள் உள்ளது . அங்கும் அதே கதைதான் . தோட்டக்காரனிடம் ஒப்படைத்துவிட்டு வருகிறோம் . அவர் தரும் தேங்காய்தான் கணக்கு . சில சமயங்களில் அதுவும் இல்லை என்பார் .
எந்த தொழிலாக இருந்தாலும் அதில் நாமே நேரடியாக களத்தில் இறங்க வேண்டும் . தம்பி முஹம்மது இப்ராஹீம் பேட்டியை பார்கையில் இந்த விவசாயத்தில் அவரே நேரடியாக களத்தில் இறங்கி இருக்கிறார் . அதனால்தான் வெற்றி இவருக்கு சாத்தியமாயிற்று .
Re:... posted byVilack SMA (Hetang , Jiangmen , PRC)[23 November 2013] IP: 121.*.*.* China | Comment Reference Number: 31637
மாமாவின் கட்டுரை பசுமையான நினைவலைகள் . மத்திய காயல் பற்றி குறிப்பிட்டிருந்தார்கள் . இந்த பகுதியின் பெரும்பாலானவர்கள் தோல் வியாபாரிகள் . ஆனால் , தனது வாரிசுகளுக்கு , இந்த தொழில் பற்றிய முறையான தொழில்நுட்ப கல்வி அறிவை கொடுக்காததால் இந்த தொழில் நமதூர் மக்களிடம் தற்போது இல்லை . ஏதோ விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில், ஒன்றிரண்டு பேர் இந்த தொழில் செய்கின்றனர் .
கத்தீபு உமர் கம்பெனி , LMS கம்பெனி , M M கம்பெனி போன்றவைகள் நாட்டின் மிகப்பெரிய தோல் கம்பெனிகளுக்கு இணையாக நடத்தப்பட்டு வந்த கம்பெனிகள் . குடும்பங்கள் பெருகியதாலும் , வாரிசுகளுக்கு தொழில் நுட்ப அறிவை கொடுக்காததினாலும் இன்று இந்த கம்பெனிகள் அடியோடு அழிந்துவிட்டது.
எனது மாமனார் மர்ஹூம் S A ஆதம் ஹாஜி பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள் . அன்று , ஆதம் ஹாஜி வருகிறார் என்றால், பெண்கள் தெருவில் தலை காட்டவே மாட்டார்கள் . ஆனால் இன்றோ எல்லாம் தலைகீழ் . பெண்களை கண்டு ஆண்கள் ஒதுங்கும் நிலை .
மேலும் அன்று இருந்த ஊரின் பெரியவர்கள் , கண்ணியத்திற்கு உரியவர்கள் பலரையும் குறிப்பிட்டுள்ளீர்கள் . நன்றி .
8 கடை , .. பெயர் காரணம் சொல்லுங்க மாமா .
சங்கு ஊதுதல் ... ஒவ்வொரு நேரத்திற்கும் ஒவ்வொரு காரணம். நள்ளிரவு 1 மணி சங்கை பற்றி சொல்லவில்லையே .
Vilack SMA , ஹேதாங், ஜியான்க்மேன் , சீன மக்கள் குடியரசு .
Re:... posted byV. Syed Mohamed Ali (shiqiao ,Guangzhou)[21 November 2013] IP: 183.*.*.* China | Comment Reference Number: 31618
பல வருடங்களுக்குமுன் சென்னையில் நடந்தது . ஒரு ஓவிய கண் காட்சி . ஏகப்பட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது . ஓவியம் என்றால் , மனிதன் , விலங்கு , பறவை , மரங்கள் இவற்றின் உருவங்கள் , மலைகள் , நீர்வீழ்ச்சி , சந்திரன் சூரியன் அல்லது ஏதாவது பொருள்கள் எதையாவது வரைந்து இருக்க வேண்டும் . ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்ல வேண்டும் , தத்துவங்கள் பேச வேண்டும் . அல்லது ஏதாவது சம்பவங்கள் பற்றி ஓவியமாக வரைந்து இருக்க வேண்டும் .
பலவிதமான ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தது . எல்லோரும் ரசித்தார்கள் ஒரே ஒரு ஓவியத்தை தவிர . அந்த ஓவியம் ஏதோ குழந்தைகளின் கிறுக்கல் போல இருந்தது . எந்த ஒரு கதையையும் , தத்துவத்தையும் அந்த ஓவியத்தால் சொல்ல முடியவில்லை ஆனால் அந்த ஓவியத்தை ஒரு பழுத்த பெரியவர் மெய்மறந்து பார்த்துகொண்டிருந்தார் . என்னமா வரைஞ்சிருக்கான் பாரு என்று கமென்ட் வேறு .
இறுதியில் ஓவியர்களை பேட்டி கண்டார்கள் . ஒவ்வொருவரும் தமது ஓவியம் சொல்லும் தத்துவங்களை சொன்னார்கள் . இறுதியாக அந்த கிறுக்கல் ஓவியம் . ஆரம்ப பள்ளி செல்லும் சிறுவன் கையில் கிடைத்த பென்சிலை கொண்டு கிறுக்கி வைத்திருக்கிறான் . அதை அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அவனது உறவினர் , " சும்மாங்காட்டி " எடுத்து இங்கே வைத்துவிட்டார் . எல்லோரும் புறக்கணித்த அந்த கிறுக்கலை , அந்த பெரியவர் மட்டும் , அது சொல்லும் தத்துவம் என்னவென்றே தெரியாமல் ரசித்திருக்கிறார் .
படத்தை படமாக பார்த்தவருக்கு என்ன புரிந்ததோ என்று ஒரு கருத்தாளர் கேட்கிறார் . புரிந்து கொண்டு பார்பதற்கு இந்த படத்தில் அப்படி என்ன விசேசம் உள்ளது என்பதுதான் புரியாத புதிர் .
Vilack SMA , சீச்சியாவ் , குவாங்க்ஜோ , சீன மக்கள் குடியரசு .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross