Re:... posted byAbdul Cader S.H. (Jeddah)[10 November 2015] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42186
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்..
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பாவப் பிழைகள் அனைத்தையும் மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் சுவனபதியை கொடுதருள்வானக ஆமீன். அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவர்களும் பொறுமையுடன் இருந்து, மர்ஹூமா அவர்களின் மறுமை வாழ்விற்கு துஆ இறைஞ்சுவோமாக !!!
Re:... posted byAbdul Cader S.H. (Jeddah)[25 June 2015] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41164
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் !
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹுமா அவர்களின் அனைத்து நல்லறங்களை ஏற்று நல்லமல்கள் யாவற்றையும் கபூல் செய்து பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கியும் விசாலமாக்கியும் ஆக்கி வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.
அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்பு மருத்துவர் ஜாபர் அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் இப்பிரிவை தாங்கிடும் மனவலிமையும் தந்து 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக ! ஆமீன் !!
செய்தி: மஸ்ஜிதுல் மஃமூர் முத்தவல்லி ஹலீம் ஹாஜியின் சகோதரர் சென்னையில் காலமானார்! ஜூன் 24 புதன் அஸ்ருக்குப் பின் சென்னையில் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byAbdul Cader S.H. (Jeddah)[25 June 2015] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41163
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜஹூன்!
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹும் அவர்களின் அனைத்து நல்லறங்களை ஏற்று நல்லமல்கள் யாவற்றையும் கபூல் செய்து பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கியும் விசாலமாக்கியும் ஆக்கி வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.
அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்பு சகோதரர்கள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் இப்பிரிவை தாங்கிடும் மனவலிமையும் தந்து 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக !
ஆமீன் !!
Re:... posted byAbdul Cader S.H. (Jeddah)[25 May 2015] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40753
“இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்“
வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.
மர்ஹூம் அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்கள் மற்றும் என் நண்பர்கள் செ.இ. & யஹியா ஆகியோர்கள் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடித்து, அவர்களுக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்திடுவோமாக! ஆமீன்.
Re:...இன்னா லில்லாஹி.... posted byAshima Abdul Cader S.H. (Jeddah)[14 November 2014] IP: 37.*.*.* | Comment Reference Number: 38153
அன்பு சகோதரர் புஹாரி அவர்களின் திடீர் வாபத் செய்தி அறிந்து அதிர்ச்சிக்குள்ளானேன். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
கண்ணியமாக பழகக்கூடிய நல்ல பண்பாளர். நல்லதே பேசுவார்கள். உள்ளதைச் சொல்வார்கள். பிறருக்கு ஓடி ஓடி உதவி செய்வதில் முதன்மையானவர்.
சுகக்குறைவால் K.M.T. மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்த செய்தி அறிந்து, கடைசியாக சகோதரரிடம் கை அடக்க தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு, நானும் என் கணவரும் பேசிய வார்த்தைகள் இன்றும் எங்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது,
அவர்கள் மஃக்பிரதிர்க்காக படைத்தவனிடம் துஆ செய்து சபூர் செய்துக்கொண்டேன்.
அன்னாரது மனைவி, மக்கள் மற்றும் சகோதர சகோதரிகளுக்கும் என் சாலத்தினை தெரிவிப்பதுடன், சபூர் எனும் பொறுமையை கடை பிடித்து மர்ஹூம் அவர்களின் மறுமை வாழ்விற்காக துஆ கேட்போம்.
அல்லாஹ், அவர்கள் செய்த நல்ல செயல்களை கொண்டும், மறுமையில் நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து வைப்பானகவும்! ஆமீன். !!
1982- ல் நான் பம்பாயில் இருந்த போது அறிமுகமான மதிப்பிற்குரிய அருமை உடன் பிறவா சகோதரர் வா.வு. புகாரி அவர்களும், நானும் அரபு தேசம் வருவதற்காக நாங்கள் Telephone/Telex operator, institute - ல் பயின்று வந்ததுடன், பல ஏஜென்டிடம் அலைந்தோம். அதன் பின் நான் டெஹ்ரானிர்க்கும், அவர் ரியாதிற்கும் சென்று விட்டாலும் எங்கள் நட்பு தொடர்ந்தது. அதன் பிறகு 10 வருடங்களுக்கு பின் அவருடன் சிங்கப்பூர் மற்றும் பாங்காக் சென்று வரும் வாய்பையும் பெற்றேன்.
இனிமையாக பழகும் நல்ல பண்பாளர். செய்த காரியத்தை நடத்தி முடிப்பார். தம்பி எஸ்.கே.சாலிஹ் குறிப்பிட்டது போல், பல நல்ல காரியங்களை மவுனமாக செய்து முடித்திருக்கிறார்.
நான் ஊர் வரும் பொழுதெல்லாம் என்னையும் வறியவர் வீட்டிற்க்கு அழைத்து சென்று அவ்வீட்டு தேவை அறிந்து உடன் அங்கு வைத்து மனு எழுதி ஜமாஅத் கை எழுத்தும் வாங்கி என்னிடம் தந்து அனுப்பி "வீட்டு நிலைமையை பார்த்து விட்டிங்க மன்றத்தில் எடுத்து சொல்லி உடன் உதவி செய்யுங்க" என்று தன் சொந்த சகோதரிக்கு கேட்பது போல் விரும்பி கேட்டுக்கொள்வார். அதன் படி மன்றத்தால் அவர் மனு மூலம் நிறைய ஏழைகள் பயன் பெற்றனர்.
அது மற்றுமா, என் குடும்பத்தில் ஒருவனாக தன்னை இணைத்துக் கொண்டு, என் மாமா (மர்ஹூம்) பாளையம் அஹமது சுலைமான் அவர்கள் விபத்துக்குள்ளாகி உயிருக்கு போராடிய நேரத்தில் எங்களோடு கடைசி வரை, இருந்து நல்லடக்கம் செய்யும் வரை ஒன்றாக உறுதுணையாக இருந்து எங்களுக்கு ஆறுதல் தந்தவர்.
சிலோன் அகதியாக வந்து எங்கள் குடும்பத்து உறுப்பினர்களாக பழகிய அந்த அகதி குடும்பத்திற்கு ஓடோடி வந்து பல முறை, பலரிடம் பெற்று உதவி செய்தவர். அவர்கள் மீண்டும் சிலோன் செல்ல வழி வகை செய்தவர். அவர்களுக்கு இந்த தகவலை சொன்னதும் தன் சொந்த சகோதரனை இழந்தது போல் பதறி துடித்தார்கள்.
என் வீட்டிற்க்கு வந்து மனு எழுதும் பழக்கம் கொண்டவர் எங்கள் சுற்று வட்டாரத்திற்க்கே உதவியாக இருந்தவர். இன்னும் எத்தனையோ அடுக்கலாம், அப்படி பட்ட நல்ல மனம் படைத்த, தயாள குணம் கொண்டவர். எங்கள் அம்பலமரைக்காயர் தெருவை சார்ந்த சகோதரர் இன்று நம்முடன் இல்லையே என்று நினைக்கும் போது எங்கள் இதயம் விம்முகின்றது.
என்ன செய்வது? இறைவனின் கட்டளைக்கு நாம் கட்டுப்பட்டுத்தானே ஆக வேண்டும், என சபூர் செய்து கொண்டோம். இது போல் குடும்பத்து உறுப்பினர்களும், சபூர் எனும் பொறுமையை கடை பிடித்து மர்ஹூம் அவர்களுக்காக துஆ இறைஞ்சுவமாக!
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகள் அனைத்தையும் மன்னித்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனும் அழகிய பூங்காவனத்தில் இடம் அளித்து நல்லடியார்களுடன் அமர வைப்பானாக! ஆமீன்.!!
குடும்பத்தினர் யாவருக்கும் எங்களின் நற்சலாம்.
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்....
மறக்க இயலா மனதுடன்...
அப்துல்காதர் S.H. மற்றும் குடும்பத்தார்
அல்-நயீம், ஜித்தா.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross